search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Hyundai Venue facelift"

    ஹூண்டாய் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய வென்யூ பேஸ்லிப்ட் மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய வென்யூ பேஸ்லிப்ட் மாடலும் மூன்று வித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கும்.


    ஹூண்டாய் இந்தியா நிறுவனம் வென்யூ பேஸ்லிப்ட் மாடலை ஜூன் 16 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது. அறிமுக நிகழ்வுக்கு முன் இந்த மாடலுக்கான முன்பதிவை சில விற்பனையாளர்கள் துவங்கி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இவை விற்பனையாளர்கள் தரப்பில் மேற்கொள்ளப்படுபவை ஆகும். ஹூண்டாய் தரப்பில் புதிய வென்யூ பேஸ்லிப்ட் மாடலுக்கான முன்பதிவு பற்றி இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை. 

    2022 ஹூண்டாய் வென்யூ பேஸ்லிப்ட் மாடலின் வெளிப்புற டிசைன் மாற்றப்பட்டு புது தோற்றம் கொண்டிருக்கும் என இதுவரை வெளியாகி இருக்கும் ஸ்பை படங்களில் தெரியவந்துள்ளது. அதன்படி இந்த மாடலில் குரோம் இன்சர்ட்கள் கொண்ட புதிய கிரில், முன்புறம் மற்றும் பின்புறம் புது பம்ப்பர்கள், புதிய அலாய் வீல்கள், ராப் அரவுண்ட் எல்.இ.டி. டெயில் லைட்கள், சில்வர் ஸ்கிட் பிலேட்கள் மற்றும் காண்டிராஸ்ட் கலர் ரூஃப் ரெயில்கள் வழங்கப்படுகின்றன.

     2022 ஹூண்டாய் வென்யூ

    புதிய ஹூண்டாய் பேஸ்லிப்ட் மாடலின் உள்புறம் பற்றி இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. எனினும், இந்த மாடலில் புது வகை இருக்கைகள், ரிவைஸ்டு டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமண்ட் கிளஸ்டர், 4 ஸ்போக் ஸ்டீரிங் வீல் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. 

    புதிய வென்யூ பேஸ்லிப்ட் மாடலில் தற்போதைய வேரியண்டில் உள்ளதை போன்றே 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின், 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இத்துடன் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின், 6 ஸ்பீடு மேனுவல், iMT மற்றும் DCT டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இரு பெட்ரோல் என்ஜின்களுடன் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்படலாம். 
    ×