என் மலர்
நீங்கள் தேடியது "கறிக்கடைகாரர்"
ரூ.1 லட்சம் தடைசெய்யப்பட்ட புகையிலை பதுக்கிய கறிக்கடைகாரர் கைது செய்யப்பட்டார்.
அருப்புக்கோட்டை
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை எஸ்.பி.கே. பள்ளி சாலையில் கறி கடை வைத்திருப்பவர் ஜெயப்பிரகாஷ் (45). இவர் தமிழக அரசால் தடை செய்யப் பட்ட புகையிலை பாக்கெட்டுகளை பதுக்கி வைத்து கடைகளுக்கு விற்று வருவதாக அருப்புக்கோட்டை டவுன் போலீசுக்கு தகவல் வந்தது.
அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், தலைமை காவலர் அன்பழகன் ஆகியோர் பந்தல்குடி சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, ஜெயப்பிரகாஷ் இரு சக்கர வாகனத்தில் 24 கிலோ எடையுள்ள தடை செய்யப்பட்ட புகையிலை மூட்டையை எடுத்து சென்றார்.
வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார் அதனை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ. 1 லட்சம் ஆகும். மேலும் கறிக்கடைகாரர் ஜெயபிரகாஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நேற்று திருச்சுழி சாலையில் ஜெராக்ஸ் கடையில் மூடை மூடையாக தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் அருப்புக்கோட்டையில் தொடர்ந்து தடைசெய்யப்பட்ட புகையிலை பறிமுதல் செய்த நடவடிக்கை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.