என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டிஜிபி ரவி"

    • பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரியும் தன்மை கொண்ட பொருட்கள் அங்கு இல்லை என ஆய்வில் தெரியவந்தது.
    • மின் ஒயரில் கசிவு ஏற்பட்டே தீ விபத்து நடந்துள்ளது என தெரிவித்துள்ளார்.

    ஏ.டி.ஜி.பி. கல்பனா நாயக் அறையில் தீ விபத்து சம்பவத்தில் நாசவேலை எதுவும் இல்லை என டி.ஜி.பி. விளக்கம் அளித்துள்ளார்.

    மேலும் கூறிய அவர், "தீ விபத்து நடந்த அன்றே வழக்குப்பதிவு செய்து தடயவியல், மின்சார நிபுணர்கள் விரிவான ஆய்வு நடத்தினர்.

    பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரியும் தன்மை கொண்ட பொருட்கள் அங்கு இல்லை என ஆய்வில் தெரியவந்தது.

    மின் ஒயரில் கசிவு ஏற்பட்டே தீ விபத்து நடந்துள்ளது என தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ''சென்னை எழும்பூரில் உள்ள தமிழ்நாடு சீருடைப் சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியத்தின் (TNUSRB) கூடுதல் காவல் துறை இயக்குநர் மற்றும் உறுப்பினரான கல்பனா நாயக் ஐபிஎஸ் அவர்களிடமிருந்து 14.08.2024 அன்று தமிழ்நாடு காவல் துறை இயக்குநர்/காவல் படைத் தலைவர் மற்றும் சென்னை நகர காவல் ஆணையர் ஆகியோருக்கு ஒரு கடிதம் பெறப்பட்டது.

    விரிவான விசாரணை

    அதில் சென்னை எழும்பூரில் உள்ள USRB அலுவலகத்தில் உள்ள தனது அறையில் 28.07.2024 அன்று தீ விபத்து ஏற்பட்டதாகவும், இந்த சம்பவத்தில் சட்டவிரோத செயல் மற்றும் நாசவேலை நடந்ததாக சந்தேகிப்பதாகவும், தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் அவர் கூறினார்.இதைத் தொடர்ந்து, இந்த விவகாரம் குறித்து முழுமையான விசாரணை நடத்தக் கோரி, கடிதம் உடனடியாக சென்னை பெருநகர காவல் ஆணையருக்கு அனுப்பப்பட்டது.

    தீ விபத்து மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட நிகழ்வுகள் தொடர்பான உண்மைகள் மற்றும் தெளிவுகள்

    இது தொடர்பாக, சம்பவம் நடந்த அதே நாளில் F2 எழும்பூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உடனடியாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது. திருவல்லிக்கேணி துணை காவல் ஆணையர், தடயவியல் நிபுணர்கள், மின்சார வாரியம் (TANGEDCO), தமிழ்நாடு காவல் வீட்டுவசதி கழகம் மற்றும் ப்ளூ ஸ்டார் நிறுவனத்தின் தொழில்நுட்ப நிபுணர்களுடன் சம்பவ இடத்தைப் பார்வையிட்டு விரிவான விசாரணை நடத்தினார்.

    நாசவேலை காரணமில்லை

    இதையடுத்து, வழக்கு சென்னை நகர மத்திய குற்றப்பிரிவுக்கு (CCB) மாற்றப்பட்டது, மேலும் கூடுதல் DCP, CCB-I விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். விரிவான விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையின்போது 31 சாட்சிகளிடமிருந்து வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டன, மேலும் தீ விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய தடயவியல், தீயணைப்பு சேவைகள் மற்றும் மின் துறைகளைச் சேர்ந்த நிபுணர்களுடன் கலந்தாலோசிக்கப்பட்டது.

    தற்போது, நிபுணர் அறிக்கைகள் பெறப்பட்டுள்ளன. செப்பு கம்பிகளில் ஷார்ட் சர்க்யூட் இருப்பதற்கான சான்றுகள் காணப்பட்டதாக தடயவியல் நிபுணர்களின் அறிக்கை தெரிவித்துள்ளது. கூடுதலாக, தடயவியல் அறிக்கையில் மெல்லிய அடுக்கு குரோமடோகிராபி மற்றும் வாயு குரோமடோகிராபி அடிப்படையில், பெட்ரோல், டீசல் அல்லது வேறு ஏதேனும் எரியக்கூடிய பொருட்கள் அங்கு கண்டறியப்படவில்லை. அவை இந்த தீ விபத்தில் சம்பந்தப்படவில்லை என்று கூறியுள்ளது.

    பெண் ஏடிஜிபி உயிருக்கு அச்சுறுத்தல் இல்லை. எனவே, இதுவரை நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் இந்த தீ விபத்தில் வேண்டுமென்றே தீ வைப்பு எதுவும் இல்லை என்பது தெளிவாகிறது. கல்பனா நாயக்கின் உயிருக்கு எந்தவொரு திட்டமிடப்பட்ட அச்சுறுத்தலும் இல்லை.

    இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

    ஓய்வுபெறுவதால் காவல் சீருடை அணிய முடியவில்லை என்பது மிகவும் வருத்தம் என்று தாம்பரம் டிஜிபி ரவி கூறினார்.
    தாம்பரம் காவல் ஆணையர் டி.ஜி.பி. ரவி இன்றுடன் தனது பணியில் இருந்து ஓய்வு பெற்றார்.

    இந்நிலையில், பணி ஓய்வு பிரிவு உபசார விழாவில் தாம்பரம் காவல் ஆணையர் ரவி கூறியதாவது:-

    மக்களின் பணிதான் முக்கியம். மற்றவர்களின் நலனுக்காக வாழ வேண்டும். நாம் அதிகாரிகள், அலுவலர்கள் இல்லை. மக்கள்தான் நமக்கு எஜமானர்கள்.

    அரசாங்கம் வாய்ப்பு கொடுத்த போதெல்லாம் நான் மக்களுக்கு சேவையாற்றி உள்ளேன்.

    காவலர்கள் உடல்நிலையை நன்றாக வைத்திருந்தால்தான், மக்கள் சேவையை சிறப்பாக செய்ய முடியும்.

    தவறு யார் செய்தாலும் தவறுதான். சட்டம்- ஒழுங்கு பிரச்னையை கையாளும்போது கவனமாக இருக்க வேண்டும்.

    வாழ்க்கை ஒரு சக்கரம். ஓய்வுபெறுவதால் காவல் சீருடை அணிய முடியவில்லை என்பது மிகவும் வருத்தம்.

    காவல் பணியைதான் முடிக்கிறேன். மக்கள் பணி தொடரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதையும் படியுங்கள்.. பாராளுமன்ற மேல்சபை தேர்தல்- மனுதாக்கல் இன்றுடன் நிறைவு
    ×