search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டாப் கன் மேவ்ரிக் விமர்சனம்"

    ஜோசப் கொசின்ஸ்கி இயக்கத்தில் டாம் க்ரூஸ், ஜெனிபர் கான்னெலி நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘டாப் கன் மேவ்ரிக்’ படத்தின் விமர்சனம்.
    அமெரிக்க கடற்படையில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பணியில் இருக்கும் விமானியான டாம் க்ரூஸ், ஒரு அதிரடி தாக்குதல் திட்டத்திற்காக இளம் திறமைசாலிகள் அடங்கிய போர் விமானிகள் குழுவுக்கு பயிற்சி அளிக்க அழைக்கப்படுகிறார். அங்கு அவரது நெருங்கிய நண்பரான மறைந்த கூஸ்--ன் மகன் பிராட்லி பிராட்ஷாவை (மைல்ஸ் டெல்லர்) சந்திக்கிறார். 

    தன் நண்பரை போல் பிராட்லிக்கும் எதுவும் ஆக கூடாது என்பதற்காக தாக்குதல் திட்டத்திற்கு அவரை சேர்க்க டாம் க்ரூஸ் தடுமாறுகிறார். இந்த சூழ்நிலையில் டாக் க்ரூஸ் எதிரிகளுடான தாக்குதலை வெற்றிகரமாக நடத்தினாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    விமர்சனம்

    டோனி ஸ்கார் இயக்கத்தில், டாம் க்ரூஸ், நடித்த டாப் கன் திரைப்படம் 1986ம் ஆண்டில் வெளிவந்தது. அப்படத்தின் தொடர்ச்சியாக 36 ஆண்டுகள் கழித்து 'டாப் கன் - மேவ்ரிக்' என்ற பெயரில் வெளியாகியுள்ளது. ஆனால், இப்படத்தை ஜோசப் கொசின்ஸ்கி இயக்கி இருக்கிறார்.

    டாம் க்ரூஸ் படங்களில் ரசிகர்கள் எதிர்ப்பார்க்கும் ஆக்‌ஷன் காட்சிகள் இந்த படத்தில் இல்லை என்றாலும், விமான சாகங்கள் மூலம் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். ஒரு பக்கம் ஆக்‌ஷனின் ஸ்கோர் செய்தாலும், மறுபக்கம் செண்டிமெண்ட் காட்சிகளிலும், ரொமான்ஸ் காட்சிகளிலும் ஸ்கோர் செய்திருக்கிறார். மைல்ஸ் டெல்லர், ஜெனிபர் கான்னெல்லி, ஜான் ஹாம், க்ளென் பவல், லூயிஸ் புல்மேன், எட் ஹாரிஸ், வால் கில்மர், மோனிகா பார்பரோ ஆகியோர் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

    விமர்சனம்

    ஹாலிவுட் படங்களுக்கு குண்டான மெதுவாக தொடங்கும் திரைக்கதை, போக போக வேகம் எடுக்கிறது. கிராபிக்ஸ் காட்சிகள், விமான சாகச காட்சிகள் அனைத்தும் ரசிக்கும்படி உள்ளது. குறிப்பாக, மலை மீது விமானம் ஏறும் போது, பார்ப்பவர்கள் அதை உணரும் விதத்தில் படமாக்கியது சிறப்பு. 

    கிளாடியோ மிராண்டாவின் ஒளிப்பதிவும் ஹரோல்ட் ஃபால்டர்மேயர், லேடி காகா, ஹான்ஸ் ஜிம்மர், லோர்ன் பால்ஃப் ஆகியோரின் இசையும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

    மொத்தத்தில் ‘டாப் கன் மேவ்ரிக்’ டாப்.
    ×