என் மலர்
முகப்பு » tag 331075
நீங்கள் தேடியது "Hyundai Creta N Line"
ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய கிரெட்டா N லைன் மாடலுக்கான டீசர் வெளியிடப்பட்டு இருக்கிறது. இதன் இந்திய வெளியீடு பற்றி விரைவில் அறிவிக்கப்படலாம்.
ஹூண்டாய் நிறுவனம் சர்வதேச சந்தையில் தனது கிரெட்டா N மாடலை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இதனை உறுதிப்படுத்தும் டீசரையும் ஹூண்டாய் வெளியிட்டு உஎள்ளது. புதிய ஹூண்டாய் கிரெட்டா N லைன் மாடலுக்கான டீசர் படங்கள் ஹூண்டாய் பிரேசில் சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டு இருக்கிறது. இதன் இந்திய வெளியீடு பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை.
சர்வதேச சந்தையில் ஹூண்டாய் நிறுவனத்தின் N லைன் வேரியண்ட்கள்: i10, i20, i30, எலாண்ட்ரா, கோனா மற்றும் டக்சன் போன்ற மாடல்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. எனினும், இந்தியாவில் ஹூண்டாய் i20 ஹேச்பேக் மாடலில் மட்டுமே N லைன் வேரியண்ட் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஹூண்டாய் வென்யூ N லைன் வேரியண்ட் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹூண்டாய் கிரெட்டா N லைன் மாடலில் i20 N லைன் ஹேச்பேக் மாடலில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்களுடனேயே அறிமுகமாகும் என கூறப்படுகிறது. அதன்படி முன்புற கிரில் மீது N லைன் பேட்ஜ், காண்டிராஸ்ட் ரெட் நிறம் மற்றும் ஸ்போர்ட் டிசைன் எலிமண்ட்கள் வழங்கப்படலாம்.
ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய கிரெட்டா N லைன் மாடல் சோதனை துவங்கி நடைபெற்று வருகிறது. இதன் சர்வதேச வெளியீடு ஜூன் மாதம் நடைபெற இருக்கிறது.
ஹூண்டாய் நிறுவனம் சர்வதேச சந்தையில் தனது N சீரிஸ் மாடல்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்தி வருகிறது. அந்த வரிசையில் இரண்டாவது N லைன் மாடலாக வென்யூ N லைன் காரை வரும் வாரங்களில் அறிமுகம் செய்ய இருக்கிறது. ஹூண்டாய் வென்யூ N மாடலுடன், கிரெட்டா N லைன் மாடலும் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், புதிய கிரெட்டா N லைன் மாடல் பிரீ-ப்ரோடக்ஷன் மாடல் ஸ்பை படங்கள் வெளியாகி உள்ளது.
கடந்த வாரம் கிரெட்டா N லைன் மாடல் உருவாக்கப்பட்டு வருவதாகவும், இதன் விற்பனை முதற்கட்டமாக தென் அமெரிக்காவில் துவங்கும் என ஹூண்டாய் நிறுவனம் அறிவித்து இருந்தது. தற்போது வெளியாகி இருக்கும் ஸ்பை படங்களில் கிரெட்டா N லைன் பிரீ-ஃபேஸ்லிப்ட் மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதில் அகலமான முன்புற கிரில், கிரில் இன்சர்ட்களில் டார்க்
க்ரோம் செய்யப்பட்டு உள்ளது.
Photo Courtesy: ShortsCar
பக்கவாட்டுகளில் கிரெட்டா N லைன் மாடல் ஸ்டாண்டர்டு எஸ்.யு.வி. போன்றே காட்சியளிக்கிறது. எனினும், அலாய் வீல் டிசைன், வித்தியாசமான ஸ்டைலிங் கொண்ட கிளாடிங் மற்றும் க்ரோம் இன்சர்ட்கள் உள்ளன. பின்புறம் வித்தியாசமான பம்ப்பர், ஃபௌக்ஸ் டிப்யுசர் தோற்றம் கொண்டிருக்கிறது.
தென் அமெரிக்க சந்தையில் கிரெட்டா மாடல் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் அல்லது 2.0 லிட்டர் NA பெட்ரோல் என்ஜின் கொண்டிருக்கும் என தெரிகிறது. கிரெட்டா N மாடலில் 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் கொண்டிருக்கும் என்றே கூறப்படுகிறது.
×
X