என் மலர்
நீங்கள் தேடியது "பெண் உள்பட 2 பேர் தற்கொலை"
- குடும்ப பிரச்சினை மற்றும் மதுப்பழக்கத்தால் பெண் உள்பட 2பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
- புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தேனி:
தேனி மாவட்டம் கூடலூர் 14வது வார்டு ரைஸ்மில் தெருைவ சேர்ந்த முருகன் மனைவி ராஜேஸ்வரி (வயது35). இவர் கேரளாவில் கூலி வேலை பார்த்து வந்தார். இவருக்கு ஆஸ்துமா நோய் இருந்ததால் அவ்வப்போது கம்பம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது கணவர் கொடுத்த புகாரின் பேரில் கூடலூர் தெற்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ராயப்பன்பட்டி அருகில் உள்ள காமயகவுண்ட ன்பட்டியை சேர்ந்த ரமேஷ் கண்ணன் மகன் முகிலன் (25). இவரது தாய் இறந்து விட்டதால் தந்தை 2-வது திருமணம் செய்து கொண்டு திருப்பூரில் வசித்து வருகிறார். முகிலன் தனது தாத்தா பராமரிப்பில் வளர்ந்து வந்தார். மது பழக்கத்துக்கு அடிமையானதால் அவரை கண்டித்து வந்தார்.
இந்நிலையில் முகிலன் தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். ராயப்பன்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.