என் மலர்
நீங்கள் தேடியது "உப்பள தொழிலாளி கொலை"
ஆத்தூர் அருகே உப்பள தொழிலாளி கொலையில் 5 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆத்தூர்:
தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள தலைவன் வடலி வடக்கு தெருவை சேர்ந்தவர் சண்முகராஜ் ( வயது 45), உப்பளத்தொழிலாளி.
இவர் நேற்று மாலை பொருட்கள் வாங்குவதற்காக மோட்டார் சைக்கிளில் ஆத்தூர் சென்றார். அப்போது ஆரையூர் கல்வெட்டி பகுதியில் ஒரு கும்பல் சண்முகராஜை வழி மறித்து அரிவாளால் வெட்டி கொலை செய்து விட்டு தப்பி ஓடியது.
சம்பவ இடத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் நேரில் சென்று விசாரணை நடத்தினார். கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.
கடந்த 2 வருடங்களுக்கு முன்பு தலைவன் வடலிக்கு செல்லும் வழியில் கல்லூரி மாணவர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். அவரது நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது.
இந்நிலையில் சண்முகராஜ் கொலை செய்யப்பட்டது அப்பகுதியில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. மாணவர் கொலைக்கு பழிக்குப்பழியாக சண்முகராஜ் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு காரணங்கள் எதுவும் உள்ளதா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே இந்த கொலை தொடர்பாக 5 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.