search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Yarn"

    வரும் வாரத்தில், பாவு நூல்கள் இன்றி, தறிகள் இயக்கம் மேலும் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூர், கோவை மாவட்டங்களில் 2 லட்சத்துக்கும் அதிகமான விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. இவற்றின் மூலம் தினசரி ஒரு கோடி மீட்டர் காடா துணிகள் உற்பத்தி ஆகின்றன. சமீப நாட்களாக நூல் விலை ஏற்றம் துணி உற்பத்தியாளர்களை பெரிதும் பாதித்து வருகிறது.

    பஞ்சு, நூல் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்தவும், ஏற்றுமதிக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் தொழில் துறையினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதற்கிடையில் நூல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதை கண்டித்து, கடந்த 22-ந் தேதி முதல் ஜூன் 5-ந்தேதி வரை, உற்பத்தி நிறுத்தப் போராட்டத்தை ஜவுளி உற்பத்தியாளர்கள் அறிவித்தனர்.

    போராட்டத்தை தொடர்ந்து தினசரி 20 கோடி ரூபாய் மதிப்பிலான உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜவுளி உற்பத்தியாளர்களின் இந்த போராட்டம் காரணமாக, விசைத்தறி இயக்கம் பாதிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து விசைத்தறியாளர்கள் கூறுகையில்:

    ஜவுளி உற்பத்தியாளர் மூலம் பாவு நூல்கள் பெற்று கூலிக்கு நெசவு செய்து வருகிறோம். நூல் விலை உயர்வை கண்டித்து ஜவுளி உற்பத்தியாளர்கள் உற்பத்தி நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், பாவு நூல் சப்ளை நிறுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே வழங்கப்பட்ட பாவு நூல்கள், ஓரிரு தினங்களுக்கு வரும். உற்பத்தி நிறுத்த போராட்டத்தால், திருப்பூர் மாவட்டத்தில் 30 சதவீதத்துக்கும் மேல் தறிகள் நின்றுள்ளன.

    வரும் வாரத்தில், பாவு நூல்கள் இன்றி, தறிகள் இயக்கம் மேலும் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. இதனால் உற்பத்தி பாதிக்கப்படுவதுடன், விசைத்தறி சார்ந்த தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் உள்ளது. மத்திய, மாநில அரசுகள், மவுனம் சாதிக்காமல், தொழில்துறையின் பிரச்சினைகளை களைய முன்வர வேண்டும் என்றனர்.

    ஸ்திரமில்லாத நூல் விலை, பின்னலாடை உற்பத்தி சங்கிலியில் உள்ள அனைத்துவகை நிறுவனங்களையும் பாதிக்கச் செய்துவருகிறது.

    திருப்பூர்:

    நடப்பு சீசனில் பருத்தி பஞ்சு விலை கட்டுப்பாடின்றி உயர்ந்து கொண்டே செல்கிறது. ஒரு கேண்டி (356 கிலோ) பஞ்சு விலை, வரலாறு காணாத வகையில் ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாயை எட்டியுள்ளது. பஞ்சு விலை உயர்வுக்கு ஏற்ப தமிழக நூற்பாலைகள் கடந்த 18 மாதங்களாக நூல் விலையை தொடர்ந்து உயர்த்திவருகின்றன.

    வழக்கமாக மாதம் 5 முதல் 10 ரூபாய் உயர்த்தும் நூற்பாலைகள்தற்போது தடாலடியாக மாதம் 30 முதல் 40 ரூபாய் வரை நூல் விலையை உயர்த்தி விடுகின்றன. கடந்த ஏப்ரல் மாதம் கிலோவுக்கு 30 ரூபாய், இம்மாதம் கிலோவுக்கு 40 ரூபாய் என இரண்டே மாதங்களில் ஒசைரி நூல் விலை கிலோவுக்கு 70 ரூபாய் உயர்ந்தது.

    அபரிமித நூல் விலையால், திருப்பூர் நிறுவனங்களின் பின்னலாடை உற்பத்தி செலவினம் உயர்ந்துள்ளது. குறு, சிறு நிறுவனங்கள்,நூல் கொள்முதலுக்கு போதிய நிலையின்றி தவிக்கின்றன.

    பல நிறுவனங்கள் வெளிமாநில, வெளிநாட்டு வர்த்தகரிடமிருந்து புதிய ஆர்டர் பெறமுடியாமலும், பெறப்பட்ட ஆர்டர் மீது ஆடை தயாரிக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. இம்மாதம் உயர்த்தப்பட்ட கிலோவுக்கு 40 ரூபாய் நூல் விலையை நூற்பாலைகள் வாபஸ் பெறவேண்டும் என திருப்பூர் பின்னலாடை துறையினர் குரல் எழுப்பி வருகின்றனர்.

    பஞ்சு விலை உச்சத்தில் உள்ளதால் நூல் விலை குறைவது சந்தேகமாகவே உள்ளது.மாதம்தோறும் 1-ந் தேதி, தமிழக நூற்பாலைகள், புதிய நூல் விலை நிர்ணயித்து வெளியிடுகின்றன. நூல் விலை மேலும் உயரலாம் என்கிற தகவல்கள் பரவுகின்றன.

    நூற்பாலைகளின் ஜூன் மாதம் நூல் விலை நிலவரம் எப்படியிருக்குமோ என்கிற கவலை பின்னலாடை துறையினரை தொற்றிக் கொண்டுள்ளது. ஸ்திரமில்லாத நூல் விலை, பின்னலாடை உற்பத்தி சங்கிலியில் உள்ள அனைத்துவகை நிறுவனங்களையும் பாதிக்கச் செய்து வருகிறது. இதே நிலை தொடர்ந்தால், வெளிநாட்டு ஆர்டர்கள் கைநழுவி, நிரந்தரமாக போட்டி நாடுகளை நோக்கி சென்றுவிடும்.

    நெருக்கடியான இந்த சூழலை உணர்ந்து தமிழக நூற்பாலைகள், நூல் விலையை கட்டுப்பாட்டில் வைக்கவேண்டும். ஜூன் மாதம் நூல் விலையை குறைக்க வேண்டும் என்பது, பின்னலாடை துறையினரின் எதிர்பார்ப்பாக உள்ளது. ஜூன் மாதம் நூல் விலை நிலவரம் எப்படியிருக்குமோ என்கிற கவலை பின்னலாடை துறையினரை தொற்றிக் கொண்டுள்ளது.

    ×