search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பி.எம்.டபிள்யூ. M50 ஜாரெ எடிஷன்"

    பி.எம்.டபிள்யூ. நிறுவனம் தனது M பிரிவின் 50 ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு புதிதாக ஸ்பெஷல் எடிஷன் மாடல்களை அறிமுகம் செய்து இருக்கிறது.

    பி.எம்.டபிள்யூ. நிறுவனத்தின் 50 ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு M3 மற்றும் M4 கார்களின் M50 ஜாரெ எடிஷன் மாடல்களை அறிமுகம் செய்து இருக்கிறது. உயர் ரக ஸ்போர்ட்ஸ் கார் மாடல்களில் பிரத்யேக அப்டேட்கள் செய்யப்பட்டு தேர்வு செய்யப்பட்ட நாடுகளில் மிக குறைந்த எண்ணிக்கையிலேயே விற்பனைக்கு வருகிறது. இது மட்டுமின்றி பி.எம்.டபிள்யூ. 1 சீரிஸ் மற்றும் 2 சீரிஸ் கிரான் கூப் மாடல்களையும் எடிஷன் கலர் விஷனில் அறிமுகம் செய்துள்ளது.

    புதிய ஸ்பெஷல் எடிஷன் M4 50 ஜாரெ எடிஷன் மாடல்கள் - சான் மரினோ புளூ, கார்பன் பிலாக், இமோலா ரெட், மேகோ புளூ மற்றும் ஹேட்ச் கிரே போன்ற நிறங்களில் கிடைக்கிறது. இத்துடன் முன்புறம் 19 இன்ச் M ஃபோர்ஜ்டு அலாய் வீல்கள், பின்புறம் 20 இன்ச் 2 ஸ்போக் டிசைன் கொண்ட வீல் வழங்கப்பட்டுள்ளது. முதல் முறையாக இந்த வீல்களை கோல்டு பிரான்ஸ் மேட் மற்றும் ஆர்பிட் மேட் பினிஷ் கொண்டுள்ளன.

     பி.எம்.டபிள்யூ. M50 ஜாரெ எடிஷன்

    உள்புறம் M4 ஜாரெ எடிஷன் ஸ்டாண்டர்டு M4 மாடலை தழுவி உருவாக்கப்பட்டு உள்ளது. எனினும், உள்புறங்களில் விசேஷமாக ஸ்பெஷல் எடிஷனை குறிக்கும் பேட்ஜிங் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த காரில் ஸ்டாண்டர்டு M ஸ்போர்ட் ஹெட்ரெஸ்ட், ஆப்ஷனல் கார்பன் பைபர் பக்கெட் முன்புற இருக்கைகள் உள்ளன. 

    M3 ஜாரெ ஸ்பெஷல் எடிஷன் கார் அமெரிக்கா மற்றும் கனடாவில் மட்டுமே விற்பனை செய்யப்பட இருக்கிறது. இந்த கார் மொத்தத்தில் 500 யூனிட்களே விற்பனை செய்யப்பட உள்ளன. பி.எம்.டபிள்யூ. M3 ஜாரெ எடிஷன் மாடல் ஐந்து பிரத்யேக நிறங்களில் கிடைக்கிறது. இந்த கார்- லைம்ராக் கிரே, சினிபார் ரெட், டெக்னோ வைலண்ட், ஃபயர் ஆரஞ்சு மற்றும் இண்டர்லகோஸ் புளூ ஷேட்களில் கிடைக்கிறது. 
    ×