என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பவர் டேபிள்"

    • 14 சதவீத தையல் கட்டண உயர்வு வழங்காமல் இழுத்தடித்து வருகிறது
    • 200க்கும் மேற்பட்ட பவர்டேபிள் நிறுவனங்கள் ஆடை தைத்து கொடுக்கின்றன.

    திருப்பூர் :

    'சைமா' மற்றும் பவர்டேபிள் உரிமையாளர் சங்கங்கள் பேச்சு நடத்தி கடந்த 2022 ஜூனில் கட்டண உயர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. ஒப்பந்தம் கையெழுத்தாகி 9 மாதமான நிலையில் அங்கேரிபாளையத்தை சேர்ந்த, ஆடை உற்பத்தி நிறுவனமோ இன்னும் முதல் ஆண்டுக்கான 14 சதவீத தையல் கட்டண உயர்வு வழங்காமல் இழுத்தடித்து வருகிறது.இதனால் அந்நிறுவனத்துக்கு ஆடை தைத்துக்கொடு ப்பதை நிறுத்தி காலவரையற்ற உற்பத்தி நிறுத்தத்தை தொடங்கி உள்ளது பவர்டேபிள் உரிமையாளர் சங்கம். இது குறித்து பவர்டேபிள் உரிமையாளர் சங்க நிர்வாகி கூறியதாவது:-

    அங்கேரிபாளையத்தில் இயங்கும் ஆடை உற்பத்தி நிறுவனத்துக்கு திருப்பூர், மணப்பாறை, குளித்தலை, புதுக்கோட்டை பகுதிகளை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட பவர்டேபிள் நிறுவனங்கள் ஆடை தைத்து கொடுக்கி ன்றன.மூலப்பொருள் விலை உயர்வு, எரிபொருள், மின் கட்டணம் உயர்வால் பவர்டேபிள் நிறுவனங்கள் பரிதவிக்கின்றன. மற்ற நிறுவனங்களெல்லாம், ஒப்பந்தப்படி கட்டண உயர்வு வழங்குகின்றன. அங்கேரிபாளையத்தை சேர்ந்த ஆடை நிறுவனம் மட்டும் தையல் கட்டண உயர்வு அளிக்காமல் இழுத்த டிக்கிறது.இதுகுறித்து 'சைமா' சங்கத்துக்கு மனு அனுப்பினோம். ஆனாலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    இதனால் அந்த ஒரு நிறுவனத்துக்கான ஆடை தயாரிப்பை முழுமையாக நிறுத்தி காலவரையற்ற போராட்டத்தை துவக்கியுள்ளோம். 'சைமா' சங்கம் தலையிட்டு பேச்சு நடத்தி கட்டண உயர்வை பெற்றுத்தர வேண்டும். அதுவரை உற்பத்தி நிறுத்தம் தொடரும். இவ்வாறு அவர் கூறினார்.

    • 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதிய கட்டண ஒப்பந்தம் ஏற்படுத்தப்படுகிறது.
    • பனியன் தையலுக்கு ஒரு டஜனுக்கான கட்டணம் ரூ.76.05 ரூபாயாக இருந்தது நாளை முதல் 81.37 ரூபாயாக உயர்கிறது.

    திருப்பூர் :

    உள்நாட்டு விற்பனை பனியன் மற்றும் ஆடைகள் உற்பத்தி செய்து கொடுக்கும் பவர் டேபிள் நிறுவனங்கள் திருப்பூரில் இயங்கி வருகின்றன. பிராண்டட் மற்றும் உள்நாட்டு விற்பனை ஆடைகள் உற்பத்தி நிறுவனங்களுக்கு ஜாப்ஒர்க் முறையில் உற்பத்தி செய்து கொடுக்கின்றனர்.ஒவ்வொரு 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதிய கட்டண ஒப்பந்தம் ஏற்படுத்தப்படுகிறது. அதன்படி கடந்த ஆண்டு ஜூன் 4-ந்தேதி புதிய ஒப்பந்தம் உருவாகியது.

    தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்க(சைமா) தலைவர் ஈஸ்வரன் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்படுத்தப்பட்டது.பனியன் பேக் பட்டி டிராயர், பேக்பட்டி டபுள் பாக்கெட் ரகங்களுக்கு தனித்தனியே கட்டண உயர்வு வழங்கப்பட்டுள்ளது. ஒப்பந்தப்படி முதல் ஆண்டுக்கு 17 சதவீதம் கட்டண உயர்வு வழங்கப்பட்டது.அடுத்து வரும் ஆண்டுகளுக்கு தலா 7 சதவீதம் வீதம் உயர்த்தி வழங்க வேண்டும். முதல் ஆண்டு நிறைவு பெற்ற நிலையில் நாளை 6-ந்தேதி முதல் நடைமுறை கட்டணத்தில் இருந்து 7 சதவீதம் உயர்த்தி வழங்க வேண்டுமென பவர்டேபிள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

    பனியன் தையலுக்கு ஒரு டஜனுக்கான கட்டணம் ரூ.76.05 ரூபாயாக இருந்தது நாளை முதல் 81.37 ரூபாயாக உயர்கிறது. பேக் பட்டி டிராயர் கட்டணம் ரூ.146.64 ஆக இருந்தது 157.02 ரூபாயாக உயர்கிறது. பேக் பட்டி டபுள் பாக்கெட் கட்டணம் 154.64 ரூபாயாக இருந்தது 165.46 ரூபாயாக உயர்வதாக பவர்டேபிள் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

    இது குறித்து பவர்டேபிள் உரிமையாளர்கள் சங்க செயலாளர் முருகேசன் கூறுகையில், கடந்த ஆண்டு ஜூன் 4ந்தேதி 4 ஆண்டுகளுக்கான கட்டண உயர்வு ஒப்பந்தம் ஏற்பட்டது. முதல் ஆண்டு நிறைவடைந்துள்ள நிலையில் 7 சதவீத கட்டண உயர்வு நாளை 6-ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது. சைமா உறுப்பினர் நிறுவனங்கள், புதிய கட்டணத்தை கணக்கிட்டு வழங்க வேண்டும். தொழிலாளர் சம்பளம், மின் கட்டணம் போன்ற செலவு அதிகரித்துள்ளதால் பவர் டேபிள் நிறுவனங்களுக்கான 7 சதவீத கட்டண உயர்வை 6-ந் தேதி முதல் கணக்கிட்டு வழங்க வேண்டும் என்றார். 

    பவர் டேபிள் உரிமையாளர் சங்க நிர்வாக குழு கூட்டம் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.

    திருப்பூர்:

    ஆடை தயாரிப்புக்கு தையல் கட்டண உயர்வு குறித்த ஒப்பந்தம் பவர் டேபிள் சங்க உரிமையாளர்கள் மற்றும் சைமா சங்க நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி முடிவு செய்யப்படுவது வழக்கம். கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28-ந் தேதி தொழிலாளர்களுக்கான கட்டண ஒப்பந்தம் அமைக்கப்பட்டது.

    அதன்படி முதல் ஆண்டு 19 சதவீதம், 2-வது ஆண்டு 5 சதவீதம், 3-ம் ஆண்டு, 4-ம் ஆண்டு தலா 4 சதவீதம் என ஒப்பந்தம் அமைக்கப்பட்டு பவர் டேபிள் உரிமையாளர்கள் தொழிலாளர்களுக்கு கூலி வழங்கி வருகின்றனர். ஆனால் சைமா சங்கம் மற்றும் பவர் டேபிள் உரிமையாளர் சங்கத்தினருடன் கூலி உயர்வு ஒப்பந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது.

    அதன்படி முதல் ஆண்டு 20 சதவீதம், 2-வது, 3-வது, 4-வது ஆண்டு தலா 10 சதவீதம் கூலி உயர்வு வழங்க வேண்டும் என்று பவர் டேபிள் உரிமையாளர் சங்கத்தினர் கோரிக்கை வைத்தனர். இதுவரை 8 கட்டமாக பேச்சுவார்த்தை நடத்தியும் இதுவரை ஒப்பந்தம் ஆகாமல் உள்ளது.

    இந்தநிலையில் பவர் டேபிள் உரிமையாளர் சங்க நிர்வாக குழு கூட்டம் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைவர் நந்தகோபால் தலைமை தாங்கினார். துணை தலைவர் நாகராஜ், செயலாளர் முருகேசன், துணை செயலாளர் பொன்சங்கர், பொருளாளர் சுந்தரம் மற்றும் 48 நிர்வாக குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

    தையல் கூலி உயர்வு குறித்து சைமாவுடன், 8 கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை. வருகிற 10-ந் தேதிக்குள் பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தம் ஏற்படுத்த வேண்டும். அவ்வாறு ஒப்பந்தம் ஏற்படவில்லை என்றால் 10-ந் தேதி முதல் பவர் டேபிள் உரிமையாளர் சங்கத்தினர் தானாகவே உற்பத்தி நிறுத்தம் செய்வது என்று முடிவு செய்யப்பட்டது.

    ×