என் மலர்
நீங்கள் தேடியது "Andhra woman"
- முதல் மனைவியின் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வீடியோவை கணவன் தனது செல்போனில் பார்த்துள்ளார்.
- இதைக் கண்ட இரண்டாவது மனைவி ஆத்திரத்தில் கணவனின் பிறப்புறுப்பை பிளேடால் அறுத்துள்ளார்.
அமராவதி:
ஆந்திரப்பிரதேசம் மாநிலம் என்டிஆர் மாவட்டம் முப்பலா கிராமத்தைச் சேர்ந்தவர் கோட்டா ஆனந்த்பாபு. கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 5 ஆண்டுக்கு முன் தனது முதல் மனைவியை விட்டு பிரிந்து வீரம்மா என்ற பெண்ணை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். ஆனந்த் பாபுவும் வீரம்மாவும் முப்பலா கிராமத்தில் கடந்த 5 மாதங்களாக வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று மாலை ஆனந்த்பாபு தனது முதல் மனைவி அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட ரீல்ஸ் வீடியோக்களைப் பார்த்து ரசித்துள்ளார்.
கணவன் ஆனந்த்பாபு தனது முதல் மனைவியின் இன்ஸ்டா ரீல்சை பார்த்து ரசிப்பதை கண்டு இரண்டாவது மனைவி வீரம்மா அதிர்ச்சி அடைந்தார்.
இதுதொடர்பாக வீரம்மா கணவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரம் அடைந்த வீரம்மா தனது கணவனின் பிறப்புறுப்பை பிளேடால் அறுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த ஆனந்த்பாபு அலறி துடித்தார்.
அவரது அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் ஆனந்த்பாபுவை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.
முதல் மனைவியின் இன்ஸ்டா ரீல்சை பார்த்த கணவரின் பிறப்புறுப்பை பிளேடால் அறுத்த இரண்டாவது மனைவியின் செயல் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- கட்டப்பட்டு வரும் தனது வீட்டிற்கு மின்சாதனப் பொருட்களுக்காக எதிர்பார்த்த பெண்ணுக்கு அதிர்ச்சி.
- காவல்துறைக்கு தகவல் அளித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
ஆந்திரப் பிரதேசத்தில் பெண் ஒருவரின் வீட்டிற்கு மனித உடல் பாகங்கள் கொண்ட பார்சல் வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அந்த பார்சலுடன் ரூ.1.3 கோடி கேட்டும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆந்திரா மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தின் உண்டி மண்டலத்தில் உள்ள யெண்டகண்டி கிராமத்தில் வசித்து வருபவர் சாகி துளசி. இவர் க்ஷத்ரிய சேவா சமிதியின் கட்டுமானத்தில் உள்ள தனது வீட்டிற்குப் மின்சாரப் பொருட்கள் பார்சலில் வரும் என எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்.
முன்னதாக அவர், க்ஷத்ரிய சேவா சமிதி அமைப்பிடம் நிதி உதவி கோரியுள்ளார். அப்போது அவருக்கு டைல்ஸ் ஓடுகள் வழங்கப்பட்டன. அதேபோல் இம்முறையும் மின் விளக்கு, மின் விசிறி போன்ற மின்சாதன பொருட்களுக்காக துளசி காத்துக் கொண்டிருந்தார்.
இந்நிலையில், துளசியின் வீட்டிற்கு பார்சல் ஒன்று வந்துள்ளது. அதில் மின்சாரப் பொருட்கள் இருக்கும் என்ற எதிர்பார்ப்பில் துளசி பார்சலை திறந்துள்ளார். ஆனால் அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அந்த பார்சலில் மின்சாரப் பொருட்களுக்குப் பதிலாக மனித உடல் பாகங்கள் இருந்தது.
மேலும், அந்த பார்சலில் ரூ.1.3 கோடி கேட்டு மிரட்டி பணம் பறிக்கும் கடிதம் ஒன்றும் இருந்துள்ளது. அதில், பணத்தை வழங்காவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த பார்சல் சம்பவம் துளசியையும் அவரது குடும்பத்தினரையும் பீதியில் ஆழ்த்தியது. உடனடியாக இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவம் இடத்திற்கு விரைந்த போலீசார் பார்சலை ஆய்வு செய்தனர். முதற்கட்ட விசாரணையில், பார்சலில் இருந்த மனித உடல் பாகங்கள் சுமார் 45 வயதுடைய நபருடையது எனவும், ஐந்து நாட்களுக்கு முன்னர் இறந்திருக்கலாம் எனவும் யூகிக்கப்பட்டது . பிறகு, சம்பந்தப்பட்ட உடல் பாகங்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.
மேற்கு கோதாவரி எஸ்பி அட்னான் நயீம் ஆஸ்மி சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகிறார். காணாமல் போன நபர்களின் புகார்கள் மூலம் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
மேலும், க்ஷத்ரிய சேவா சமிதியின் பிரதிநிதிகளையும் அழைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.