search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "BMW i4"

    பி.எம்.டபிள்யூ. நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் செடான் மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இந்த காரின் வினியோகம் விரைவில் துவங்க இருக்கிறது.


    பி.எம்.டபிள்யூ. நிறுவனம் இந்திய சந்தையில் தனது ஃபிளாக்‌ஷிப் iX எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. மற்றும் மினி கூப்பர் SE மாடல்களை அறிமுகம் செய்து விட்டது. இந்த வரிசையில் தற்போது i4 எலெக்ட்ரிக் செடான் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய பி.எம்.டபிள்யூ. i4 மாடல் விலை ரூ. 69 லட்சத்து 90 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 

     பி.எம்.டபிள்யூ. i4

    புதிய பி.எம்.டபிள்யூ. i4 எலெக்ட்ரிக் செடான் மாடல் 4 சீரிஸ் கிரான் கூப் மாடலை போன்றே உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதன் தோற்றத்தில் மட்டும் சிறு மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளது. இந்த காரின் உள்புறம் 14.9 இன்ச் டச் ஸ்கிரீன் கொண்ட இன்போடெயின்மண்ட் சிஸ்டம், 12.3 இன்ச் டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே என டூயல் ஸ்கிரீன் செட்-அப், i டிரைவ் 8 யு.ஐ. வழங்கப்பட்டு இருக்கிறது.

    பி.எம்.டபிள்யூ. i4 எலெக்ட்ரிக் காரில் 83.9 கிலோவாட் ஹவர் பேட்டரி மற்றும் எலெக்ட்ரிக் மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த யூனிட் 335 ஹெச்.பி. திறன், 430 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 5.7 நொடிகளில் எட்டிவிடும். மேலும் முழு சார்ஜ் செய்தால் 590 கிலோமீட்டர் ரேன்ஜ் வழங்குகிறது. 

    ×