என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Alwar Temple"

    ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் வருஷாபிஷேக விழா நடைபெற்றது.
    தென்திருப்பேரை:

    நவ திருப்பதி தலங்களில் 9-வது தலமான ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் 10 ஆண்டுகளுக்கு முன்பு வைகாசி மாதம் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் கும்பாபிஷேகம் நடை பெற்றது. 

    ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதம் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் வருஷாபிஷேகம் நடை பெறுவது வழக்கம். அதே போல் இந்த ஆண்டு நேற்று காலை 6 மணிக்கு விஸ்வ ரூபம், 8 மணிக்கு ஹோமம், 9.30 மணிக்கு பூர்ணாகுதி, 10 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட கலசங்கள் திருமஞ்சனம், 10.30 மணிக்கு திருவாரா தனம், திருமஞ்சனம் நடை பெற்றது.

    11 மணிக்கு நாலாயிர திவ்ய பிரபந்த கோஷ்டி நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. மாலை 5 மணிக்கு சாயரட்சை பின்னர் சுவாமி பொலிந்து நின்றபிரான், நம்மாழ்வார் வாகன குறட்டிற்கு எழுந்தருளி பொலிந்து நின்றபிரான் கருடவாகனத்திலும் நம்மாழ்வார் ஹம்ஸ வாகனத்திலும் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். 

    இந்நிகழ்ச்சியில் எம்பெருமானார் ஜீயர், நிர்வாக அதிகாரி அஜித், தக்கார் கோவல மணி கண்டன், முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் ராஜப்பா வெங்கடாச்சாரி உட்பட பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.
    ×