என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "RCBvLSG"

    • லக்னோ அணி 181 ரன்கள் குவித்தது.
    • ஆர்சிபி 153 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது.

    பெங்களூருவில் நேற்று நடைபெற்ற லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் ஆர்சிபி அணி 28 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. ஹோம் மைதானத்தில் ஆர்சிபி-க்கு இது 2-வது தோல்வியாகும். இதுவரை 4 போட்டிகளில் விளையாடி 3-ல் தோல்வியை சந்தித்துள்ளது.

    இந்த போட்டிக்குப்பின் ஆர்சிபி அணி கேப்டன் டு பிளிஸ்சிஸ் கூறியதாவது:-

    இரண்டு கேட்ச்களை தவற விட்டது, அதற்கான விலை (தோல்வி) எங்களுக்கு கிடைத்துவிட்டது. இரண்டும் தலை சிறந்த வீரர்கள், டி காக் 25-30 ரன்கள் இருக்கும்போது அவுட்டில் இருந்து தப்பித்தார். பூரன் 2 ரன்னில் தப்பினார். இதனால் கூடுதலாக 60-65 ரன்கள் கொடுக்க வேண்டியதாயிற்று. ஐபிஎல் கிரிக்கெட்டில் இதுபோன்ற தவறுகளுக்கு நீங்கள் விலை கொடுக்க வேண்டியிருக்கும்.

    மயங்க் யாதவ் தற்போது அணியில் அறிமுகம் ஆகியுள்ளார். நாங்கள் இதற்கு முன்னதாக அவரது பந்து வீச்சை எதிர்கொண்டது இல்லை. இதுபோன்ற வேகப்பந்துகள் வீசப்படும்போது அதை பழக்கப்படுத்திக் கொள்ள கொஞ்சம் நேரம் தேவை. ஆனால் கன்ட்ரோல் லெந்த் மற்றும் துல்லியம் ஆகியவற்றில் அவருடைய திறமை ஈர்க்க வைக்கிறது.

    பவர் பிளேயில் பந்து வீச்சு சிறப்பாக அமையவில்லை என்பதால் மேக்ஸ்வெல் பந்து வீச அழைக்கப்பட்டார். அவர் கட்டுப்படுத்தினார். டெத் ஓவர் சற்று மகிழ்ச்சி அளித்தது. இரண்டு பேட்ஸ்மேன்கள் சிறப்பாக பேட்டிங் செய்து பார்ட்னர்ஷிப் அமைப்பது அவசியம். அது எங்களுக்கு கிடைக்காமல் போனது.

    படிதர்-ராவத் ஜோடியின் 36 ரன்கள் லக்னோ அணிக்கு அச்சுறுத்தல் கொடுக்க முடியவில்லை. மஹிபால் லோம்ரோர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் ஆட்டமிழந்ததும் எங்களுடைய சிறிய நம்பிக்கையும் தகர்ந்தது. மூன்று வடிவிலான துறையிலும் லக்னோ சிறப்பாக செயல்பட்டது.

    இவ்வாறு டு பிளிஸ்சிஸ் தெரிவித்தார்.

    பெங்களூரு அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் லக்னோ அணியின் கே.எல்.ராகுல், தீபக் ஹூடா ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 95 ரன்கள் சேர்த்தது.
    கொல்கத்தா:

    ஐ.பி.எல். தொடரின் எலிமினேட்டர் சுற்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. டாஸ் வென்ற லக்னோ பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் குவித்தது. இளம் வீரர் ரஜத் படிதார் அதிரடியாக ஆடி 54 பந்தில் 112 ரன்னும், தினேஷ் கார்த்திக் 23 பந்தில் 37 ரன் எடுத்தும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    இதையடுத்து, 208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் லக்னோ அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் டி காக் 6 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். மனன் வோரா 19 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    கேப்டன் கே.எல்.ராகுல் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். அவருக்கு தீபா ஹூடா நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார். ஹூடா 45 ரன்னில் வெளியேறினார். ஸ்டோய்னிஸ் 9 ரன்னில் ஆட்டமிழந்தார். தனி ஆளாகப் போராடிய ராகுல் 79 ரன்னில் அவுட்டானார்.

    இறுதியில், லக்னோ அணி 6 விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 14 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி பெற்றி 2வது தகுதிச்சுற்றுக்கு முன்னேறியது.

    இந்த தோல்வியின் மூலம் ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறிய லக்னோ அணி 4வது இடத்தை தக்கவைத்தது.

    பெங்களூரு அணி சார்பில் ஹேசில்வுட் 3 விக்கெட், சிராஜ், ஹசரங்கா, ஹர்ஷல் படேல் ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.
    லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணியின் ரஜத் படிதார், தினேஷ் கார்த்திக் ஜோடி 5வது விக்கெட்டுக்கு 92 ரன்கள் சேர்த்து அசத்தியது.
    கொல்கத்தா:

    ஐ.பி.எல். தொடரின் எலிமினேட்டர் சுற்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இதில் அறிமுக அணியான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் குவித்தது. 
    இளம் வீரர் ரஜத் படிதார் அதிரடியாக விளையாடி 49 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார். அவர் 54 பந்துகளில் 112 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இதையடுத்து, 208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் லக்னோ அணி விளையாடி வருகிறது.

    இந்நிலையில், இந்திய அணியில் அறிமுகம் ஆகாமல் ஐபிஎல் பிளே ஆப் போட்டியில் சதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை ரஜத் படிதார் படைத்துள்ளார்.
    ×