என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "EV"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அனைத்துவிதமான எலெக்ட்ரிக் வாகன பயனர்களும் பயன்படுத்தலாம்.
    • இவை அனைத்திலும் மூன்று டி.சி. சார்ஜர்கள் உள்ளன.

    ஹூண்டாய் இந்தியா நிறுவனம் சென்னையில் தனது முதல் 180 கிலோவாட் டி.சி. பாஸ்ட் சார்ஜிங் மையத்தை திறந்தது. சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள ஸ்பென்சர் பிளாசா மாலில் இந்த சார்ஜிங் மையம் அமைந்துள்ளது. இதில் 150 கிலோவாட் மற்றும் 30 கிலோவாட் டி.சி. திறன் கொண்ட முனைகள் உள்ளன.

    இதன் தொடர்ச்சியாக ஹூண்டாய் நிறுவனம் தமிழகம் முழுக்க முக்கிய நகரங்கள் மற்றும் நெடுஞ்சாலைகளில் 100 பொது பாஸ்ட் சார்ஜிங் மையங்களை நிறுவ முடிவு செய்துள்ளது. இவற்றை ஹூண்டாய் வாடிக்கையாளர்கள் மட்டுமின்றி அனைத்துவிதமான எலெக்ட்ரிக் வாகன பயனர்களும் பயன்படுத்த முடியும்.

    முன்னதாக மும்பை, பூனே, ஆமதாபாத், ஐதராபாத், குருகிராம் மற்றும் பெங்களூரு என நாடு முழுக்க பத்து இடங்களில் பாஸ்ட் சார்ஜிங் மையங்களை ஹூண்டாய் நிறுவனம் திறந்து வைத்தது. இவை அனைத்திலும் மூன்று டி.சி. சார்ஜர்கள் உள்ளன.

    • இந்தியர்களின் பிரியமான எஸ்.யு.வி. ரக கார் மாடலாக ஹூண்டாய் கிரெட்டா (Hyndai Creta) இருக்கின்றது.
    • கடந்த மாதம் மட்டும் கிரெட்டா மாடல் 14 ஆயிரத்திற்கும் அதிக யூனிட்கள் விற்பனையாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    இந்தியர்களின் பிரியமான எஸ்.யு.வி. ரக கார் மாடலாக ஹூண்டாய் கிரெட்டா (Hyndai Creta) இருக்கின்றது. இந்த கார் இந்தியாவின் பெஸ்ட் செல்லிங் எஸ்.யு.வி. கார் மாடல் என்பதை தொடர்ச்சியாக உறுதி செய்து வருகின்றது.

    கடந்த மே மாதத்தில் அதிகமான விற்பனையான கார்களின் பட்டியலில் முதல் இடத்தை பிடித்திருக்கிறது ஹூண்டாய் கிரெட்டா. கடந்த மாதம் மட்டும் கிரெட்டா மாடல் 14 ஆயிரத்திற்கும் அதிக யூனிட்கள் விற்பனையாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில் கிரெட்டாவின் ஈவி (EV) எனப்படும் ஹூண்டாய் எலக்ட்ரிக் ரக காரை அறிமுகம் செய்ய இருக்கிறது. சமீபத்தில் தான் கிரெட்டாவின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் வெளியிடப்பட்டது. அதைத்தொடர்ந்து இந்த ஆண்டு இறுதிக்குள் புதிய எலெக்ட்ரிக் காரின் அறிமுகத்தையும், அதனைத் தொடர்ந்து அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இதன் வெளியீட்டையும் நாம் எதிர்பார்க்கலாம்.




     


    தற்போது இந்தியா சாலைகளில் இந்த கிரெட்டா EV-யை சோதனை செய்து வருகிறது ஹூண்டாய். அப்படி கிரெட்டா EV சோதனை செய்யப்பட்ட போது எடுக்கப்பட்ட படங்கள் வெளியாகி உள்ளது. இந்தியாவில் கிரெட்டா EV மாடல் ரூ.15 லட்சம் விலையில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    கிரெட்டா EV காரில் என்னனென்ன சிறப்பம்சங்கள் இடம் பெற்றிருக்கும் என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை.

    • டாடா நிறுவனத்தின் சியாரா மாடல் இந்தியாவில் அதிக பிரபலம்.
    • தனது சியாரா மாடலை மீண்டும் விற்பனைக்கு கொண்டுவர டாடா நிறுவனம் முடிவு செய்துள்ளது.

    கார் கம்பெனிகளில் முன்னோடியாக திகழ்கிறது டாடா நிறுவனம். டாடா நிறுவனத்தின் சியாரா மாடல் இந்தியாவில் அதிக பிரபலம். இந்த மாடலை வெளிவந்ததில் இருந்தே மக்களிடம் அமோக வரவேற்பை பெற்றது.

    இதுவரை இந்தியாவில் பல்லாயிரத்திற்கு மேற்பட்ட சியாரா யூனிட்கள் விற்பனையாகி உள்ளது. சியாரா கார் மாடல் பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின் கொண்ட மால்கள் கடந்த காலங்களில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில், தனது சியாரா மாடலை மீண்டும் விற்பனைக்கு கொண்டுவர டாடா நிறுவனம் முடிவு செய்துள்ளது.

    அதன்படி கடந்த 2020 மற்றும் 2023 ஆம் ஆண்டு நடந்த ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியில் டாடா மோட்டார்ஸ் சார்பில் அவர்களது சியாரா EV கான்செப்ட் வடிவில் காட்சிக்கு வைத்தது. கடந்த ஆண்டு நடந்த ஆட்டோ எக்ஸ்போ விழாவில் காட்சிப்படுத்தப்பட்ட டாடா சியாரா EV கான்செப்ட் கிட்டத்தட்ட உற்பத்திக்கு தயாரான வடிவிலேயே காட்சியளித்தது.

    வருகிற 2026 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் சியெரா எலக்ட்ரிக் கார் விற்பனைக்கு வந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனை தொடர்ந்து, இதே காரின் பெட்ரோல்/ டீசல் எஞ்சின் ஆப்ஷன்களையும் விற்பனைக்கு கொண்டுவர டாடா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    • உலகின் முதல் பறக்கும் காரை சீனா அறிமுகப்படுத்தியுள்ளது.
    • இதற்கான சோதனை ஓட்டம் துபாயில் கடந்த 2022ம் ஆண்டு நடத்தப்பட்டது.

    பீஜிங்:

    பெருகி வரும் வாகனங்களின் எண்ணிக்கையால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவது வாடிக்கையாகி வருகிறது. இதனால் நெரிசல் அதிகரித்து பயணத்தை தாமதப்படுத்துகின்றன. அத்துடன் பயணத்தையும் சலிப்படைய செய்கிறது.

    எனவே, பயணத்தை எளிதாக்கும் வகையில் பறக்கும் காரை வடிவமைக்க உலகின் பல்வேறு நிறுவனங்கள் போட்டிப்போட்டு வருகின்றன.

    இந்நிலையில், இந்தப் போட்டியில் சீனா முந்தியுள்ளது. சீனாவின் தொழில்நுட்ப மற்றும் மோட்டார் வாகன தயாரிப்பு நிறுவனமான எக்ஸ்பெங், உலகிலேயே முதல் பறக்கும் பேட்டரி காரை தயாரித்துள்ளது. இதற்கான சோதனை ஓட்டத்தை 2022ம் ஆண்டு துபாயில் நடத்தி வெற்றி பெற்றது.

    கடந்த ஞாயிறன்று சீனாவின் பீஜிங்கில் நடைபெற்ற சர்வதேச பொருளாதார வர்த்தக காட்சியில் இந்தப் பறக்கும் கார் பீஜிங்கின் டேக்சிங் விமான நிலையத்தில் முதல் முறையாக தனது பயணத்தை மேற்கொண்டது.

    ஹெலிகாப்டர் தொழில்நுட்பத்தில் கார் போன்ற வடிவத்தில் பறக்கும் இந்தக் காருக்கு எக்ஸ்பெங் நிறுவனம் எக்ஸ் 2 என பெயரிட்டுள்ளது. அதிகபட்சம் 170 கிலோகிராம் எடையை தாங்கி பறக்கக்கூடிய வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பறக்கும் கார்கள் விரைவில் விற்பனைக்கு வரும் என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

    போக்ஸ்வேகன் நிறுவனம் எலெக்ட்ரிக் வாகன சந்தையில் பல்வேறு புது மாடல்களை அறிமுகம் செய்வதற்கான பணிகளை துவங்கி, விறுவிறுப்பாக செயல்பட்டு வருகிறது.


    போக்ஸ்வேகன் நிறுவனம் மிட்-லெவல் மற்றும் ஹை எண்ட் எலெக்ட்ரிக் வாகனங்களை பல்வேறு நாடுகளில் அறிமுகம் செய்து வருகிறது. அந்த வரிசையில் போக்ஸ்வேகன் தற்போது எண்ட்ரி லெவல் எலெக்ட்ரிக் வாகன மாடல்களில் தனது கவனத்தை திருப்பி இருக்கிறது. முதற்கட்டமாக இந்த மாடல் ஐரோப்பியா மற்றும் வளர்ந்து வரும் நாடுகளில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. 

     போக்ஸ்வேகன் ID 3

    கடந்த ஆண்டு நடைபெற்ற முனிச் மோட்டார் விழாவில் போக்ஸ்வேகன் நிறுவனம் தனது குறைந்த விலை எலெக்ட்ரிக் கார் எப்படி காட்சியளிக்கும் என்ற விவரங்களை ID கான்செப்ட் வடிவில் அறிவித்து இருந்தது. இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் போக்ஸ்வேகன் நிறுவனம் தனது ID 4 மாடலின் ப்ரோடக்‌ஷன் வெர்ஷனை டிசைன் செய்ய துவங்கி இருப்பதாக கூறப்படுகிறது. 

    அந்த வகையில் புது எலெக்ட்ரிக் கார் மெல்லிய தோற்றம், ஆங்குலர் முன்புறம் மற்றும் ID டிசைன் அம்சங்களை கொண்டிருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது. ஒட்டுமொத்தத்தில் இந்த எலெக்ட்ரிக் கார் போலோ மாடல் அளவில் இருக்கும் என கூறப்படுகிறது. மேலும் இது போக்ஸ்வேகன் நிறுவனத்தின் எண்ட்ரி லெவல் எலெக்ட்ரிக் கார் மாடலாக அறிமுகம் செய்யப்படும் என்றும் தெரிகிறது.  
    ×