என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாணவிகள் அச்சம்"

    கட்டி முடித்து ஓராண்டே ஆன நிலையில் தருமபுரி சட்டக்கல்லூரி உடைந்து விழும்பிளைவுட் மேற்கூரையால் மாணவ, மாணவிகள் அச்சம் அடைந்துள்ளனர்.
    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் கடந்த காலங்களில் தமிழகத்திலேயே கல்வி வளர்ச்சியில் பின்தங்கிய மாவட்டமாக இருந்து வந்தது. உயர் கல்வி பயிலும் மாணவ மாணவிகளின் சதவீகிதம் மிக மிக குறைவாக தான் இருந்தது. 

    ஆகையால் தமிழக அரசு தருமபுரி மாவட்டத்திற்கு மருத்துவ கல்லூரி, பொறியியல் கல்லூரி, சட்ட கல்லூரி, பால்டெக்னிக் கல்லூரி, கலை மற்றும் அறிவியியல் கல்லூரி என அனைத்து தரப்பட்ட கல்லூரிகளும் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதனடிப்படையில் தருமபுரி மாவட்டத்திற்கு கடந்த 25.05.2017 ம் ஆண்டு சட்ட கல்லூரி தொடங்கப்படும்  என அ,தி,மு,க தலைமையிலான அரசு அறிவித்தது. இக்கல்லூரி டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலை கழகத்துடன் இணைந்து செயல்படும் எனவும் அறிவிக்கபட்டது.   

    இந்நிலையில் தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த பைசுஅள்ளி பகுதியில் விடுதியுடன் கூடிய 7.75 ஏக்கர் நிலப்பரப்பில் சுமார் 69 கோடியே 29 லட்சம் மதிப்பில் கட்டிடங்கள் கட்டி கடந்த ஆண்டு முதல் வகுப்புகள் துவங்கபட்டது. இக்கல்லூரியில் 1500 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.

     இந்நிலையில் கட்டி முடிக்கபட்டு ஓர் ஆண்டு நிறைவுற்ற நிலையில்,  மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் பெய்த கன மழை மற்றும் சூறாவளி காற்றுக்கு கல்லூரி நுழைவு வாயிலில் உள்ள பிளைவுட் மேற்கூரை  அனைத்தும் பெயர்ந்து விழுந்து வருகிறது. இதனால் சட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் உள்ளே நுழையவே அச்சப்படுகின்றனர்.

    இந்நிலையில் பெரிய அளவில் விபத்து ஏற்படுவதற்கு முன் தமிழக அரசு சட்ட கல்லூரியை தரமில்லாமல் கட்டிய ஒப்பந்ததாரர் மீது உரிய நடவடிக்கை எடுத்து மீண்டும் புதுப்பித்து தர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    ×