என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "alluvial soil"

    • பொங்குபாளையம் ஊராட்சியை சேர்ந்த காளம்பாளையத்தில் அரசின் சார்பில் கட்டப்பட்ட ரேஷன் கடை அமைந்துள்ள கட்டிடம் பழுதடைந்து கீழேவிழும் நிலையில் உள்ளது.
    • திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் அத்திக்கடவு-அவினாசி திட்டத்தின் மூலமாக நீர் நிரப்ப தற்போது சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது.

     திருப்பூர்:

    திருப்பூர் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் சப்-கலெக்டர் அலுவலகத்தில் சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் தலைமையில் நடைபெற்றது. திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, பல்லடம், அவினாசி, ஊத்துக்குளி தாலுகாவை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை மனுக்கள் மூலமாக தெரிவித்தனர்.

    கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க திருப்பூர் வடக்கு ஒன்றியக்குழு செயலாளர் அப்புசாமி அளித்த மனுவில், கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் அத்திக்கடவு-அவினாசி திட்டத்தின் மூலமாக நீர் நிரப்ப தற்போது சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது. திருப்பூர் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த பொங்குபாளையம், கணக்கம்பாளையம், காளிபாளையம், பெருமாநல்லூர், ஈட்டிவீரம்பாளையம், வள்ளிபுரம், தொரவலூர், மேற்குபதி, சொக்கனூர், பட்டம்பாளையம் ஆகிய ஊராட்சிகளில் உள்ள குளம், குட்டைகளில் சீமை கரு–வேல மரங்கள், முட்புதர்களை அகற்றி, வண்டல் மண் எடுக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இவ்வாறு மண் அள்ளி தூர்வாரும்போது குளம் ஆழப்படுத்தப்படும்.

    அத்திக்கடவு-அவினாசி திட்டத்தில் குளம், குட்டைகளுக்கு நீர் நிரப்பப்பட்டு வருவதால் வண்டல் மண் எடுத்து ஆழப்படுத்த விவசாயிகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும். இடைத்தரகர்கள் மண் அள்ளாமல் இருக்க அதிகாரிகள் கண்காணித்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த கூட்டத்தில் மனு கொடுத்தும் இதுவரை நடவடிக்கை இல்லை. பொங்குபாளையம் ஊராட்சியை சேர்ந்த காளம்பாளையத்தில் அரசின் சார்பில் கட்டப்பட்ட ரேஷன் கடை அமைந்துள்ள கட்டிடம் பழுதடைந்து கீழேவிழும் நிலையில் உள்ளது. புதிய கட்டிடம் கட்டிக்கொடுக்க வேண்டும்' என்று கூறியுள்ளார்.

    கடந்த காலங்களைப் போல அனைத்து பகுதிகளிலும் மண் மற்றும் வண்டல் மண் எடுத்துச் செல்ல அனுமதி வழங்க வேண்டும்.

    திருப்பூர்:

    நீர்நிலைகள் விவசாய நிலங்களில் மண் வளத்தை மேம்படுத்தும் நோக்கத்தில் நீர் நிலைகளில் வண்டல் மண் எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது. ஆனால் மண் மற்றும் வண்டல் மண் எடுப்பதற்கான விதிமுறைகளில் தற்போது பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் வண்டல் மண் எடுப்பதில் பல்வேறு சிரமங்கள் ஏற்படுவதாக விவசாயிகள் கூறியுள்ளனர்.

    இதுகுறித்து திருப்பூர் மாவட்ட கலெக்டருக்கு அனைத்து விவசாய சங்க கூட்டமைப்பு பிரதிநிதிகள் சார்பில் அனுப்பப்பட்டுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகளில் விவசாயப் பயன்பாட்டுக்கு இலவசமாக மண் மற்றும் வண்டல் மண் எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. காலதாமதம் அதன்படி வண்டல் மண் எடுப்பதில் பல சிரமங்கள் உள்ளது.

    அதன்படி ஒரு வருவாய் கிராமம் அல்லது அதை ஒட்டியுள்ள கிராமங்களுக்கு மட்டுமே மண் எடுத்துச் செல்லலாம். இதனால் நீர் நிலைகள் இல்லாத பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் வண்டல் மண் எடுக்க முடியாத நிலை ஏற்படும். எனவே கடந்த காலங்களைப் போல அனைத்து பகுதிகளிலும் மண் மற்றும் வண்டல் மண் எடுத்துச் செல்ல அனுமதி வழங்க வேண்டும். மேலும் தற்போது மண் அள்ள மாவட்ட கலெக்டரிடம் அனுமதி பெற வேண்டியதுள்ளது.

    2017 மற்றும் 2020-ம் ஆண்டுகளில் வழங்கப்பட்டது போல தாசில்தார் மட்டத்தில் அனுமதி அளித்தால் காலதாமதம் மற்றும் அலைச்சல் இல்லாமல் விவசாயிகள் பலனடைய முடியும். அத்துடன் விவசாயிகள் நலன் கருதி, மண் அள்ளுவதற்கு விவசாயிகளே ஜேசிபி உள்ளிட்ட வாகனங்களை ஏற்பாடு செய்து கொள்வதற்கு அனுமதியளிக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×