என் மலர்
நீங்கள் தேடியது "Minister Anbil Mahesh"
- அனைவருக்கும் உலக மகளிர் தின நல்வாழ்த்துகள்.
- ஒரு பையன் படிக்கிறான் என்றால் அவன் குடும்பம் நன்றாக இருக்கும்.
சர்வதேச மகளிர் தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதைமுன்னிட்டு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அதில், "பெண் பிள்ளை படித்தால் சமூகமே முன்னேற்ற பாதைக்கு செல்லும்" என்று கூறினார்.
இதுகுறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
ஒரு பையன் படிக்கிறான் என்றால் அவன் குடும்பம் நன்றாக இருக்கும். ஆனால் ஒரு பெண் பிள்ளை படிக்கிறாள் என்றால் ஒட்டுமொத்த சமூகமே முன்னேற்றப் பாதைக்குச் செல்லும்.
அனைவருக்கும் உலக மகளிர் தின நல்வாழ்த்துகள்...
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
"ஒரு பையன் படிக்கிறான் என்றால் அவன் குடும்பம் நன்றாக இருக்கும். ஆனால் ஒரு பெண் பிள்ளை படிக்கிறாள் என்றால் ஒட்டுமொத்த சமூகமே முன்னேற்றப் பாதைக்குச் செல்லும்" ??????????♀️?♀️?⚕️?????????⚖️அனைவருக்கும் உலக மகளிர் தின நல்வாழ்த்துகள்...#உலக_மகளிர்_தினம்#WomensDay2025 #IWD2025 pic.twitter.com/jh2YVj0mVi
— Anbil Mahesh (@Anbil_Mahesh) March 8, 2025
- மார்ச் மாதம் ஒன்றாம் தேதி முதல் அடுத்த கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறும்.
- பொதுத்தேர்வை கண்டு மாணவர்கள் அஞ்சக் கூடாது. தைரியமாக தேர்வை அணுக வேண்டும்.
தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
மத்திய அரசு நிதி தரவில்லை என்றாலும் தமிழக அரசு எந்த திட்டத்தையும் நிறுத்தாது. தமிழக அரசின் நிதியை பயன்படுத்தி தொடர்ந்து திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
மார்ச் மாதம் ஒன்றாம் தேதி முதல் அடுத்த கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறும்.
பொதுத்தேர்வை கண்டு மாணவர்கள் அஞ்சக் கூடாது. தைரியமாக தேர்வை அணுக வேண்டும்.
பொதுத்தேர்வு நெருங்கும் நிலையில் மாணவர்களின் பதட்டத்தை குறைக்க ஆலோசனை வழங்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினோம்.
கடந்த ஓராண்டில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு சம்பந்தமாக 84 புகார்கள் பெறப்பட்டுள்ளது.
90 நாட்கள் கையெழுத்து இயக்கம் நடத்தும் பாஜகவினர் உறுதியாக வருத்தப்படுவார்கள். தமிழக மக்கள் இருமொழிக் கொள்கையையே விரும்புவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.