என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sheep. திருப்பூர் செய்திகள்"

    வனத்துறையினர் கண்காணிப்பு கேமரா மற்றும் கூண்டு வைத்து சிறுத்தையை பிடிக்க வேண்டும்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள சின்னவீரன் பட்டி, இந்திரா நகர், முத்து நகர் உட்பட பல்வேறு பகுதிகளில் கடந்த சில மாதங்களாக ஒருவித மர்ம விலங்கு ஆடுகளை கொன்று வந்த நிலையில் தற்போது மின் நகர் பகுதியில் உள்ள விவசாயி ஒருவரின் ஆட்டுப்பண்ணையில் புகுந்த மர்ம விலங்கு 80க்கும் மேற்பட்ட ஆடுகளை கடித்ததில் பரிதாபமாக உயிரிழந்தது. சம்பவ இடத்தில் வனத்துறையினர், கால்நடை மருத்துவர்கள், காவல்துறையினர் தீவிர ஆய்வு நடத்தி வருகின்றனர்.

    இது குறித்து விவசாயிகள் தரப்பில் கூறியதாவது :-

    இப்பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஆடுகள் உயிர் இழந்து வருகின்றது. வனத்துறை தரப்பில் செந்நாய்கள் கூட்டம் என தகவல் தெரிவித்து வருகிறார்கள். இது முற்றிலும் தவறானது. ஆடுகளை கொன்று வருவது சிறுத்தை அல்லது கழுதை புலியாக இருக்கலாம். இதற்கான ஆதாரங்களாக கால் தடங்கள் பதிவாகியுள்ளது.

    ஆகையால் சம்பந்தப்பட்ட வனத்துறையினர் இப்பகுதியில் கண்காணிப்பு கேமரா மற்றும் கூண்டு வைத்து சிறுத்தையை பிடிக்க வேண்டும் என தெரிவித்தனர். மேலும் உயிரிழந்த ஆடுகளின் மதிப்பு பல லட்சம் இருக்கும் என்பதால் வனத்துறையினர் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். 

    ×