என் மலர்
முகப்பு » tag 333395
நீங்கள் தேடியது "பி.எம்.டபிள்யூ. M4 CSL"
பி.எம்.டபிள்யூ. நிறுவனத்தின் புதிய M சீரிஸ் கார் மாடல் 540 ஹெச்.பி. திறன் வெளிப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இது பந்தைய களத்திலும் புது சாதனை படைத்து அசத்தி இருக்கிறது.
பி.எம்.டபிள்யூ. நிறுவனம் தனது M பெர்பார்மன்ஸ் பிரிவின் 50 ஆவது ஆண்டு விழாவை கொண்டாடும் வகையில், பி.எம்.டபிள்யூ. M4 CSL மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய M4 CSL மாடலில் அதிக செயல்திறன், சிறப்பான டிசைன் மற்றும் நர்பர்கிரிங் பந்தய களத்தில் பி.எம்.டபிள்யூ. உற்பத்தி செய்ததில் அதிவேக கார் என்ற பட்டத்தை பெற்று இருக்கிறது. இந்த பந்தய களத்தில் பி.எம்.டபிள்யூ. M4 CSL மாடல் 7 நிமிடங்கள் 20.207 நொடிகளில் கடந்துள்ளது.
இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 3.7 நொடிகளில் எட்டிவிடும். உலகளவில் இந்த கார் மொத்தத்தில் 1000 யூனிட்களே உற்பத்தி செய்யப்பட இருக்கிறது. இந்த மாடலில் 3.0 லிட்டர், ட்வின் டர்போ சார்ஜ் செய்யப்பட்ட, ஸ்டிரெயிட் 6 என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 550 ஹெச்.பி. திறன், 650 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது.
புதிய பி.எம்.டபிள்யூ. M4 CSL மணிக்கு அதிகபட்சமாக 307 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் வகையில் கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த கார் ஸ்டாண்டர்டு மாடலை விட 110 கிலோ எடை குறைவாக உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடலின் முன்புறம் 21 இன்ச் வீல்களும், பின்புறம் 22 இன்ச் வீல்களும் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் மிஷெலின் பைலட் ஸ்போர்ட் கப் 2 R டையர்கள் வழங்கப்பட்டுள்ளன.
×
X