என் மலர்
முகப்பு » தலித் தலைவர்
நீங்கள் தேடியது "தலித் தலைவர்"
காங்கிரஸ் எம்.எல்.ஏ ஜமீர் அஹமது கான், தலித் தலைவருக்கு இனிப்பை ஊட்டிவிட்டு, அவர் வாயில் இருந்து இனிப்பை எடுத்து உண்பது போன்ற வீடியோ சமுக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
பெங்களூர்:
கர்நாடகாவின் பெங்களூர், சாம்ராஜ்பேட்டை சட்டமன்ற உறுப்பினராக ஜமீர் அஹமது கான் உள்ளார். இவர் அம்பேத்கர் ஜெயந்தி மற்றும் ஈத் மிலன் நிகழ்ச்சியில் நேற்று கலந்து கொண்டார்.
அப்போது, ஜமீர் அஹமது கான், தலித் அமைப்பின் தலைவர் ஒருவருக்கு இனிப்பை ஊட்டி விட்டார். பதிலுக்கு தலித் தலைவர் இனிப்பை ஊட்டி விட முற்பட்ட போது, அவரது வாயில் உள்ள இனிப்பை எடுத்து ஊட்டி விட சொல்லி ஜமீர் அஹமது கான் சாப்பிட்டார்.
இந்த வீடியோவானது இணையத்தில் வைரலாகியுள்ளது.
சகோதரத்துவத்தை மேம்படுத்துவதற்காக இவ்வாறு செய்ததாக கூறிய அவர், சிலர் பயங்கரவாதத்தை வைத்து சமுதாயத்தினருக்கு இடையே பிளவுகளை ஏற்படுத்த முயற்சிப்பதாக கூறினார்.
A video of Karnataka Congress MLA Zameer Ahmed Khan has gone viral on the internet in which he was seen sharing food with Dalit Swamiji.#congress#bjp#dalit#brotherhood#hindumuslimunity#drbrambedkar#zameerahmedkhan#karnataka#viral#trending#gyanvapimosque#islamophobiapic.twitter.com/j74LiabO4J
— NewsHamster (@NewsHamster1) May 23, 2022
×
X