என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Robot"

    • பெங்களூரிவில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் 35 வயதான வாலிபர் ஒருவர் இதய பாதிப்புடன் அனுமதிக்கப்பட்டார்.
    • ரோபோவை பயன்படுத்தி, பெங்களூரில் உள்ள நோயாளிக்கு இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

    புதுடெல்லி:

    ரோபோக்களின் பயன்பாடு பல்வேறு துறைகளிலும் அதிகரித்து வருகிறது. வெளிநாடுகளில் மருத்துவ துறையிலும் ரோபோக்கள் ஈடுபடுத்தப்படுகிறது.

    குறிப்பாக பல ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் இருந்து டாக்டர்கள் ரோபோ மூலம் நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை செய்த சம்பவங்கள் நடைபெற்றன.

    இந்நிலையில் இந்தியாவிலும் முதல்முறையாக 2 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவு தூரத்தில் இருந்து ரோபோடிக் மூலம் ஒரு நோயாளிக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

    பெங்களூரிவில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் 35 வயதான வாலிபர் ஒருவர் இதய பாதிப்புடன் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் இதயத்தின் மேல் அறைகளுக்கு இடையில் ஒரு துளை இருக்கும் இழ பிறவி நிலையான சிக்கலான நோய் என்பது கண்டு பிடிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து குருகிராமில் உள்ள எஸ்.எஸ்.இன்னோவேஷன் நிறுவன தலைவர் டாக்டர் சுதிர்ஸ்ரீவஸ்தவா தலைமையில் குருகிராமில் இருந்தே இந்தியாவில் முதல் முறையாக உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட அறுவை சிகிச்சை ரோபோவை பயன்படுத்தி, பெங்களூரில் உள்ள நோயாளிக்கு இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

    இந்த ரோபோடிக் கமிட்டி மூலம் குருகிராமில் இருந்து 2 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் பெங்களூரில் உள்ள நோயாளிக்கு தொலை நிலை வழியாக இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

    அறுவை சிகிச்சையின் போது, அறுவை சிகிச்சை மருத்துவர் 3டி கண்ணாடிகளை அணிந்து ஒரு கன்சோலுக்கு பின்னால் அமர்ந்து திரையை பார்த்துக்கொண்டே அறுவை சிகிச்சையை நடத்துகிறார். ரோபோடிக் கைகளின் உதவியுடன், உதவி மருத்துவர் முன்னிலையில் வேறு ஒரு இடத்தில் அமர்ந்திருக்கும் நோயாளிக்கு அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.

    இந்த அறுவை சிகிச்சையை வழிநடத்திய டாக்டர் அருள்பெர்டாடோ கூறுகையில், எஸ்.எஸ்.மந்த்ரா ரோபோடிக் அமைப்பு மூலம் மிகவும் பயன் உள்ளதாகவும், துல்லியமாகவும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதயம் போன்ற மிக முக்கியமான உறுப்புகளில் மிக நுணுக்கமாக சிறந்த நம்பிக்கையுடன் அறுவை சிகிச்சையை மேற்கொள்ள முடிந்தது என்றார்.

    • கேரளாவில் மழைக் காலம், வெயில் காலம் என எந்த காலநிலை என்றாலும் ஏதாவது ஒரு தொற்றுநோய் பரவத்தான் செய்கிறது.
    • நோயாளிகளுக்கு டாக்டர்கள் மற்றும் நர்சுகள் நேரடியாக மருந்துகளை வழங்குவது தவிர்க்கப்படும்.

    திருவனந்தபுரம்:

    தொற்று நோய்கள் பரவலில் முன்னிலை வகிக்கும் மாநிலங்களில் ஒன்றாக கேரளா திகழ்கிறது. கடந்த 2020-ம் ஆண்டு நம் நாட்டில் கொரோனா தொற்று கண்டறியப்பட்ட முதல் மாநிலம் கேரளா தான். அதன்பிறகே தமிழகம் உள்ளிட்ட மற்ற மாநிலங்களில் கொரோனா பரவல் கண்டுபிடிக்கப்பட்டது.

    கேரளாவில் மழைக் காலம், வெயில் காலம் என எந்த காலநிலை என்றாலும் ஏதாவது ஒரு தொற்றுநோய் பரவத்தான் செய்கிறது. தொற்று நோய்கள் பரவலை தடுக்க மாநில சுகாதாரத் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தாலும் பல நோய்களை கட்டுப்படுத்த முடிவதில்லை.

    இதன் காரணமாக தொற்று நோய்களுக்கு அதிக உயிர்பலியும் ஏற்படுகிறது. பல தொற்று நோய்கள் வேகமாக பரவுவதற்கு மனிதர்களுக்கு இடையே நேரடி தொடர்பு இருப்பது முக்கிய காரணமாக இருக்கிறது. நேரடி தொடர்பு என்பது மக்களிடையே சாத்தியம்.

    அதே நேரத்தில் நோயாளிகளுக்கும், அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் மற்றும் நர்சுகளுக்கு நேரடி தொடர்பு என்பது தவிர்க்க முடியாததாக இருக்கிறது. நோய் பாதித்தவர்களுக்கு எப்படியும் மருத்துவர்கள் மற்றும் நர்சுகள் சிகிச்சை அளித்து தான் ஆகவேண்டும்.

    இதன் காரணமாக தொற்று நோய்கள் மருத்துவர்கள் மற்றும் நர்சுகளையும் பாதித்து விடுகிறது. இதனை தடுக்கும் விதமாக கேரள மாநிலத்தை சேர்ந்த பள்ளி மாணவர், "நர்சிங் ரோபோ" தயாரித்துள்ளார்.

    கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்த 8-ம் வகுப்பு மாணவரான ஆதிதேவ் தான், அந்த ரோபோவை வடிவமைத்து இருக்கிறார். கொரோனா போன்ற ஆபத்தான தொற்றுநோய்கள் பாதிப்பின் போது, சுகாதார பணியாளர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதற்காகவே இந்த ரோபோவை மாணவர் ஆதிதேவ் தயாரித்துள்ளார்.

    இந்த ரோபோ தொற்று நோய் பாதிப்புக்குள்ளான நோயாளிகளுக்கு மருந்துகளை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் நோயாளிகளுக்கு டாக்டர்கள் மற்றும் நர்சுகள் நேரடியாக மருந்துகளை வழங்குவது தவிர்க்கப்படும்.

    நோயாளிகளுக்கு தேவையான மருந்துகளை ரோபோவே வழங்கும். மாணவன் தயாரித்துள்ள இந்த ரோபோவில் வீடியோ அழைப்பு வசதியும் இருக்கிறது. இதனை ரிமோட் மூலமாக இயக்க முடியும். பல்வேறு பரப்புகளில் ரோபோ நகர்ந்து செல்லும்.

    இதனால் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் டாக்டர் மற்றும் நர்சுகள் 100 மீட்டர் தொலைவில் இருந்த படி ரோபோவை இயக்கி நோயாளிகளை கண்காணித்து மருந்து வழங்க முடியும். இந்த ரோபோ இரவிலும் செயல்படும் வகையில் எல்.இ.டி. விளக்குகள் இருக்கின்றன.

    இந்த ரோபோவை மாணவர் ஆதிதேவ் சமீபத்தில் இயக்கி காண்பித்தார். மாணவர் ஆதிதேவின் தாய் ஜிஷா நர்சிங் கல்லூரி ஆசிரியை ஆவார். தந்தை திலீப் தகவல் தொழில்நுட்ப துறையில் பணிபுரிகிறார்.

    ஆதிதேவ் 4 வயது சிறுவனாக இருந்தபோதே எலக்ட்ரானிக்ஸ் சம்பந்தப்பட்ட பொம்மைகள் மீது ஈர்ப்பு ஏற்பட்டது. அது தற்போது மருத்துவ துறைக்கு தேவையான ஒரு ரோபோவை உருவாக்கும் வகையில் மாணவனை மாற்றியிருக்கிறது.

    ×