search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bomb"

    • சென்னை முகப்பேரில் உள்ள பிரபல தனியார் பள்ளிக்கும் மிரட்டல் விடுக்கப்பட்டது.
    • பள்ளிக்கு 3-வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    சென்னை:

    சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்திற்கு இ.மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

    கடந்த 6 மாதங்களாக தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழகம், தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வருகின்றன. அண்ணா பல்கலைக்கழகத்திற்கு 14-வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.

    சென்னையை அடுத்த கோவிலம்பாக்கத்தில் துரைப்பாக்கம்-பல்லாவரம் ரேடியல் சாலையில் பிரபல மருத்துவமனை ஒன்று உள்ளது. இந்த மருத்துவமனைக்கு இ.மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. மருத்துவமனை முழுவதும் மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் உதவியுடன் சோதனையில் ஈடுபட்டனர்.

    சென்னை முகப்பேரில் உள்ள பிரபல தனியார் பள்ளிக்கும் மிரட்டல் விடுக்கப்பட்டது. இதுகுறித்து தகவலின் பேரில் ஜெ.ஜெ.நகர் போலீசார் பள்ளி வளாகம் முழுவதும் நடத்திய சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரிய வந்தது. இந்தப் பள்ளிக்கு 3-வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • வெடிபொருட்கள் அல்லது ரசாயன பொருட்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.
    • வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

    பெங்களூரு:

    பெங்களூரு சம்பங்கி ராமநகரில் நட்சத்திர ஓட்டலான ஐபிஸ் ஓட்டல் உள்ளது. இந்த ஓட்டலுக்கு வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சலில் நேற்று இரவு வந்தது. அதில் ஓட்டல் வளாகத்தில் வெடிகுண்டு வைத்துள்ளோம். இன்னும் சில மணி நேரத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என்று எழுதப்பட்டிருந்தது. இந்த செய்தியை பார்த்த ஓட்டல் ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    உடனடியாக வெடிகுண்டு செயலிழக்கும் பிரிவு, வெடிகுண்டு கண்டறியும் பிரிவு மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு சென்று ஓட்டல் வளாகத்தை ஆய்வு செய்தனர். வெடிபொருட்கள் அல்லது ரசாயன பொருட்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. அது போலி வெடிகுண்டு மிரட்டல் என்பது தெரியவந்தது.

    வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

    ×