search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிரியாமணி"

    • மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் குஞ்சாக்கோ போபன்.
    • இப்படத்தை அறிமுக இயக்குனரான ஜித்து அஷ்ரஃப் இயக்கியுள்ளார்.

    மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் குஞ்சாக்கோ போபன். இவரது நடிப்பில் கடந்த பிப்ரவரி 20 ஆம் தேதி ஆபிஸர் ஆன் டியூட்டி திரைப்படம் வெளியானது. இப்படம் வெளியாகி மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.

    இப்படத்தை அறிமுக இயக்குனரான ஜித்து அஷ்ரஃப் இயக்கியுள்ளார். குஞ்சக்கோ போபன் உடன் பிரியாமணி, ஜெகதீஷ் மற்றும் விஷாக் நாயர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்தின் ஒளிப்பதிவை கன்னூர் ஸ்குவாட் புகழ் ராபி வர்கீஸ் ரா, ஜேக்ஸ் பிஜாயின் இசை, மற்றும் படத்தொகுப்பை சமன் சாக்கோ மேற்கொண்டுள்ளனர்.

    மலையாளத்தில் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றதால் திரைப்படத்தை தெலுங்கு மற்றும் தமிழ் மொழியில் வெளியிட்டுள்ளனர். தமிழ் மற்றும் தெலுங்கு மக்களின் மனதையும் ஆஃபிசர் திரைப்படம் வென்று வருகிறது.

    இந்நிலையில் படத்தின் ஓடிடி ரிலீசை படக்குழு அறிவித்துள்ளது. திரைப்படம் வரும் மார்ச் 20 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • நடிகை பிரியாமணி பல படங்களில் நடித்து வருகிறார்.
    • இவர் பருத்திவீரன் படத்தில் நடித்ததற்காக தேசிய விருதை பெற்றார்.

    தமிழ் சினிமாவில் பருத்திவீரன் படத்தில் நடித்ததற்காக தேசிய விருதை பெற்றவர் நடிகை பிரியாமணி. அதன்பின் நினைத்தாலே இனிக்கும், ராவணன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து புகழ்பெற்றார். தொடர்ந்து தமிழில் மசாலா படங்களிலும் நடித்து வந்தார். ஒரு கட்டத்தில் தமிழ்சினிமாவை விட்டு விலகி தெலுங்கு சினிமாவில் கவனம் செலுத்தினார். பரபரப்பாக நடித்துக் கொண்டிருக்கும்போதே திருமணம் செய்து கொண்டு இல்லற வாழ்வில் ஈடுபட்டு வந்தார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்று வந்த பிரியாமணி, இதன் மூலம் பல படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.



    இந்நிலையில், முத்த காட்சியில் நடிக்க எனக்கு அனுமதியில்லை என்று நடிகர் பிரியாமணி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது, திருமணத்திற்கு பிறகு முத்த காட்சிகளில் நடிக்க கூடாது என முடிவு செய்து கொண்டேன். அதற்கு எனக்கு அனுமதி இல்லை. அது ஒரு கதாபாத்திரம்தான் என்ற போதிலும் ஒரு பெண்ணாக அதனால் மிகவும் கஷ்டப்படுவேன். முத்த காட்சிகளில் நடிப்பதை கணவரும் விரும்ப மாட்டார். அப்படி நடித்தால் கணவருக்கு பதில் சொல்ல வேண்டி வரும். நடிக்க ஒப்பந்தமாகும் முன்பே இதுகுறித்து சொல்லி விடுவேன். நான் நடிக்கும் படங்களை என் இரு வீட்டு குடும்பத்தினரும் பார்ப்பார்கள் முத்த காட்சிகளில் நடித்து அவர்கள் மனதை கஷ்டப்படுத்துவதில் எனக்கு விருப்பமில்லை என்று பேசினார்.

    • ஆர்ட்டிக்கிள் 370 இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் வரவேற்பை பெற்று நல்ல வசூல் பார்த்து வருகிறது.
    • ஆர்ட்டிக்கிள் 370 படத்தின் மூலம் மக்கள் உண்மையான தகவல்களை தெரிந்து கொள்ள முடியும் என்று பிரதமர் மோடி பாராட்டி இருந்தார்.

    ஆதித்யா ஜம்பாலே இயக்கத்தில் பிரியாமணி, யாமி கவுதம் நடித்துள்ள ஆர்ட்டிக்கிள் 370 படம் திரைக்கு வந்து ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்த படம் இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் வரவேற்பை பெற்று நல்ல வசூல் பார்த்து வருகிறது.

    ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்ததை மையமாக வைத்து இந்த படம் தயாராகி இருந்தது. ஆர்ட்டிக்கிள் 370 படத்தின் மூலம் மக்கள் உண்மையான தகவல்களை தெரிந்து கொள்ள முடியும் என்று பிரதமர் நரேந்திர மோடியும் பாராட்டி இருந்தார்.

    ஆர்டிக்கிள் 370 படத்தை குவைத், சவுதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் திரையிட படக்குழுவினர் அனுப்பி வைத்தனர். அங்குள்ள தணிக்கை குழுவினர் படத்தை பார்த்து ஆட்சேபகரமான காட்சிகள் இருப்பதாக கூறி படத்துக்கு தடை விதித்தனர்.

    வளைகுடா நாடுகள் தடை காரணமாக அங்கு வசிக்கும் இந்திய மக்கள் ஆர்ட்டிக்கிள் 370 படத்தை பார்க்க இயலாத சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. பிரதமர் பாராட்டிய படத்துக்கு வளைகுடா நாடுகள் தடை விதித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ஆர்ட்டிக்கிள் 370 இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் வரவேற்பை பெற்று நல்ல வசூல் பார்த்து வருகிறது.

    • ஷாருக்கானுடன் பிரியாமணி நடித்த ‘ஜவான்’ படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று வசூலிலும் சாதனை படைத்தது.
    • தமிழ் படங்களிலும், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி படங்களிலும் நடித்து வருகிறார்.

    கார்த்தி நடித்த பருத்தி வீரன் படத்தில் 'முத்தழகு' என்ற கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானவர் பிரியாமணி. தொடர்ந்து ஏராளமான தமிழ் படங்களிலும், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி படங்களிலும் நடித்து வருகிறார்.

    ஷாருக்கானுடன் பிரியாமணி நடித்த 'ஜவான்' படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று வசூலிலும் சாதனை படைத்தது. சமீபத்தில் இந்தியில் வெளியான ஆர்டிகிள் 370 படத்திலும் நடித்திருந்தார். இந்த படமும் மிகுந்த வரவேற்பை பெற்றது.

    இந்த நிலையில் இந்தி திரை உலகில் தென்னிந்திய நடிகையாக பணிபுரியும் போது எதிர்கொள்ளும் சவால்கள் பற்றி அவர் கூறியதாவது:- இந்தி தயாரிப்பாளர்கள் சிலர் எங்களிடம் இது ஒரு தென்னிந்திய கதாபாத்திரம் என்பதால் நாங்கள் உங்களை நடிக்க வைக்க விரும்புகிறோம் என்று கூறுவார்கள். விரைவில் இந்த நிலைமாறும் என நம்புகிறேன். நாங்களும், மற்றவர்களை போலவே அழகாக இருக்கிறோம்.

    தென்னிந்தியாவை சேர்ந்தவர்களாக இருந்தாலும் இந்தி மொழியை எங்களால் மிகவும் சரளமாக பேச முடியும். எங்களுடைய தோல் நிறம் இந்தி நடிகைகள் போல் பிரகாசமாகவும் வெளிர் நிறமாகவும் இல்லை தான். நடிப்பை பொருத்தமட்டில் அது ஒரு பொருட்டல்ல. தெற்கில் இருந்து வரும் ஆண்களாலும் பெண்களாலும் இந்தியை சரளமாக பேசமுடியும். வடக்கு, தெற்கு என்ற பாகுபாடு மாற வேண்டும். நாங்கள் எப்போதும் இந்திய நடிகர்கள் தான். இவ்வாறு அவர் கூறினார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • விவேக் கண்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் கொட்டேஷன் கேங்க்.
    • படத்தில் பெண் தாதாக்களாக பிரியாமணி, சகுந்தலா என்ற கதாபாத்திரத்திலும் கவர்ச்சி நடிகையான சன்னி லியோன் பயங்கர கேங்ஸ்டராக பத்மா என்ற கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.

    விவேக் கண்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் கொட்டேஷன் கேங்க். பிரியாமணி, சன்னி லியோன், சாரா அர்ஜுன், ஜாக்கிசெராப், ஜெயபிரகாஷ் உள்பட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

    படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து வருகிற ஜூலை மாதம்திரைக்கு வர இருக்கிறது. காஷ்மீர், மும்பை, சென்னையில் நடைபெறும் கதை இந்த படம்.

    கொலைச் சம்பவத்தை நடத்துவதற்கு ஏலம் விட்டு கொலையாளிகளை தேர்வு செய்வதே கொட்டேஷன் கேங் படத்தின் கதை.

    படத்தில் பெண் தாதாக்களாக பிரியாமணி, சகுந்தலா என்ற கதாபாத்திரத்திலும் கவர்ச்சி நடிகையான சன்னி லியோன் பயங்கர கேங்ஸ்டராக பத்மா என்ற கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.

    படத்தில் இருவரது கதாபாத்திரங்களும் மாறுபட்ட தோற்றத்தில் உள்ளன.

    இந்நிலையில் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று மாலை நடந்தது.

    விழாவில் சன்னி லியோன் பேசியதாவது:-

    இந்த படத்தின் கதைக்கு நான் பொருத்தமாக இருப்பேன் என்று இயக்குனர் விவேக் கண்ணன் நினைத்து என்னை இந்த கதாபாத்திரத்தில் நடிக்க வைத்துள்ளார்.

    பிரியாமணியும் நானும் கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறோம்.

    கவர்ச்சியாக என்னை பார்த்த ரசிகர்கள் இதுபோன்று கேங்ஸ்டர் கதாபாத்திரத்திலும் என்னை பார்த்து ரசிப்பார்கள். ஜாக்கி செராப்புக்கு நான் மனைவியாக படத்தில் நடித்திருக்கிறேன். இந்தப் படத்தின் மூலம் கவர்ச்சி நடிகை என்ற இமேஜ் கண்டிப்பாக மாறும். அவ்வளவு அழுத்தமான கதாபாத்திரத்தில் நான் நடித்துள்ளேன். படம் நன்றாக வந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

    படத்தின் டிரைலர் மிகவும் ரத்தம் தெறிக்கும் காட்சிகளால் நிரம்பியுள்ளது. காஷ்மீர், மும்பை மற்றும் சென்னையென பல இடங்களில் ஒளிப்பதிவாளரான அருண் பத்மனாபன் படப்பிடிப்பை மேற்கொண்டுள்ளார். இப்படத்திற்கு டிரம்ஸ் சிவமணி இசையமைக்க கேஜே வெங்கடராமன் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார்.

    கன்னடம், இந்தி, மலையாளம் மற்றும் தெலுங்கு மொழிகளிலும் திரைப்படம் வெளியாகவுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • விஜய் நடிக்கும் படத்திற்கு தற்காலிகமாக "தளபதி 69" என தலைப்பிடப்பட்டு உள்ளது.
    • இப்படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிப்பதை படக்குழு அறிவித்தது.

    வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான "தி கோட்" திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து நடிகர் விஜய் நடிக்கும் படத்திற்கு தற்காலிகமாக "தளபதி 69" என தலைப்பிடப்பட்டு உள்ளது.

    இந்தப் படம் விஜய் நடிக்கும் கடைசி படம் என கூறி வருகின்றனர். இப்படத்தை எச்.வினோத் இயக்கவுள்ளார்.

    இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படம் அடுத்தாண்டு அக்டோபர் மாதம் வெளியாகவுள்ளது. பிரபல தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் நிறுவனம் தமிழில் தயாரிக்கும் முதல் படம் இதுவாகும். 'அனிமல்' படத்தில் வில்லனாக நடித்து அசத்திய பாபி தியோல் இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என்று படக்குழு அறிவித்தது.

    இந்நிலையில் இப்படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிப்பதை படக்குழு அறிவித்தது. பூஜா ஹெக்டே மேலும் மமிதா பைஜூ நடிப்பதாக படக்குழு அறிவித்து இருந்தது.

    படத்தில் இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் நடிக்க இருப்பதாக படக்குழு அறிவித்து இருந்த நிலையில் அடுத்ததாக நடிகை பிரியாமணி நடிக்கவுள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு தெரிவித்துள்ளனர். அடுத்தடுத்த தளபதி 69 குறித்து அப்டேட் கொடுப்பதால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • தளபதி 69 படத்திலும் பிரியாமணி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.
    • பிரியாமணி தொழில் அதிபர் முஸ்தபா ராஜ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

    கண்களால் கைது செய்' படத்தின் மூலம் திரை உலகிற்கு அறிமுகமானவர் பிரியாமணி. 'பருத்தி வீரன் இவருக்கு தேசிய விருதை பெற்றுக் கொடுத்தது. தமிழ், தெலுங்கு, இந்தியில் பிரியாமணி தற்போது பிசியாக நடித்து வருகிறார்.

    எச். வினோத் இயக்கத்தில் தளபதி 69 படத்திலும் பிரியாமணி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

    பிரியாமணி தொழில் அதிபர் முஸ்தபா ராஜ் என்பவரை 2016 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். முஸ்லிம் மதத்தை சேர்ந்தவரை பிரியாமணி திருமணம் செய்து கொண்டது அப்போது விமர்சனத்துக்குள்ளானது.

    இந்நிலையில், ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த பிரியாமணி தனது திருமணம் தொடர்பாக எழுந்த விமர்சனங்கள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

    ஒரு முஸ்லிமை திருமணம் செய்வதன் மூலம் எனக்கு பிறக்கப்போகும் குழந்தைகள் பயங்கரவாதிகளாக மாறுவார்கள் என்று சிலர் குறுஞ்செய்தி அனுப்பினர். அது என்னை மிகவும் பாதித்தது. ஜாதி அல்லது மதத்தை மீறி திருமணம் செய்துகொண்ட பல முன்னணி நடிகர்கள் உள்ளனர். அவர்கள் மத வேறுபாடின்றி ஒருவரையொருவர் காதலித்தார்கள். ஏன் அவர்கள் மீது இவ்வளவு வெறுப்பு காட்டப்படுகிறது என்று புரியவில்லை.

    பிரியாமணி இஸ்லாம் மதத்திற்கு மாறிவிட்டதாக எழுந்த விமர்சனத்துக்கு பதில் அளித்த பிரியாமணி, "நான் மதம் மாறிவிட்டேன் என்று உங்களுக்கு எப்படித் தெரியும்? இது என் முடிவு. நான் மதம் மாறமாட்டேன் என்று திருமணத்திற்கு முன்பே முஸ்தபாவிடம் தெரிவித்துள்ளேன். நான் இந்து மதத்தில் பிறந்தவள். ஆகையால், எப்போதும் என் நம்பிக்கையைப் பின்பற்றுவேன். நாங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் நம்பிக்கையை மதிக்கிறோம்" என்று தெரிவித்துள்ளார். 

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×