என் மலர்
நீங்கள் தேடியது "Ordered"
- அமெரிக்கா அதிபராக டிரம்ப் பதவி ஏற்ற பிறகு சட்டவிரோதமாக தங்கி இருக்கும் வெளிநாட்டவர்களை நாடு கடத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்.
- அவர்கள் கைது செய்யப்பட்டு கைவிலங்குடன் விமானங்கள் மூலம் சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர்.
அமெரிக்கா அதிபராக டிரம்ப் பதவி ஏற்ற பிறகு சட்டவிரோதமாக தங்கி இருக்கும் வெளிநாட்டவர்களை நாடு கடத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார். அவர்கள் கைது செய்யப்பட்டு கைவிலங்குடன் விமானங்கள் மூலம் சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர். அமெரிக்காவில் வசித்து வந்த பல இந்தியர்களும் நாடு கடத்தப்பட்டனர்.
30 நாட்கள் கெடு
அமெரிக்காவில் அந்நியர் பிரிவு சட்டம் 1940 அமலில் உள்ளது. இந்த சட்டத்தின் படி 30 நாட்களுக்கு மேல் அமெரிக்காவில் தங்கி இருக்கும் 14 வயதுக்கு மேற்பட்டவர்கள் முறைப்படி பதிவு செய்யவேண்டும். நீண்ட நாட்களாக இந்த சட்டம் பெயர்அளவில் தான் இருந்தது. ஆனால் தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப் இந்த சட்டத்தில் சில திருத்தங்களை கொண்டு வந்தார்.
இந்த சட்டம் கடந்த 11-ந்தேதி முதல் அமலுக்கு வந்தது. இதையடுத்து அமெரிக்காவில் சட்டவிரோதமாக இருக்கும் வெளிநாட்டவர்கள் 30 நாட்களுக்குள் தாமாக வெளியேற வேண்டும் என கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
அமெரிக்காவில் 30 நாட்களுக்கு மேல தங்கி இருக்கும் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் உடனடியாக தங்களை பற்றிய விவரங்களை உடனே உள்துறை பாதுகாப்பு அரசு அலுவலங்களில் பதிவு செய்ய வேண்டும். இல்லையென்றால் அவர்கள் மீது அபராதம், சிறை தண்டனை உள்ளிட்ட நடவடிக்கைள் மேற்கொள்ளப்படும்.
நீங்கள் தாமாக வெளியேறினால் பாதுகாப்பானது. நீங்கள் விரும்பும் விமானத்தில் பயணம் செய்ய சலுகை கிடைக்கும். நீங்களாகவே வெளியேறும் பட்சத்தில் அமெரிக்காவில் சம்பாதித்த பணத்தை நீங்களே வைத்துக்கொள்ள முடியும். நாங்களாகவே வெளியேற்றாமல் நீங்களே வெளியேறினால் எதிர்காலத்தில் சட்டப்படி அமெரிக்காவுக்கு வர முடியம். இல்லாவிட்டால் அமெரிக்காவுக்கு வர நிரந்தரமாக தடை விதிக்கப்படும்.
இந்த முடிவு அமெரிக்காவில் எச்.1-பி மாணவர் விசா பெற்றவர்களை நேரடியாக பாதிக்காது. எச்-1 பி. விசாவில் உள்ள ஒருவர் வேலையை இழந்து இருந்தால் அவர்கள் குறிப்பிட்ட காலத்துக்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
அமெரிக்க அரசின் இந்த அதிரடி உத்தரவு வெளிநாட்டவர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
முன்னதாக அமெரிக்க குடியேறிகள், எச்-1பி விசாவில் பணியாற்றுபவர்கள், கிரீன் கார்டு வைத்திருப்பவர்கள் ஆகியோருக்கு புதிய விதி அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி அவர்கள் தங்கள் சட்டப்பூர்வ அந்தஸ்துக்கான ஆதாரத்தை எப்போதும் எடுத்துச் செல்ல வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
- சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும் சொத்துக்களின் மதிப்பு வேகமாக உயர்ந்து வருகிறது.
- உரிமையாளர்களுக்கு தெரியாமலேயே பல சொத்துகள் போலி ஆவணங்கள் மூலம் அபகரிக்கப்படுகின்றன.
சென்னை:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சொத்துகள் தொடர்பாக நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் இருந்தாலும், அந்த வழக்குகளில் நீதிமன்றங்கள் எந்த உத்தரவும் பிறப்பிக்காத நிலையில், அந்த சொத்துகளை பத்திரப்பதிவு செய்யலாம் என்று சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு பத்திரப்பதிவுத்துறை ஆணையிட்டிருக்கிறது. பத்திரப்பதிவுத்துறையின் இந்த நடவடிக்கை மிகவும் ஆபத்தானது.
வழக்குகளில் சிக்கியுள்ள சொத்துகளையும் பத்திரப்பதிவு செய்யலாம் என்பதற்காக பத்திரப்பதிவுத்துறை கூறியுள்ள காரணங்கள் ஏற்க முடியாதவை.
பத்திரப்பதிவுத்துறைக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதைத் தடுக்க வேண்டும் என்பதற்காக சர்ச்சைக்குரிய, நீதிமன்ற வழக்குகளில் சிக்கியுள்ள சொத்துகளையெல்லாம் பதிவு செய்தால், அதனால் ஏற்படும் விளைவுகளை நினைத்துப்பார்க்கவே அச்சமாக உள்ளது.
சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும் சொத்துகளின் மதிப்பு வேகமாக உயர்ந்து வருகிறது. அதைப்போலவே பிறருடைய சொத்துகள் அபகரிக்கப்படுவதும் அதிகரித்து வருகிறது. இத்தகைய தருணத்தில் பத்திரப்பதிவுகள் மிகவும் கவனமாகவும், எச்சரிக்கையுடனும் செய்யப்பட வேண்டும். வருவாயை மட்டுமே முதன்மை நோக்கமாகக் கொண்டு பத்திரப்பதிவுத்துறை செயல்படக்கூடாது.
உரிமையாளர்களுக்கு தெரியாமலேயே பல சொத்துகள் போலி ஆவணங்கள் மூலம் அபகரிக்கப்படுகின்றன. அவ்வாறு அபகரித்த சொத்துகளை ஒருவர் இன்னொருவருக்கு விற்க முயலும் போது, அதை எதிர்த்து சொத்தின் உண்மையான உரிமையாளர் வழக்கு தொடரும் நிலையில், அந்த வழக்கில் தீர்ப்பு வரும் வரை சொத்தை பதிவு செய்யாமல் இருப்பது தான் சரியானத் தீர்வு ஆகும். மாறாக, அந்த சொத்து தொடர்பான வழக்கில் நீதிமன்றங்கள் தீர்ப்பளிக்கவில்லை என்பதற்காக சொத்து பத்திரப்பதிவு செய்யப்பட்டால், மோசடி செய்தவர் பெரும் லாபத்துடன் தப்பி விடுவார். சொத்தின் உரிமையாளரும், அதை வாங்கியவரும், வாங்குவதற்கு கடன் கொடுத்த வங்கிகளும் தான் பாதிக்கப்படுவார்கள். இதை பத்திரப்பதிவுத்துறை உணர வேண்டும்.
வழக்குகளில் சிக்கிய வில்லங்க சொத்துகளை பதிவு செய்ய பத்திரப்பதிவுத்துறை அனுமதித்தால், அது சொத்துகளை அபகரிக்கும் செயலை ஊக்குவிப்பதாகவே அமையும். அத்தகைய அநீதிக்கு தமிழக அரசும், பத்திரப் பதிவுத்துறையும் துணைபோகக் கூடாது.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.