என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விடுமுறை மறுப்பு"

    • சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான பள்ளிகளும் நாளை பணி நாளாக செயல்படும்.
    • வெள்ளிக்கிழமை பாட கால அட்டவணைப்படி செயல்படும் என்று பள்ளிக்கல்வி துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளி, தனியார் பள்ளிகளுக்கு தேர்வு நடைபெற்று வருகிறது.

    சனிக்கிழமையான நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

    இந்நிலையில், சென்னை மாவட்டத்தில் நாளை அரசு, தனியார் உள்பட அனைத்துக் பள்ளிகளும் வழக்கம்போல் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெளியிட்டுள்ள அறிக்கையில், " சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான பள்ளிகளும் ((அரசு/ அரசு உதவிபெறும் / ஆதி திராவிட /சென்னை/ தனியார் உயர்நிலை/மேல்நிலைப் பள்ளி ) நாளை (மார்ச் 22) அன்று பணி நாளாக செயல்படவும் மற்றும் வெள்ளிக்கிழமை பாட கால அட்டவணைப்படி செயல்படும் என்று பள்ளிக்கல்வி துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    • அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழாவையொட்டி பல்வேறு மாநில அரசுகள் பொது விடுமுறை அறிவித்தன.
    • விடுமுறை தராத விரக்தியில் ஒருவர் தனது வேலையை ராஜினாமா செய்தது அனைவர் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

    லக்னோ:

    அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா கடந்த 22-ம் தேதி கோலாகலமாக நடைபெற்றது. கோவில் திறப்பு விழா மற்றும் பிராண பிரதிஷ்டை நிகழ்வானது நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் எல்இடி திரைகள் மூலம் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.

    இதற்கிடையே, ராமர் கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு பல்வேறு மாநில அரசுகள் பொது விடுமுறை அறிவித்தன. ஒரு சில தனியார் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு வேலை நேரத்தில் சலுகைகள் அறிவித்தன.

    இந்நிலையில், ராமர் கோவில் திறப்பு விழா நாளன்று விடுமுறை தராததால் வேதனை அடைந்த ஒருவர் தனது வேலையை ராஜினாமா செய்துள்ளது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

    வேலை பார்த்த நிறுவனத்தின் பொது மேலாளர் விடுப்பு அளிக்க மறுத்ததால் வேலையை விட்டுவிட்டேன் என அந்த நபர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இதைக் கண்ட நெட்டிசன்கள் பலர் அவருக்கு ஆதரவான கருத்துக்களை பதிவிட்டனர்.

    ×