என் மலர்
நீங்கள் தேடியது "Chennai Rains"
- கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் நாளை 4 மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
- இதில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் அடங்கும்.
சென்னை:
வடகிழக்கு பருவமழைத் தொடங்கியது முதலே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் நேற்று தொடர் மழை பெய்தது.
இதற்கிடையே, மழைப்பொழிவு நவம்பர் 4-ம் தேதி வரை நீடிக்கும் என்றும், நவம்பர் 1-ம் தேதியில் இருந்து மழையின் தீவிரம் அதிகரிக்கும் எனவும், வட தமிழகத்தில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
அதன்படி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது.
இந்நிலையில், கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என மாவட்ட கலெக்டர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
- சென்னையில் இரவு முழுவதும் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது.
- கனமழை எச்சரிக்கையால் சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
சென்னை:
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக சென்னையில் நகரின் ஒருசில பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் இடிமின்னலுடன் கூடிய மிதமான முதல் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று அறிவித்தது.
கனமழை எச்சரிக்கையால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில், சென்னையில் எழும்பூர், புரசைவாக்கம், வேப்பேரி, பெரியமேடு, திருவல்லிக்கேணி, பட்டினப்பாக்கம், அயனாவரம், கீழ்ப்பாக்கம், சேத்துப்பட்டு, அண்ணாநகர், வில்லிவாக்கம், பெசன்ட் நகர், திருவான்மியூர் உள்பட நகரின் பெரும்பாலான இடங்களில் கனமழை நீடித்தது.
மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் மழை பெய்து வருவதால் பல்வேறு இடங்களில் சாலையில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகினர். இந்த மழை இன்றும் நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- 155 கிலோமீட்டர் நீளத்திற்கு மழைநீர் வடிகால் பணிகள் நிறைவடைந்துள்ளது
- 400 மோட்டர்கள் வைத்து தண்ணீரை வெளியேற்றும் பணிகளும் நடைபெறுகின்றன.
வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னையின் பல்வேறு பகுதிகளில் நேற்று முதல் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை ரிப்பன் மாளிகையில் அமைக்கப்பட்டுள்ள மழை தொடர்பான பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறையை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, சென்னை மேயர் பிரியா மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

அப்போது, செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் கே.என்.நேரு கூறியதாவது:- சென்னையில் இதுவரை 155 கிலோமீட்டர் நீளத்திற்கு மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளது. 75 சதவிகிதம் பணிகள் முடிவடைந்துள்ளன. மரம் அகற்றுவது, மின்கம்பம் அகற்றுவது, மெட்ரோ ரெயில் பணிகள் போன்ற காரணங்களால் சில இடங்களில் இந்த பணிகள் தாமதமானது.
கடந்த ஆண்டு தண்ணீர் தேங்கிய இடங்களில் இந்தாண்டு தண்ணீர் தேங்கவில்லை. கடந்த ஆண்டு மழையால் பாதிக்கப்பட்ட இடங்கள் இந்த ஆண்டு சுத்தமாக உள்ளதாக பொதுமக்கள் பாராட்டும் அளவிற்கு சென்னை மாநகராட்சி மழைநீர் வடிகால் பணிகளை செய்துள்ளது. 75 சதவிகித பணிகள் நிறைவடைந்துள்ளன. எஞ்சிய பணிகளையும் நிறைவு செய்ய ஆயத்தமாகியுள்ளோம். சென்னையில் 400 மோட்டர்கள் வைத்து தண்ணீர் தேங்கும் இடங்களில் தண்ணீரை வெளியேற்றும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- தொடர் மழையால் சென்னையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
- வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து கனமழை கொட்டி வருகிறது.
சென்னை:
வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து கனமழை கொட்டி வருகிறது. சென்னையில் இன்று காலை ஓரளவு வெயில் அடித்தது.
இந்நிலையில், மாலையில் இருந்து திடீரென கனமழை கொட்டியது. மெரினா, அடையாறு, சாந்தோம், ஜெமினி, தேனாம்பேட்டை, எழும்பூர், புரசைவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை கொட்டி வருகிறது. புறநகர் பகுதிகளிலும் கனமழை பெய்தது.
மேலும், சென்னையில் அடுத்த 2 மணி நேரத்திற்கு ஒரு சில பகுதிகளில் கனமழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தகவல் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் விடுமுறை அறிவித்துள்ளார்.
- இன்று முதல் 14-ந்தேதி வரை பெரும்பாலான இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தகவல்
- சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர்.
சென்னை:
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வரும் நிலையில், வங்கக் கடலில் உருவாகி உள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தொடர்ந்து மழைக்கு வாய்ப்பு உள்ளது. காற்றழுத்த தாழ்வு பகதி வலுவடைய உள்ளதால், தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 14-ந்தேதி வரை 5 நாட்களுக்கு பெரும்பாலான இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று கடலோர தமிழகம், உள்மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் இன்று மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது. தலைநகர் சென்னையில் அடுத்த சில நாட்களுக்கு கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டது.
சென்னையில் இன்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மாலையில் பரவலாக மழை பெய்யத் தொடங்கியது. எழும்பூர், மயிலாப்பூர், பட்டினப்பாக்கம், பெரியமேடு, அண்ணாசாலை, திருவல்லிக்கேணி வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இடி மின்னலுடன் கன மழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர். முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. சென்னையில் அடுத்த 3 மணிநேரத்திற்கு இடியுடன் கூடிய மழை தொடரும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
- மாண்டஸ் புயல் தீவிர புயலாக வலுவடைந்து மாமல்லபுரம் அருகே நாளை கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- மரங்களின் அருகாமையில் நிற்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி அறிவுறுத்தி உள்ளது.
சென்னை:
தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து புயலாக மாறி உள்ளது. மாண்டஸ் என பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் தீவிர புயலாக வலுவடைந்து மாமல்லபுரம் அருகே நாளை கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, வட தமிழகம், புதுச்சேரிக்கு கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக சென்னையில் மெரினா, பெசன்ட் நகர் போன்ற கடற்கரை பகுதிகளுக்கு செல்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்றும், காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்பதால், மரங்களின் அருகாமையில் நிற்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்றும் மாநகராட்சி அறிவுறுத்தி உள்ளது.
கனமழை எச்சரிக்கை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், விழுப்புரம், கடலூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
- மாண்டஸ் புயல் தீவிர புயலாக வலுவடைந்து மாமல்லபுரம் அருகே நாளை கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- தமிழகம் மற்றும் புதுவையில் பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
சென்னை:
வங்கக் கடலில் உருவாகி உள்ள மாண்டஸ் புயல், மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது. இன்னும் சில மணி நேரத்தில் மாண்டஸ் புயல் அதிதீவிர புயலாக வலுப்பெற்று நாளை நள்ளிரவில் மாமல்லபுரம் அருகே கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 65 கிமீ முதல் 85 கிமீ வரை வேகத்தில் பலத்த காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அத்துடன் தமிழகம் மற்றும் புதுவையில் பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
மாண்டஸ் புயல் நெருங்கி வருவதால், சென்னை, எண்ணூர், காட்டுப்பள்ளி துறைமுகங்களில் 6ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. கடலூர், நாகை, காரைக்கால், புதுச்சேரி துறைமுகங்களில் 5ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
கனமழை எச்சரிக்கை காரணமாக நாளை பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம், கடலூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, அரியலூர், திருவாரூர், பெரம்பலூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.
இதேபோல் புதுச்சேரி, காரைக்காலிலும் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை கல்வித்துறை அமைச்சர் நமச்சிவயம் வெளியிட்டுள்ளார்.
- சென்னையில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது.
- இன்று அதிகாலை முதல் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.
சென்னை:
சென்னையில் கடந்த ஓரிரு நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனால் கோடை வெப்பம் சற்று தணிந்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான, மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்தது.
இந்நிலையில், சென்னையில் இன்று அதிகாலை காற்றுடன் கூடிய மழை பெய்தது. எழும்பூர், புரசைவாக்கம், சென்ட்ரல் உள்ளிட்ட நகரின் பல பகுதிகளில் அதிகாலை மழை பெய்து வருகிறது.
- சென்னையில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது
- குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளுக்கு மீனவர்கள் செல்லவேண்டாம் என அறிவுறுத்தல்.
சென்னை:
தமிழகம், புதுச்சேரியின் ஒரு சில இடங்களில் இன்று முதல் வரும் 31ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வெப்பச்சலனம் காரணமாக நீலகிரி, கோவை, சேலம், நாமக்கல், திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, கடலூரில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையைப் பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யவும் வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்றும் நாளையும், குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். கேரள-தென் கர்நாடக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல், லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். எனவே, இந்த இரண்டு நாட்களிலும் மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
- இன்று பிற்பகல் கருமேகங்கள் சூழ்ந்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் திடீரென மழை பெய்தது.
- மேற்கு திசை காற்று மற்றும் வெப்பச்சலனத்தின் காரணமாக கனமழை பெய்துள்ளது
அக்னி நட்சத்திர காலம் நிறைவடைந்த போதிலும் தமிழகத்தில் வெப்பம் தணியவில்லை. சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், சென்னையில் இன்று சட்டென்று வானிலையில் மாற்றம் ஏற்பட்டது. இன்று பிற்பகல் கருமேகங்கள் சூழ்ந்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் திடீரென மழை பெய்தது. செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளில் கனமழை பெய்தது. வண்டலூர், பெருங்களத்தூர், தி.நகர், கிண்டி, கோயம்பேடு, நெற்குன்றம் உள்ளிட்ட இடங்களிலும் கனமழை பெய்தது.
மேற்கு திசை காற்று மற்றும் வெப்பச்சலனத்தின் காரணமாக கனமழை பெய்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. கனமழையால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் நிலவி வருவதால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
- சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தற்போது கனமழை பெய்து வருகிறது.
சென்னை:
மேற்கு திசை காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக இன்று (11.06.2023) மற்றும் நாளை (12.06.2023) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
எழும்பூர், வேப்பேரி, புரசைவாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று அதிகாலை பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.
- வெயிலின் தாக்கத்தால் தவித்துப்போன மக்கள் இந்த திடீர் மழையால் நிம்மதி அடைந்தனர்.
சென்னை:
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
இதற்கிடையே, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவில் இருந்தே தூரல் மழை பெய்தது. நேற்று காலை லேசான மழை பெய்ய தொடங்கியது. மதியம் வரை மழை நீடித்தது. இதனால் சென்னை நகரே குளிர்ந்து போனது.
இந்நிலையில், இன்று அதிகாலை முதல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.
எழும்பூர், புரசைவாக்கம், வேப்பேரி, அண்ணாசாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும், புறநகர் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.
கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கத்தால் தவித்துப்போன மக்கள், இந்த திடீர் மழையால் நிம்மதி அடைந்துள்ளனர்.