என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொலை"

    • மகள் மீதான பாசத்தில் நாயை சற்று அதிகமாகவே தாக்கினார்.
    • வழக்குப்பதிவு செய்த வாழப்பாடி போலீசார், குமாரை விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

    வாழப்பாடி:

    இன்றைய நவீன உலகில் மொபைல் போன் பயன்படுத்துகிற பெரும்பாலானோர் வாட்ஸ்-அப், முகநூல், இன்ஸ்டாகிராம், டுவிட்டர், யூ-டியூப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் அன்றாட நிகழ்வுகளை யதார்த்தமாக பதிவு செய்து வருகிறார்கள். அதுபோன்று 7 மாதங்களுக்கு முன்பு சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலான வீடியோவால் தொழிலாளி கைதாகி கம்பி எண்ணும் நிலைக்கு கொண்டு வந்துவிட்டது.

    சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த அத்தனூர்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளி குமார் (வயது 46). இவர் செல்லப்பிராணியாக நாய் வளர்த்து வந்தார். குமாரின் மகள் அந்த நாயை கொஞ்சி விளையாடுவது வழக்கம்.

    7 மாதங்களுக்கு முன்பு தெருவோர வெறிநாய் ஒன்று கடித்ததில் அந்த வளர்ப்பு நாய்க்கு வெறி பிடித்ததாக கூறப்படுகிறது. அப்போது குமாரின் மகளை நாய் கடித்தது. இதனால் ஆத்திரமடைந்த குமார் அந்த நாயை கோபத்தில் அடித்தார். மகள் மீதான பாசத்தில் நாயை சற்று அதிகமாகவே தாக்கினார். இதில் அந்த நாய் இறந்தது.

    இந்த சம்பவத்தை அதே பகுதியை சேர்ந்த வாலிபர்கள் சிலர் வீடியோவாக எடுத்து சமூக ஊடகங்களில் பதிவிட்டனர். சென்னை திருவள்ளூர் பகுதியை சேர்ந்த பிராணிகள் நல அமைப்பின் தலைவர் விக்னேஷ், இதுபற்றி வாழப்பாடி போலீசில் புகார் செய்தார்.

    இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த வாழப்பாடி போலீசார், குமாரை விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தனர். பின்பு அவர் ஆத்தூர் 2-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு அருண்குமார் முன்பாக ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட்டுவிடம் குமார் மகளை நாய் கடித்ததால் ஏற்பட்ட காயத்திற்கு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற ஆவணங்களை பார்த்தார். இதையடுத்து கூலித்தொழிலாளி குமாரை மாஜிஸ்திரேட்டு அருண்குமார் ஜாமீனில் விடுதலை செய்தார்.

    • ஸ்ரீதரை சிகிச்சைக்காக மதனப்பள்ளி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
    • மதனப்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து மம்தாவை கைது செய்தனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், அன்னமய்யா மாவட்டம், பூஜாரி வாரி பள்ளியை சேர்ந்தவர் ஸ்ரீதர் (வயது 36). ராணுவ வீரர். இவரது மனைவி மம்தா. இவர்கள் இருவரும் கல்லூரியில் படிக்கும்போதே காதலித்து வந்தனர்.

    கடந்த 2006-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

    கடந்த 2019-ம் ஆண்டு ஸ்ரீதர் ராணுவ பணியில் இருந்து ஓய்வு பெற்றார். தினமும் மது குடித்து விட்டு மனைவியை அடித்து துன்புறுத்தி வந்தார்.

    இதுகுறித்து மம்தா போலீசில் புகார் செய்தார்.போலீசார் கணவன் மனைவி இருவரையும் அழைத்து சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

    கணவரின் தொல்லை தாங்க முடியாததால் கடந்த 4 நாட்களுக்கு முன்பு மம்தா தனது தாய் வீட்டிற்கு சென்றார்.

    இந்த நிலையில் நேற்று ஸ்ரீதர் மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்தார். கோடை வெப்பம் அதிகமாக இருந்ததால் அறையின் கதவை திறந்து வைத்துவிட்டு தூங்கினார்.

    நள்ளிரவில் மம்தா கணவர் வீட்டிற்கு வந்தார். வீட்டின் மாடிக்கு சென்று அங்கு அறையில் தூங்கிக் கொண்டிருந்த கணவர் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்து விட்டு சென்று விட்டார்.

    உடல் முழுவதும் தீ பற்றி எரிந்ததால் ஸ்ரீதர் வலியால் அலறி துடித்தார். ஸ்ரீதரின் அலறல் சத்தம் கேட்ட அவரது பெற்றோர் மாடிக்கு ஓடிவந்து அவர் மீது தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். ஸ்ரீதரை சிகிச்சைக்காக மதனப்பள்ளி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக பெங்களூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே ஸ்ரீதர் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து மதனப்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து மம்தாவை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×