என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tag 94317"

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகவுள்ள 'விக்ரம்' படத்திற்காக கமல் அதிரடி முடிவெடுத்துள்ளார்.
    மாஸ்டர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வெளியாக இருக்கும் திரைப்படம் 'விக்ரம்'. கமல்ஹாசன் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதில் சூர்யா கவுரவ வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்தை கமல்ஹாசன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் இப்படம் மீது பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

    புர்ஜ் கலீஃபா
    புர்ஜ் கலீஃபா

    விக்ரம் திரைப்படம் வருகிற ஜூன் 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் விக்ரம் படத்திற்காக கமல் எடுத்த அதிரடி முடிவை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். 'விக்ரம்' படத்தின் டிரைலரை உலகின் உயரமான கட்டிடமான, துபாயில் உள்ள புர்ஜ் கலீஃபா கட்டிடத்தில் உள்ள மிகப்பெரிய திரையில் இன்று இரவு 8.10 மணிக்கு திரையிடப் திட்டமிடப்பட்டுள்ளது. இதனை அதிகாரப்பூர்வமாகத் தனது சமூக வலைதளப்பக்கத்தில் படக்குழு அறிவித்துள்ளது. 
    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகவுள்ள 'விக்ரம்' படத்தில் சூர்யாவின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.
    மாஸ்டர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வெளியாக இருக்கும் திரைப்படம் 'விக்ரம்'. கமல்ஹாசன் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதில் சூர்யா கவுரவ வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்தை கமல்ஹாசன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். விக்ரம் திரைப்படம் வருகிற ஜூன் 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் இப்படம் மீது பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. 'விக்ரம்' படத்தின் டிரைலரை உலகின் உயரமான கட்டிடமான, துபாயில் உள்ள புர்ஜ் கலீஃபா கட்டிடத்தில் உள்ள மிகப்பெரிய திரையில் இன்று இரவு 8.10 மணிக்கு திரையிட திட்டமிடப்பட்டுள்ளது. 

    விக்ரம்
    விக்ரம்

    இந்நிலையில் 'விக்ரம்' படத்தில் சூர்யாவின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை லோகேஷ் கனகராஜ் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். சில தினங்களுக்கு முன்பு விஜய் சேதுபதி மற்றும் ஃபகத் ஃபாசில் நடிக்கும் கதாபாத்திரத்தின் பெயர்களை குறிப்பிட்டு போஸ்டர்களை படக்குழு வெளியிட்டிருந்தது. தற்போது சூர்யா நடித்துள்ள கதாப்பாத்திரத்தின் பெயர் என்ன என்று ரசிகர்களை கேள்வி கேட்கும் வகையில் இந்த போஸ்டர் இடம்பெற்றிருக்கிறது. இதனுடன் சூர்யாவிற்கு நன்றி தெரிவித்து லோகேஷ் கனகராஜ் இந்த போஸ்டரை வெளியிட்டிருக்கிறார். இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 


    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல், விஜய் சேதுபதி, பகத் பாசில் நடிப்பில் நாளை வெளியாக இருக்கும் படத்தின் புதிய தகவல் வெளியாகியுள்ளது.
    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி நாளை (03.06.2022) வெளியாக இருக்கும் திரைப்படம் 'விக்ரம்'. கமல்ஹாசன் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதில் சூர்யா கவுரவ வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்தை கமல்ஹாசன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். 

    பொம்மை
    பொம்மை

    விக்ரம் திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் இயக்குனர் ராதா மோகன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி சங்கர் நடித்துள்ள ‘பொம்மை’ படத்தின் டிரைலரை உலகம் முழுக்க 600 திரை அரங்குகளில் 'விக்ரம்' படத்துடன் வெளியாகிறது என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

    ‘பொம்மை’ படத்தின் டிரைலரை நேற்று சிவகார்த்திகேயன் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
    கமல் நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள விக்ரம் திரைப்படம் குறித்து மக்களின் கருத்து.
    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி இன்று (03.06.2022) திரையரங்குகளில் வெளியாகி இருக்கும் திரைப்படம் 'விக்ரம்'. கமல்ஹாசன் கதாநாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதில் சூர்யா கவுரவ வேடத்தில் நடித்துள்ளார். 

    இப்படம் குறித்து ரசிகர்கள் அவர்களின் கருத்துக்களை மாலை மலருக்கு பகிர்ந்துள்ளனர்.



    கமல் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள விக்ரம் திரைப்படத்தை ரசிகர்களுடன் லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட படக்குழு பார்த்து ரசித்தனர்.
    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி இன்று (03.06.2022) திரையரங்குகளில் வெளியாகி இருக்கும் திரைப்படம் 'விக்ரம்'. கமல்ஹாசன் கதாநாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதில் சூர்யா கவுரவ வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்தை கமல்ஹாசன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்திருக்கிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். 

    திரையரங்கில் விக்ரம் படக்குழு
    திரையரங்கில் விக்ரம் படக்குழு

    இந்நிலையில் திரையரங்குகளில் இன்று வெளியாகி இருக்கும் விக்ரம் படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ், இசையமைப்பாளர் அனிருத், நடிகர்கள் நரேன், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலர் ரசிகர்களுடன் அமர்ந்து விக்ரம் படத்தை பார்த்து ரசித்தனர். 

    திரையரங்கில் விக்ரம் படக்குழு
    திரையரங்கில் விக்ரம் படக்குழு

    திரையரங்கிற்கு படம் பார்க்க வந்த லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட படக்குழுவினரை ரசிகர்கள் கரகோஷத்துடன் வரவேற்றனர். இதுகுறித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
    உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் இருக்கும் கமல்ஹாசனுக்கு பதிலாக பிரபல நடிகை ஒருவர் பிக்பாஸ் நிகழ்ச்சியை இன்று தொகுத்து வழங்கி இருக்கிறார்.
    தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். அவருடைய எளிமையான அணுகுமுறையும், விஷய ஞானமும் இந்த நிகழ்ச்சிக்கு அதிக பார்வையாளர்களைக் கொண்டுவந்து சேர்த்தது.

    இந்நிலையில் கமல்ஹாசன் கொரோனா வைரஸ் பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். அவர் தொகுத்து வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியை கமலுக்குப் பதில் தொகுப்பாளராக நியமிக்க, ரம்யா கிருஷ்ணன், சூர்யா, விஜய் சேதுபதி, மாதவன், ஸ்ருதிஹாசன் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடந்ததாக கூறப்பட்டது.

    ரம்யா கிருஷ்ணன்
    ரம்யா கிருஷ்ணன்

    இறுதியாக ரம்யா கிருஷ்ணன் ஒப்புக்கொண்டதாக கூறப்பட்டது. இந்நிலையில், இன்று வெளியான புரமோவில் வீடியோ மூலம் போட்டியாளர்களிடம் பேசிய கமல், எனக்கு உதவியாக எனது தோழி ரம்யா கிருஷ்ணன் எனக்கு உதவியாக இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என்று கூறி அறிமுகம் படுத்தி இருக்கிறார். 

    ஏற்கனவே ரம்யா கிருஷ்ணன் தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
    கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருக்கும் கமலை, நடிகர் ரஜினிகாந்த் போன் மூலம் தொடர்பு கொண்டு நலம் விசாரித்து இருக்கிறார்.
    நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் சென்னை போருரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அமெரிக்கப் பயணம் முடிந்து திரும்பிய பின் லேசான இருமல் இருந்ததாகவும், பரிசோதனை செய்ததில் கோவிட் தொற்று உறுதியானதால் மருத்துவமனையில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன் என்றும் கமல் தெரிவித்து இருந்தார். 

    ரஜினி - கமல்

    இதையடுத்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ‘அன்பு நண்பர் கலைஞானி கமல்ஹாசன் அவர்கள் கொரோனா தொற்றிலிருந்து விரைந்து மீண்டு, தனது பணிகளைத் தொடர விழைகிறேன் என்று கூறினார். இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த், போன் மூலம் கமலை தொடர்பு கொண்டு உடல் நலம் குறித்து விசாரித்து இருக்கிறார்.

    நடிகர், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், தான் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக கூறப்படுகிறது.
    தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமானது பிக்பாஸ் நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இதுவரை தமிழில் நான்கு சீசன்கள் முடிந்துள்ளன. தற்போது 5-வது சீசன் நடைபெற்று வருகிறது. 4 சீசனை தொடர்ந்து 5வது சீசனையும் கமல் தொகுத்து வழங்கி வருகிறார்.

    இந்நிலையில், நடிகர் கமலுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இதனால், வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல் கலந்துக் கொள்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் கொரோனா பாதிப்பு காரணமாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து சில வாரங்கள் கமல் விலகுவதாக கூறப்படுகிறது.

    கமல்

    இதையடுத்து வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை யார் தொகுத்து வழங்குவார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. 
    நடிகர் கமல் தனது பிறந்தநாளை முன்கூட்டியே விக்ரம் படக்குழுவினருடன் கேக் வெட்டி கொண்டாடி இருக்கிறார்.
    கமல் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘விக்ரம்’. லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் இப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

    படக்குழுவினர்

    நடிகர் கமல் தனது பிறந்தநாளை நவம்பர் 7 ஆம் தேதி கொண்டாட இருக்கிறார். இதையொட்டி விக்ரம் படக்குழுவினர் இன்றே படப்பிடிப்பில் கேக் வெட்டி கொண்டாடி இருக்கிறார்கள். இந்த கொண்டாட்டத்தின் போது, இயக்குனர் லோகேஷ் கனகராஜ், நடிகர் பகத் பாசில், நடன இயக்குனர் சாண்டி, நடிகை காயத்ரி, ஒளிப்பதிவாளர் கிரிஷ் கங்காதரன், ராஜ்கமல் பிலிம்ஸ் நாராயணன், இணை தயாரிப்பாளர் மஹேந்திரன் மற்றும் படக்குழுவினர் பங்கேற்றனர்.
    பிரபல தொலைக்காட்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கு பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் பிரபல காமெடி நடிகை ஜாங்கிரி மதுமிதா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
    கமல்ஹாசனின் புரோமோ வீடீயோ வெளியானது முதலே பிக் பாஸ் வீட்டுக்குள் செல்லும் போட்டியாளர் யார் என்பது குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது. இந்த நிலையில், பிக்பாஸ் மூன்றாவது சீசனில் ‘பிக் பாஸ்’ வீட்டுக்குள் செல்லும் முதல் போட்டியாளரை உறுதி செய்திருக்கிறார்கள்.

    அந்தப் போட்டியாளர் `ஓ.கே. ஓ.கே.’ படத்தில் நடிகர் சந்தானத்துக்கு ஜோடியாக நடித்த காமெடி நடிகை `ஜாங்கிரி’ மதுமிதா. சின்னத் திரையில் `சின்ன பாப்பா பெரிய பாப்பா’வில் காமெடி செய்தவர். சில மாதங்களுக்கு முன்பு உதவி இயக்குனர் மோசஸ் ஜோயலைத் திருமணம் செய்துகொண்டார்.



    `மணமாகி கொஞ்ச நாளிலேயே கணவரை மூன்று மாதங்கள் பிரிந்து எப்படி பிக் பாஸ் வீட்டுக்கு’ என்றால், ``அவங்களுக்கு சவால்னா ரொம்ப பிடிச்ச வி‌ஷயம். இந்த வாய்ப்பை ஒரு சவாலா எடுத்து பண்ணணும்னு நினைக்கிறாங்க. தவிர, இந்த வாய்ப்பு எல்லாருக்கும் கிடைக்கறதில்லையே! பொதுவாகவே வர்ற வாய்ப்புகளைத் தவற விடக்கூடாதுன்னு நினைக்கிறவங்க அவங்க’’ என்கின்றனர் மதுமிதாவுக்கு நெருக்கமானவர்கள்.
    பார்த்திபனின் ஒத்த செருப்பு பட விழாவில் கலந்துக் கொண்ட கமல், ஒரு செருப்பு வந்து விட்டது; இன்னொரு செருப்புக்காக காத்திருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.
    பார்த்திபன் இயக்கத்தில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘ஒத்த செருப்பு’. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் கமல், இயக்குனர் சங்கர் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.

    இதில் கமல் பேசும்போது, எனக்கு காந்தியின் வரலாற்று புத்தகம் கொடுத்தார்கள். அதை நான் திரும்பி திரும்பி படித்தேன். அதில், காந்தி அவர்கள் ரெயிலில் செல்லும் போது, ஒரு செருப்பு தவறி விழுந்துவிட்டது. உடனே அவர் மற்றொரு செருப்பையும் கழற்றி வீசி விட்டார். ஏன் என்று கேட்டதற்கு ஒரு செருப்பு இருந்தால் யாருக்கும் உபயோகப்படாது என்று கூறியிருக்கிறார். அவரின் ரசிகர் நான்.



    அவர் போட்ட செருப்பில் ஒன்று வந்து சேர்ந்துவிட்டது. இன்னொன்றும் வரும். அதற்கான அருகதை எனக்கு உண்டு. அதற்காக காத்துக் கொண்டிருக்கிறேன். என் மேல் செருப்பு வீசியதை பலரும் பயந்து பயந்து பேசுகிறார்கள். இதில் ஒரு பயமும் இல்லை. செருப்பு போட்டவருக்கே அவமானம்’ என்றார்.
    அரசியலுக்கு வந்துப்பார் என்று சவால் விட்டவர்கள் இப்போது ‘ஏன்டா வந்த? என்று கேட்கின்றனர். 'என்னத்தான்டா பிராப்ளம் உங்களுக்கெல்லாம்?' என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார். #KamalHaasaan #MNM
    சென்னை:

    மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொண்டதுடன் தனது டுவிட்டர் பக்கத்தின் மூலமாக பல்வேறு கருத்துகளையும் வெளியிட்டு வருகிறார்.

    அவ்வகையில், இன்று மாலை தனது டுவிட்டர் மற்றும் பேஸ்புக் பக்கத்தில் ஒரு வீடியோ பதிவினை அவர் வெளியிட்டுள்ளார்.

    ஆதிக்கவாதிகளும் வேண்டாம்- அடிமைகளும் வேண்டாம்! ஊழலற்ற ஆட்சி அமைய எங்களுக்கு வாக்களியுங்கள்! என்னும் அதிமுக விளம்பரத்தையும், மத்தியில் மீண்டும் மோடியின் ஆட்சி வர வேண்டும் என்ற பாஜக விளம்பரத்தையும் இந்த வீடியோவில் விமர்சிக்கும் கமல்ஹாசன் இவர்-அவர் என்று பாராமல் அரசியல் கட்சி தலைவர்களை சகட்டுமேனிக்கு விளாசித் தள்ளியுள்ளார்.

    மக்கள் பிரச்சனைக்காக நான் போராட்டம் நடத்தி கேள்வி கேட்டபோது, 'நீ யார்டா அதெல்லாம் கேட்பதற்கு, நீ ஒரு நடிகன், உனக்கு என்ன தெரியும்? களத்தில் இறங்கிப்பார்’ என்று சவால் விட்டார்கள். 

    சரி, சொல்றாங்களே.. இறங்கித்தான் பார்ப்போமே என்று நான் உசுரா நெனச்சிக்கிட்டிருந்த தொழிலை விட்டுட்டு இங்கே வந்தா, இப்போ ‘ஏன்டா வந்த? என்று கேட்கின்றனர்.

    ‘என்னத்தான்டா பிராப்ளம் உங்களுக்கெல்லாம்?’ இதை நான் கேட்கிறேன் என கமல்ஹாசன் ஆவேசம் பொங்க கேள்வி எழுப்பியுள்ளார். #KamalHaasaan #Kamalquestions #KamalPoliticalEntry #MNM

    அவரது வீடியோ பதிவைக்காண..,



    ×