என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tag 94331"

    கடந்த சில மாதங்களுக்கு முன் டுவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்குவதாக முன்வந்தார்.
    கலிபோர்னியா:

    கடந்த 2006-ஆம் ஆண்டு ஜாக் டோர்ஸி டுவிட்டர் நிறுவனத்தை உருவாக்கியதில் இருந்து அதன் சி.இ.ஓ-ஆக செயல்பட்டு வந்தார். 

    இநிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அவர் தனது சி.இ.ஓ பொறுப்பை துறந்தார். அதன்பின் இந்தியரான பராக் அகர்வால் டுவிட்டரின் புதிய சி.இ.ஓ.வாக நியமிக்கப்பட்டார். அதன் பிறகு சமீபத்தில் டுவிட்டர் நிறுவனத்தை வாங்க டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் சிஇஓ எலான் மஸ்க் முன்வந்தார். 

    ஆனால் எலான் மஸ்கிற்கும், டுவிட்டர் சி.இ.ஓ பராக் அகர்வாலுக்கும் தொடர்ந்து கருத்து வேறுபாடு நிலவி வந்தது. பராக் அகர்வால் டுவிட்டரில் உள்ள போலி கணக்குகள் குறித்து உண்மையை மறைத்து வருவதாக குற்றம்சாட்டிய எலான் மஸ்க், டுவிட்டரை வாங்கும் ஒப்பந்தத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்தார். 

    இந்நிலையில் பராக் அகர்வாலுக்கு பதில், ஜாக் டோர்ஸி மீண்டும் சி.இ.ஓ பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியது. 

    இந்த நிலையில் டுவிட்டர் இயக்குனர் குழுவில் இருந்து விலகுவதாக ஜாக் டோர்ஸி தெரிவித்துள்ளார். இனி மீண்டும் சிஇஓ பொறுப்புக்கு மீண்டும் வரமாட்டேன் என்பதையும் டோர்ஸி தெளிவு படுத்தியுள்ளார். 
    பயனாளிகளின் தகவல்களை விளம்பர நிறுவனங்களுடன் பகிர்ந்து கொண்டு ஆன்லைன் விளம்பரங்களை அனுப்ப டுவிட்டர் நிறுவனம் உதவியதாக புகார் எழுந்தது.

    வாஷிங்டன்:

    உலகம் முழுவதும் டுவிட்டரை கோடிக்கணக்கானோர் பயன்படுத்தி வருகிறார்கள். 2013-ம் ஆண்டு மே மாதம் முதல் 2019-ம் ஆண்டு செப்டம்பர் வரை டுவிட்டர் நிறுவனம், பயனாளிகளின் கணக்கு பாதுகாப்புக்காக, அவர்களின் தொலைபேசி எண்கள், இ-மெயில் முகவரிகளை சேகரித்தது.

    ஆனால் பயனாளிகளின் தகவல்களை விளம்பர நிறுவனங்களுடன் பகிர்ந்து கொண்டு ஆன்லைன் விளம்பரங்களை அனுப்ப டுவிட்டர் நிறுவனம் உதவியதாக புகார் எழுந்தது.

    இதையடுத்து அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள கூட்டாட்சி கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

    டுவிட்டர் நிறுவனத்தின் இந்த நடைமுறையால் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டனர். அதே வேளையில் டுவிட்டரின் முதன்மை வருவாய் அதிகரித்தது என்று பெடரல் டிரேட் கமிஷன் தலைவர் லினா காக் கோர்ட்டில் தெரிவித்தார்.

    இந்த புகாரில் 150 மில்லியன் அமெரிக்க டாலர் அபராதம் (இந்திய மதிப்பு ரூ.1100 கோடி) செலுத்த வேண்டும் என்றும் பயனாளிகளின் தரவுகளை பாதுகாக்க புதிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் பெடரல் டிரேட் கமிஷன் தெரிவித்துள்ளது.

    கமிஷனின் இந்த கோரிக்கையை கூட்டாட்சி கோர்ட்டு அங்கீகரிக்க வேண்டும். அப்படி அங்கீகரித்தால் டுவிட்டர் நிறுவனம் ரூ.1100 கோடி அபராதம் செலுத்த வேண்டும்.

    டுவிட்டர் நிறுவனத்தின் தலைமை பதவி தனக்கு கிடைத்த கவுரவம் என பராக் அகர்வால் கூறி உள்ளார்.
    நியூயார்க்:

    கோடிக்கணக்கான பயனர்களைக் கொண்டுள்ள டுவிட்டர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி (சிஇஓ) ஜேக் டோர்சி இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், விரிவான கடிதத்தையும் பதிவு செய்துள்ளார். 

    ‘கிட்டத்தட்ட 16 வருடங்கள் நிறுவனத்தின் இணை நிறுவனர் முதல் சிஇஓ வரை பல பொறுப்புகளை ஏற்றுள்ளேன். தறபோது வெளியேறுவதற்கான நேரம் இது. ஒரு நிறுவனம் நிறுவனர் தலைமையில் இருப்பதன் முக்கியத்துவம் பற்றி நிறைய பேசப்படுகிறது’என டோர்சி கூறியிருந்தார்.

    ஜேக் டோர்சி பதவி விலகியதை அடுத்து, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தொழில்நுட்ப நிர்வாகி பராக் அகர்வால் டுவிட்டரின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    தனது நியமனம் குறித்து அகர்வால் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், டுவிட்டர்  தலைமை பதவி தனக்கு கிடைத்த கவுரவம் என்று கூறி உள்ளார். மேலும் டோர்சியின் தொடர்ச்சியான வழிகாட்டுதல் மற்றும் அவரது நட்புக்கு நன்றிக்கடன் பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். 

    ஐஐடி பாம்பே மற்றும் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் படித்த அகர்வால், 10 ஆண்டுகளுக்கு முன்பு டுவிட்டரில் சேர்ந்தார். 
    கடந்த ஆண்டே சிஇஓ பொறுப்பில் இருந்து டோர்சியை விடுவிக்க டுவிட்டர் நிறுவன பங்குதாரர் நிறுவனமான எலியட் மேனேஜ்மென்ட் முடிவு செய்தது.
    நியூயார்க்:

    கோடிக்கணக்கான பயனர்களைக் கொண்டுள்ள டுவிட்டர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக (சிஇஓ) பதவி வகித்தவர் ஜேக் டோர்சி. 45 வயதான டோர்சி, அவரது டிஜிட்டல் பேமெண்ட்ஸ் நிறுவனமான ஸ்கொயர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் பணியாற்றுகிறார்.

    இந்நிலையில், டுவிட்டர் தலைமை பொறுப்பில் இருந்து ஜேக் டோர்சி பதவி விலக உள்ளதாகவும், டோர்சி மற்றும் டுவிட்டர் நிர்வாகக்குழு அடுத்த சிஇஓ குறித்து முடிவு செய்துவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால், இந்த தகவல் குறித்து டுவிட்டர் தரப்பில் அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப்படவில்லை. 

    ஜேக் டோர்சி நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில், “நான் டுவிட்டரை விரும்புகிறேன்” என்று பதிவிட்டிருந்தார். அவரது பதிவை 59 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர்.

    இந்நிலையில், டுவிட்டர் சிஇஓ பொறுப்பில் இருந்து விலகுவதாக ஜேக் டோர்சி இன்று அறிவித்துள்ளார். இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில், விரிவான கடிதத்தையும் பதிவு செய்துள்ளார். அவருக்கு பிறகு பராக் அக்ரவால், சிஇஓ பொறுப்பை ஏற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    கடந்த ஆண்டே சிஇஓ பொறுப்பில் இருந்து டோர்சியை விடுவிக்க டுவிட்டர் நிறுவன பங்குதாரர் நிறுவனமான எலியட் மேனேஜ்மென்ட் முடிவு செய்தது. ஆனால், அவர்களுக்கிடையே இருந்த ஒப்பந்தம் காரணமாக, டோர்சியை நீக்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இரண்டு நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பை டோர்சி வகிப்பதை, எலியட் மேனேஜ்மென்ட் உரிமையாளர் பால் சிங்கர் எதிர்த்தார். அத்துடன், இரண்டில் ஒரு பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார். அதன்படி டோர்சி இன்று பதவி விலகி உள்ளார்.

    டோர்சியின் ராஜினாமா  குறித்த தகவல் வெளியானபின்னர் பங்குச்சந்தையில் டுவிட்டர் பங்குகள் இன்று 11 சதவீதம் உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.
    இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியை குறித்து உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் கூறிய சர்ச்சைக்குரிய பதிவை டுவிட்டர் நிறுவனம் நீக்கியது. #YogiAdiyanath #Twitter #MuslimLeague
    புதுடெல்லி:

    உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியை குறித்து சர்ச்சைக்குரிய பதிவு ஒன்றை தனது டுவிட்டர் தளத்தில் கடந்த 5-ந்தேதி வெளியிட்டு இருந்தார். மேலும் மாநிலம் முழுவதும் பிரசாரத்தின் போதும் இந்த கருத்தை அவர் தெரிவித்து வந்தார்.

    இது தொடர்பாக தேர்தல் கமிஷனில் புகார் செய்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியினர், ஆதித்யநாத்தின் டுவிட்டர் கணக்கை முடக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    இதைத்தொடர்ந்து ஆதித்யநாத்தின் சர்ச்சைக்குரியை பதிவை நீக்குமாறு டுவிட்டர் நிறுவனத்துக்கு தேர்தல் கமிஷன் அறிவுறுத்தல் வழங்கியது. இதை ஏற்றுக்கொண்ட டுவிட்டர் நிறுவனம், ஆதித்யநாத்தின் பதிவை நேற்று நீக்கியது.

    முன்னதாக தனது பிரசாரத்தில் தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டு வந்த யோகி ஆதித்யநாத்துக்கு 3 நாட்கள் பிரசாரம் செய்ய தேர்தல் கமிஷன் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது. #YogiAdiyanath #Twitter #MuslimLeague 
    முக்கிய செய்தியுடன் நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளதாக பிரதமர் மோடி இன்று வெளியிட்ட டுவிட்டர் பதிவால் அரசியல் களம் பரபரப்பானது. #Modi #LSPolls
    புதுடெல்லி:

    பாராளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 11ல் தொடங்கி மே 6-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதற்காக தேர்தல் ஆணையம் விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது. அரசியல் கட்சிகள் தீவிர களப்பணியில் ஈடுபட்டுள்ளனர். அந்தந்த கட்சிகள் சார்பில் தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டு, பல்வேறு கவர்ச்சிகரமான வாக்குறுதிகளுடன் மக்களை நேரடியாக சந்தித்து வாக்கு சேகரித்து வருகின்றனர்.

    பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித் ஷா உள்ளிட்ட முன்னணி தலைவர்கள் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசாரம் செய்ய உள்ளனர்.


    இந்த சூழ்நிலையில், பிரதமர் மோடி இன்று திடீரென டுவிட்டரில் ஒரு செய்தியை வெளியிட்டார். இன்று காலை 11.45 மணி முதல் நண்பகல் 12 மணி வரை முக்கிய செய்தியுடன் நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளதாக அதில் கூறியிருந்தார். தனது உரையை தொலைக்காட்சி, வானொலி அல்லது சமூக ஊடகத்தில் பார்க்கும்படி கோரிக்கை விடுத்திருந்தார்.

    தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பிரதமர் மோடி நாட்டு மக்கள் மத்தியில் பேச உள்ளது, பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்படி என்ன முக்கிய தகவலை மோடி வெளியிட உள்ளார்? என்று பலரும் பலவிதமான யூகங்களை வெளியிட்டனர். இதனால் அரசியல் களம் பரபரப்பானது. #Modi #LSPolls
    பாராளுமன்ற நிலைக்குழு ‘டுவிட்டர்’ அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியது. அப்போது தேர்தலில் வெளிநாட்டு சக்திகள் தலையிடுவதை தவிர்க்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. #ElectionCommission #Twitter #ParliamentaryPanel
    புதுடெல்லி:

    பாராளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவையின் 31 எம்.பி.க்களை கொண்ட தகவல் தொழில்நுட்பத்துக்கான நிலைக்குழு நேற்று ‘டுவிட்டர்’ சமூக வலைத்தளத்தின் உலக பொதுக் கொள்கை பிரிவு துணைத்தலைவர் காலின் குரோவெல் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியது.

    நிலைக்குழுவின் தலைவர் அனுராக் தாகூர் தலைமையில் இந்த கூட்டம் சுமார் 3½ மணி நேரம் நடைபெற்றது. கூட்டத்தில், டுவிட்டர் தலைமை நிர்வாக அதிகாரி ஜாக் டோர்சே எழுதிய கடிதம் வாசிக்கப்பட்டது. தொடர்ந்து நிலைக்குழு உறுப்பினர்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு டுவிட்டர் அதிகாரிகள் பதில் அளித்தனர். மேலும் பல கேள்விகளுக்கு 10 நாட்களுக்குள் எழுத்து மூலமாக பதில் அளிக்கும்படியும் கூறப்பட்டுள்ளது.



    நடைபெற இருக்கும் நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் சில பிரச்சினைகளை தீர்க்க இந்திய தேர்தல் ஆணையத்துடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டதாக அனுராக் தாகூர் தெரிவித்தார். அதேபோல, தேர்தலை வலுவிழக்கச் செய்யும் பணிகளில் ஈடுபடுவதோ, தேர்தலில் வெளிநாட்டு சக்திகள் தலையிடுவதோ தவிர்க்கப்பட வேண்டும் என்றும் டுவிட்டர் அதிகாரிகளிடம் வலியுறுத்தப்பட்டது.

    இதர சமூக வலைத்தளங்களான பேஸ்புக், வாட்ஸ்-ஆப், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றின் உயர் அதிகாரிகள் மார்ச் 6-ந் தேதி இந்த நிலைக்குழு முன்பு ஆஜராக வேண்டும் என்றும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அனுராக் தாகூர் கூறினார். #ElectionCommission #Twitter #ParliamentaryPanel 
    புதுச்சேரியில் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் தர்ணா போராட்டம் நடத்தி வரும் நிலையில், காக்கை யோகா என்ற தலைப்பில் கவர்னர் கிரண்பேடி வெளியிட்ட டுவிட்டர் பதிவு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. #Narayanasamy #GovernorKiranbedi
    புதுச்சேரி:

    புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள், கவர்னரை கண்டித்து கடந்த 13-ந் தேதி முதல் கவர்னர் மாளிகை முன்பு தர்ணா போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த போராட்டம் தொடங்கிய மறுநாள் கவர்னர் திடீரென டெல்லி புறப்பட்டு சென்று விட்டார். தற்போது போராட்டம் மேலும் விரிவடைந்து நிலைமை மோசமாகி வரும் நிலையில், கவர்னர் கிரண்பேடி தனது டெல்லி நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு நேற்று புதுவை திரும்பினார்.

    இந்நிலையில் கவர்னர் கிரண் பேடி இன்று தனது டுவிட்டர் பக்கத்தில், தர்ணா போராட்டம் தொடர்பாக ‘காக்கை தர்ணா’ என்ற பெயரில் புகைப்படங்களுடன் கருத்தை பதிவு செய்துள்ளார். இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.



    கவர்னர் மாளிகை வளாகத்தில் உள்ள தரை விரிப்பில் பூனை ஒன்று உருண்டு புரள்கிறது. இதேபோல் மரக்கிளையில் இரண்டு காகங்கள் அமர்ந்திருக்கின்றன. இந்த படங்களுடன் தனது கருத்தை கிரண் பேடி பதிவு செய்துள்ளார். அதில், ‘யோகா அனைவருக்கும் பொதுவானது. தர்ணா செய்வதும் யோகாதான். ஆனால், எந்த நோக்கத்திற்காக தர்ணா செய்கிறோம் என்பதைப் பொருத்து, அது என்ன ஆசனம் என்பதை கூற முடியும்’ என்று குறிப்பிட்டுள்ளார். இந்த டுவிட்டர் பதிவு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. #Narayanasamy #GovernorKiranbedi
    உ.பி. மாநிலத்தின் கிழக்குப்பகுதி பொதுச்செயலாளராக இன்று பொறுப்பேற்கும் பிரியங்கா காந்தி டுவிட்டரில் தொடங்கிய கணக்கை சில மணி நேரத்தில் 70 ஆயிரம் அபிமானிகள் பின்தொடர்ந்தனர். #PriyankaonTwitter #Priyanka #PriyankaTwitter
    புதுடெல்லி:

    உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் கிழக்குப்பகுதி காங்கிரஸ் பொதுச்செயலாளராக இன்று பொறுப்பேற்கும் பிரியங்கா காந்திக்கு லக்னோ நகரில் உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இதற்கிடையில், பிரியங்கா காந்தியை இனி டுவிட்டரிலும் பின்தொடரலாம் என அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் இன்று பகல் 12 மணிவாக்கில் ஒரு பதிவு வெளியிடப்பட்டிருந்தது.


    அந்த புதிய டுவிட்டர் பக்கத்தில் பிரியங்கா காந்தி இன்னும் எந்த கருத்தும் பதிவு செய்யப்படாத நிலையில் இன்று மாலை 4 மணிக்குள் 70 ஆயிரம் அபிமானிகள் அவரை பின்தொடர்ந்துள்ளனர். #PriyankaonTwitter #Priyanka #PriyankaTwitter
    சமூக வலைத்தளங்களை பயன்படுத்தும் அரசியல்வாதிகளின் வரிசையில், பகுஜன் சமாஜ் கட்சித்தலைவர் மாயாவதியும் தற்போது இணைந்துள்ளார். #Mayawati #Twitter
    லக்னோ

    பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களின் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், அவற்றின் நன்மைகளை பலதரப்பு மக்களும் பயன்படுத்தி வருகின்றனர். இதற்கு அரசியல்வாதிகளும் விதிவிலக்கல்ல. மாநில கட்சிகள் முதல் தேசிய கட்சிகளின் தலைவர்கள் வரை பெரும்பாலான அரசியல்வாதிகள் சமூக வலைத்தளங்களில் இணைந்து வருவதுடன், நாட்டு நடப்பு குறித்த தங்கள் கருத்துக்களை அவற்றில் பகிர்ந்தும் வருகின்றனர்.



    இப்படி சமூக வலைத்தளங்களை பயன்படுத்தும் அரசியல்வாதிகளின் வரிசையில், பகுஜன் சமாஜ் கட்சித்தலைவர் மாயாவதியும் தற்போது இணைந்துள்ளார். டுவிட்டரில் கணக்கு ஒன்றை தொடங்கி உள்ள அவர், அதை தீவிரமாக பயன்படுத்தவும் முடிவு செய்துள்ளார். இந்த தகவலை கட்சியும் அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது.

    பொதுமக்களுடனும், ஊடகத்தினருடனும் பேசுவதற்காக மாயாவதி, டுவிட்டரில் இணைந்திருப்பதாக அதில் கூறப்பட்டு உள்ளது. #Mayawati #Twitter
    உலக அளவில் டுவிட்டரில் செல்வாக்கு மிக்க ஆண்கள் மற்றும் பெண்களின் பட்டியல் வெளியாகி உள்ளது. அந்த பட்டியலில் ஏ.ஆர். ரகுமானின் பெயரும் உள்ளது. #ARRahman
    உலக அளவில் டுவிட்டரில் செல்வாக்கு மிக்க ஆண்கள் மற்றும் பெண்களின் பட்டியல் வெளியாகி உள்ளது. அந்த பட்டியலில் ஏ.ஆர். ரகுமானின் பெயரும் உள்ளது. டுவிட்டரில் செல்வாக்கு மிக்க ஆண்கள் பட்டியலில் இங்கிலாந்தை சேர்ந்த பாடகர் லியாம் பெய்ன் முதல் இடத்தை பிடித்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் 2 -வது இடத்தில் உள்ளார்.

    பிரபல அமெரிக்க பாடகர் ஜஸ்டின் பீபர் 3வது இடத்தில் உள்ளார். முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா 4வது இடத்திலும், கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ 5வது இடத்திலும் உள்ளனர். 10 பெயர்கள் அடங்கிய இந்த பட்டியலில் அமிதாப்புக்கு 8வது இடமும், ரகுமானுக்கு 10வது இடமும் கிடைத்துள்ளது. #ARRahman
    தேர்தல் விதிமுறைகளை மீறாமல் நடந்து கொள்ளுங்கள் என முகநூல் உள்ளிட்ட சமூக ஊடகங்களுக்கு தலைமை தேர்தல் கமிஷன் அவசர உத்தரவை பிறப்பித்துள்ளது. #ElectionCommission #Twitter #Facebook
    புதுடெல்லி:

    மத்திய பிரதேசம் மற்றும் மிசோரம் மாநில சட்டசபைகளுக்கு நேற்று தேர்தல் நடந்தது. 2 நாட்களுக்கு முன்பே அங்கு தேர்தல் பிரசாரம் முடிந்த நிலையில் வாக்குப்பதிவு நாளான நேற்று பா.ஜனதாவும், காங்கிரசும் இணையதள சமூக ஊடகங்கள் மூலம் விளம்பரம் செய்ததாக புகார் தெரிவிக்கப்பட்டது.



    இதைத்தொடர்ந்து தலைமை தேர்தல் கமிஷன் டுவிட்டர், முகநூல் உள்ளிட்ட சமூக ஊடகங்களுக்கு ஒரு அவசர உத்தரவை பிறப்பித்தது. அதில், ‘தேர்தல் பிரசாரம் முடிந்த பிறகு எந்த விதத்திலும் தேர்தல் தொடர்பான விளம்பரங்களும், பிரசாரங்களும் இடம்பெறக்கூடாது. எனவே தேர்தல் விதிமுறைகளை மீறாமல் நடந்து கொள்ளுங்கள்’ என்று கூறப்பட்டு உள்ளது. #ElectionCommission #Twitter #Facebook 
    ×