search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அது என்ன முக்கிய தகவல்? பிரதமர் மோடியின் டுவிட்டர் பதிவால் பரபரப்பான அரசியல் களம்
    X

    அது என்ன முக்கிய தகவல்? பிரதமர் மோடியின் டுவிட்டர் பதிவால் பரபரப்பான அரசியல் களம்

    முக்கிய செய்தியுடன் நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளதாக பிரதமர் மோடி இன்று வெளியிட்ட டுவிட்டர் பதிவால் அரசியல் களம் பரபரப்பானது. #Modi #LSPolls
    புதுடெல்லி:

    பாராளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 11ல் தொடங்கி மே 6-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதற்காக தேர்தல் ஆணையம் விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது. அரசியல் கட்சிகள் தீவிர களப்பணியில் ஈடுபட்டுள்ளனர். அந்தந்த கட்சிகள் சார்பில் தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டு, பல்வேறு கவர்ச்சிகரமான வாக்குறுதிகளுடன் மக்களை நேரடியாக சந்தித்து வாக்கு சேகரித்து வருகின்றனர்.

    பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித் ஷா உள்ளிட்ட முன்னணி தலைவர்கள் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசாரம் செய்ய உள்ளனர்.


    இந்த சூழ்நிலையில், பிரதமர் மோடி இன்று திடீரென டுவிட்டரில் ஒரு செய்தியை வெளியிட்டார். இன்று காலை 11.45 மணி முதல் நண்பகல் 12 மணி வரை முக்கிய செய்தியுடன் நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளதாக அதில் கூறியிருந்தார். தனது உரையை தொலைக்காட்சி, வானொலி அல்லது சமூக ஊடகத்தில் பார்க்கும்படி கோரிக்கை விடுத்திருந்தார்.

    தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பிரதமர் மோடி நாட்டு மக்கள் மத்தியில் பேச உள்ளது, பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்படி என்ன முக்கிய தகவலை மோடி வெளியிட உள்ளார்? என்று பலரும் பலவிதமான யூகங்களை வெளியிட்டனர். இதனால் அரசியல் களம் பரபரப்பானது. #Modi #LSPolls
    Next Story
    ×