என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » tag 94462
நீங்கள் தேடியது "ஸ்மார்ட்போன்"
ஐகூ நிறுவனம் இந்திய சந்தையில் புதிய நியோ சீரிஸ் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த மாடலில் ஸ்னாப்டிராகன் 870 பிராசஸர் வழங்கப்பட இருக்கிறது.
ஐகூ நிறுவனம் நியோ6 5ஜி ஸ்மார்ட்போனிற்கான டீசரை கடந்த ஒரு வார காலமாக வெளியிட்டு வருகிறது. அதன்படி ஐகூ நியோ6 5ஜி மாடல் இந்தியாவில் மே 31 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருப்பதாக ஐகூ அறிவித்து இருக்கிறது. இதற்கான டீசர் அமேசான் இந்தியா வலைதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.
ஐகூ நியோ6 5ஜி மாடல் டிசைன், நிற ஆப்ஷன்கள் மற்றும் கேமரா லே-அவுட் விவரங்களை தெரிவிக்கும் டீசரை ஐகூ நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது. எனினும், ஐகூ நியோ6 இந்திய வேரியண்ட் அம்சங்கள் பற்றி இதுவரை எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. ஐகூ நியோ6 5ஜி மாடல் இரண்டு நிறங்களில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. இந்த மாடல் 12GB ரேம், 256GB மெமரி கொண்டிருக்கிறது.
வரும் நாட்களில் புதிய ஐகூ நியோ6 5ஜி மாடல் விவரங்கள் ஒவ்வொன்றாக வெளியிடப்படலாம். ஏற்கனவே சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட ஐகூ நியோ6 SE ஸ்மார்ட்போனின் ரி பிராண்டு செய்யப்பட்ட மாடல் தான் இந்தியாவில் ஐகூ நியோ6 5ஜி பெயரில் விற்பனை செய்யப்பட உள்ளது. சீன வேரியண்டில் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது.
ஐகூ நியோ6 5ஜி மாடலில் மேம்பட்ட UFS 3.1 ஸ்டோரேஜ், கேஸ்கேட் கூலிங் சிஸ்டம், 4D கேம் வைப்ரேஷன் மற்றும் லீனியர் மோட்டார் வழங்கப்படுகிறது. மற்ற அம்சங்களை பொருத்தவரை ஐகூ நியோ6 5ஜி மாடலில் 6.62 இன்ச் FHD+ AMOLED டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட், 4700mAh பேட்டரி, 80W பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது.
குவால்காம் நிறுவனம் சமீபத்தில் புதிய பிளாக்ஷிப் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸரை அறிமுகம் செய்தது. பல்வேறு ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் இந்த பிராசஸர் கொண்ட மாடல்களை அறிமுகம் செய்ய இருக்கின்றன.
ஸ்மார்ட்போன் சிப்செட்களை உற்பத்தி செய்து வழங்கும் குவால்காம் நிறுவனம், சமீபத்தில் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸரை அறிமுகம் செய்தது. இது குவால்காம் நிறுவனத்தின் அதிநவீன பிளாக்ஷிப் பிராசஸர் ஆகும்.
புது பிராசஸர் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து ஒன்பிளஸ், ரியல்மி மற்றும் அசுஸ் என பல்வேறு முன்னணி நிறுவனங்கள் தங்களது புதிய ஸ்மார்ட்போன் மாடல்கள் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிளாக்ஷிப் பிராசஸர் கொண்டிருக்கும் என அறிவித்து வருகின்றன.
அதன் படி அசுஸ் நிறுவனத்தின் புதிய கேமிங் ஸ்மார்ட்போன் ரோக் போன் 6 சீரிஸ் மாடல்களில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதே போன்று ஒன்பிளஸ் நிறுவனமும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர் கொண்ட ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் உருவாகி வருவதை உறுதிப்படுத்தி இருக்கிறது. மேலும் புது ஸ்மார்ட்போன் 2022 மூன்றாவது காலாண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என அறிவித்து இருக்கிறது.
ஒன்பிளஸ் மற்றும் அசுஸ் நிறுவனங்களை போன்றே ரியல்மி நிறுவனமும் தனது GT2 மாஸ்டர் எக்ஸ்ப்ளோரர் எடிஷன் ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர் வழங்கப்படும் என அறிவித்து உள்ளது. இவை தவிர மற்ற ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்களும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர் கொண்ட போன்களை அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்து உள்ளன.
இன்பினிக்ஸ் நிறுவனம் இந்தியாவில் புதிய ஹாட் 12 பிளே ஸ்மார்ட்போனினை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்துள்ளது. இதில் 6000mAh பேட்டரி வழங்கப்பட்டு உள்ளது.
இன்பினிக்ஸ் நிறுவனத்தின் புதிய புதிய ஹாட் 12 பிளே ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. அம்சங்களை பொருத்தவரை இன்பினிக்ஸ் ஹாட் 12 பிளே ஸ்மார்ட்போனில் 6.82 இன்ச் ஹெச்.டி. பிளஸ் டிஸ்ப்ளே, 80Hz ரிப்ரெஷ் ரேட் வழங்கப்பட்டு இருக்கிறது.
புகைப்படங்களை எடுக்க 13MP பிரைமரி கேமரா, டெப்த் சென்சார், 8MP செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் யுனிசாக் T610 பிராசஸர், 4GB ரேம், 3GB விர்ச்சுவல் ரேம், பின்புறம் கைரேகை சென்சார், 6000mAh பேட்டரி மற்றும் 10W சார்ஜிங் வழங்கப்பட்டுள்ளது.
இன்பின்க்ஸ் ஹாட் 12 பிளே அம்சங்கள்:
- 6.82 இன்ச் 1640x720 பிக்சல் HD+ IPS LCD ஸ்கிரீன்
- பாண்டா MN228 கிளாஸ் பாதுகாப்பு
- ஆக்டா கோர் 12nm UNISOC T610 பிராசஸர்
- மாலி-G52 GPU
- 4GB LPDDR4x ரேம்
- 64GB (eMMC 5.1) மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
- ஆண்ட்ராய்டு 11 மற்றும் XOS 10
- 13MP பிரைமரி கேமரா, f/1.8, குவாட் எல்.இ.டி. பிளாஷ்
- டெப்த் சென்சார்
- 8MP செல்பி கேமரா, f/2.0, டூயல் எல்.இ.டி. பிளாஷ்
- பின்புறம் கைரேகை சென்சார்
- 3.5mm ஆடியோ ஜாக், DTS ஆடியோ
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 802.11 ac (2.4GHz + 5GHz), ப்ளூடூத் 5.1
- யு.எஸ்.பி. டைப் சி
- 6000mAh பேட்டரி
- 10W சார்ஜிங்
புதிய இன்பினிக்ஸ் ஹாட் 12 பிளே ஸ்மார்ட்போன் ரேசிங் பிளாக், ஹாரிசான் புளூ, ஷேம்பெயின் கோல்டு மற்றும் டேலைட் கிரீன் நிறங்களில் கிடைக்கிறது. இதன் அறிமுக விலை ரூ. 8 ஆயிரத்து 499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை மே 30 ஆம் தேதி துவங்குகிறது.
மோட்டோரோலா நிறுவனம் ஸ்னாப்டிபாகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர் கொண்ட தனது ஸ்மார்ட்போனின் வெளியீடு பற்றி அப்டேட் செய்து இருக்கிறது. இந்த மாடலில் 200MP கேமரா வழங்கப்பட இருக்கிறது.
குவால்காம் நிறுவனம் கடந்த வாரம் தனது ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸரை அறிமுகம் செய்தது. ஃபிளாக்ஷிப் மாடல்களுக்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ள புது பிராசஸர் கொண்டு ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வதாக ஏராளமான நிறுவனங்கள் ஏற்கனவே அறிவித்து விட்டன. இந்த வரிசையில், தற்போது மோட்டோரோலா நிறுவனமும் இணைந்து இருக்கிறது.
மோட்டோரோலா வெளியிட்டு இருக்கும் புது டீசர்களின் படி மோட்டோரோலா நிறுவனமும் புதிய ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர் கொண்ட ஸ்மார்ட்போனினை உருவாக்கி வருவது தெரியவந்துள்ளது. இத்துடன் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனிற்கான டீசரையும் மோட்டோரோலா வெளியிட்டு இருக்கிறது.
ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர் மற்றும் 200MP பிரைமரி கேமரா கொண்ட மோட்டோரோலா ஸ்மார்ட்போன் மாடல்கள் ஜூலை மாத வாக்கில் அறிமுகமாகிறது. ஏற்கனவே வெளியான தகவல்களின் படி இந்த ஸ்மார்ட்போனில் 200MP சாம்சங் ISOCELL HP1 சென்சார் வழங்கப்படும் என கூறப்பட்டது. இத்துடன் இதே ஸ்மார்ட்போன் விவரங்கள் மோட்டோரோலா பிராண்டியர் 22 பெயரில் பலமுறை வெளியாகி உள்ளன.
முதற்கட்டமாக சீனாவில் இந்த ஸ்மார்ட்போன் மோட்டோரோலா எட்ஜ் X30 ப்ரோ பெயரில் அறிமுகம் செய்யப்பட்டு அதன்பின் மோட்டோ எட்ஜ் 30 அல்ட்ரா பெயரில் மற்ற நாடுகளில் அறிமுகமாகும் என கூறப்படுகிறது.
சியோமியின் ரெட்மி பிராண்டு புதிய நோட் 11 சீரிஸ் ஸ்மார்ட்போனினை சீன சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் 5000mAh பேட்டரி வழங்கப்பட்டு உள்ளது.
சியோமி நிறுவனம் சீன சந்தையில் புதிய ரெட்மி நோட் 11SE ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. இது குறைந்த விலை 5ஜி ஸ்மார்ட்போன் மாடல் ஆகும். இதில் 6.5 இன்ச் FHD+ டிஸ்ப்ளே, 30/50/60/90Hz அடாப்டிவ் ரிப்ரெஷ் ரேட், 8MP செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்த ஸ்மார்ட்போன் ஆக்டாகோர் மீடியாடெக் டிமென்சிட்டி 700 5ஜி பிராசஸர், 5000mAh பேட்டரி, 18W பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டுள்ளது. இத்துடன் 48MP பிரைமரி கேமரா, 2MP டெப்த் சென்சார், அதிகபட்சம் 6GB ரேம், 128GB UFS 2.2 ஸ்டோரேஜ் வழங்கப்பட்டு இருக்கிறது.
ரெட்மி நோட் 11SE அம்சங்கள்:
- 6.5 இன்ச் 2400x1080 பிக்சல் FHD+ LCD ஸ்கிரீன், அடாப்டிவ் 30/50/60/90Hz ரிப்ரெஷ் ரேட்
- ஆக்டாகோர் மீடியாடெக் டிமென்சிட்டி 700 பிராசஸர்
- மாலி-G57 MC2 GPU
- 4GB / 8GB LPDDR4x ரேம்
- 128GB (UFS 2.2) மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- டூயல் சிம் ஸ்லாட்
- ஆண்ட்ராய்டு 11 மற்றும் MIUI 12
- 48MP பிரைமரி கேமரா, f/1.79, LED பிளாஷ்
- 2MP போர்டிரெயிட் சென்சார், f/2.4
- 8MP செல்பி கேமரா, f/2.0
- பக்கவாட்டில் கைரேகை சென்சார்
- 3.5mm ஆடியோ ஜாக், ஹை-ரெஸ் ஆடியோ
- 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.1
- யு.எஸ்.பி. டைப் சி
- 5000mAh பேட்டரி
- 18 வாட் பாஸ்ட் சார்ஜிங்
ரெட்மி நோட் 11SE ஸ்மார்ட்போன் ஷேடோ பிளாக் மற்றும் டீப் ஸ்பேஸ் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 999 யுவான் இந்திய மதிப்பில் ரூ. 11 ஆயிரத்து 640 என துவங்குகிறது. இதன் 8GB+128GB மெமரி மாடல் விலை 1299 யுவான் இந்திய மதிப்பில் ரூ. 15 ஆயிரத்து 565 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி M சீரிஸ் 5ஜி ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
சாம்சங் நிறுவனம் விரைவில் தனது கேலக்ஸி M13 5ஜி ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. அதன்படி புதிய கேலக்ஸி M13 5ஜி ஸ்மார்ட்போன் வாட்டர் டிராப் ரக நாட்ச், மூன்று பிரைமரி கேமரா சென்சார்கள், எல்.இ.டி. ஃபிளாஷ் வழங்கப்படுகிறது.
அதிகம் அறியப்படும் டிப்ஸ்டரான எவான் பிளாஸ் சாம்சங் கேலக்ஸி M13 5ஜி ஸ்மார்ட்போனின் ரெண்டர்களை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். அதன்படி இந்த ஸ்மார்ட்போன் மூன்று விதமான நிறங்களில் வெளியாகும் என தெரிகிறது. இத்துடன் வாட்டர் டிராப் ரக நாட்ச் டிஸ்ப்ளே, செங்குத்தாக பொருத்தப்படும் மூன்று கேமரா சென்சார்கள், எல்.இ.டி. ஃபிளாஷ், போனின் இடது புறத்தில் பவர் பட்டன் மற்றும் வால்யூம் ராக்கர்கள் வழங்கப்படுகிறது.
சாம்சங் கேலக்ஸி M13 5ஜி மாடல் விவரங்கள் ஏற்கனவே பலமுறை இணையத்தில் வெளியாகி இருக்கின்றன. இந்த ஸ்மார்ட்போன் சமீபத்தில் எப்.சி.சி. வலைதளத்தில் இடம்பெற்று இருந்தது. அதில் இந்த ஸ்மார்ட்போன் SM-M135M மாடல் நம்பர் கொண்டிருக்கும் என தெரியவந்தது.
இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி சாம்சங் கேலக்ஸி M13 5ஜி 6.5 இன்ச் புல் HD+ டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே, 5000mAh பேட்டரி, 15W ஃபாஸ்ட் சார்ஜிங், 6GB, 128GB மெமரி, ஆண்ட்ராய்டு 11 மற்றும் சாம்சங் ஒன் யு.ஐ. வழங்கப்பட்டு இருக்கிறது.
சியோமி நிறுவனத்தின் புதிய ரெட்மி நோட் 11T ப்ரோ ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீடு பற்றி புது தகவல் இணையத்தில் வெளியாகி உள்ளது.
சியோமி நிறுவனம் ரெட்மி நோட் 11T ப்ரோ சீரிஸ்- ரெட்மி நோட் 11T ப்ரோ மற்றும் நோட் 11T ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் மாடல்களை சமீபத்தில் சீன சந்தையில் அறிமுகம் செய்தது. இந்த நிலையில், இரு மாடல்களின் இந்திய வெளியீடு பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி ரெட்மி நோட் 11T ப்ரோ சீரிஸ் இந்தியாவில் ரெட்மி K50i சீரிஸ் பெயரில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது.
ரெட்மி நோட் 11T ப்ரோ சீரிஸ் ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் போக்கோ X4 GT சீரிஸ் பெயரில் அறிமுகம் செய்யப்படலாம் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. ரெட்மி நோட் 11T ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரெட்மி K50i ப்ரோ பெயரில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது.
ரெட்மி நோட் 11T ப்ரோ மற்றும் நோட் 11T ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன்களில் 6.6 இன்ச் FHD+ LCD டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் இரு மாடல்களிலும் முறையே 120Hz மற்றும் 144Hz ரிப்ரெஷ் ரேட் வழங்கப்பட்டு இருக்கிறது. ரெட்மி நோட் 11T ப்ரோ சீரிசில் மீடியாடெக் டிமென்சிட்டி 8100 பிராசஸர், அதிகபட்சம் 8GB ரேம், 512GB மெமரி வழங்கப்பட்டு உள்ளது.
புகைப்படங்களை எடுக்க ரெட்மி நோட் 11T ப்ரோ சீரிசின் பிரைமரி கேமராவுடன் 8MP அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 2MP மேக்ரோ சென்சார் மற்றும் 16 MP செல்பி கேமரா வழங்கப்பட்டு உள்ளது. ரெட்மி நோட் 11T ப்ரோ ஸ்மார்ட்போனில் 4400mAh பேட்டரி, 67W பாஸ்ட் சார்ஜிங் வசதி, நோட் 11T ப்ரோ பிளஸ் மாடலில் 5080mAh பேட்டரி, 120W பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு உள்ளது.
போக்கோ நிறுவனத்தின் சமீபத்திய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் F4 GT மாடல் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 பிராசஸர் கொண்டிருக்கிறது.
போக்கோ நிறுவனம் விரைவில் பல்வேறு புது ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டு உள்ளது. நேற்று போக்கோ F4 GT ஸ்மார்ட்போன் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. லண்டனில் இந்த ஸ்மார்ட்போனிற்கான முன்பதிவும் துவங்கி நடைபெற்று வருகிறது. ஃபிளாக்ஷிப் மாடல் என்ற வகையில் போக்கோ F4 GT மாடலில் ஏராளமான புது அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.
அம்சங்களை பொருத்தவரை போக்கோ F4 GT மாடலில் 6.67 இன்ச் AMOLED டிஸ்ப்ளே 120Hz ரிப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பு, ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 பிராசஸர், அதிகபட்சம் 12GB ரேம், 512GB மெமரி வழங்கப்பட்டு உள்ளது. புகைப்படங்களை எடுக்க போக்கோ F4 GT மாடலில் 64MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு லென்ஸ், 8MP மேக்ரோ சென்சார், 20MP செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.
போக்கோ F4 GT மாடலில் 4700mAh பேட்டரி, 120W பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. இத்துடன் ஆண்ட்ராய்டு 12 ஓ.எஸ். சார்ந்த MIUI 13 கஸ்டம் ஓ.எஸ். வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் லிக்விட் கூலிங் தொழில்நுட்பம் 3.0 மற்றும் டூயல் வேப்பர் சேம்பர்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஐரோப்பிய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், விரைவில் போக்கோ F4 GT மாடல் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படலாம். எனினும், இதுபற்றி போக்கோ சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை. ஃபிளாக்ஷிப் மாடல் என்பதால், இந்திய சந்தையில் இதன் விலை சற்றே அதிகமாகவே இருக்கும் என தெரிகிறது.
சாம்சங் நிறுவனம் தனது ஸ்மார்ட்போன் மாடல்கள் உற்பத்தியை குறைக்க முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
சாம்சங் நிறுவனம் சர்வதேச அளவில் தனது ஸ்மார்ட்போன் உற்பத்தியை 39 சதவீதம் வரை குறைக்க திட்டமிடுவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம் பட்ஜெட் ரக மாடல்கள் மற்றும் ஃபிளாக்ஷிப் மாடல்கள் பாதிக்கப்பட இருக்கின்றன.
சர்வதேச அளவில் ஸ்மார்ட்போன்களுக்கு ஏற்பட்டுள்ள வரவேற்பு குறைவு, மின்சாதனங்களுக்கான தட்டுப்பாடு மற்றும் ரஷ்யா உக்ரைன் இடையேயான போர் போன்ற காரணங்களால் சாம்சங் நிறுவனம் தனது ஸ்மார்ட்போன் மாடல்கள் உற்பத்தியை குறைக்க முடிவு செய்துள்ளதாக கொரிய செய்தி நிறுவனம் தெரிவித்து உள்ளது.
இந்த ஆண்டு மட்டும் 310 மில்லியன் ஸ்மார்ட்போன்களை உற்பத்தி செய்ய சாம்சங் நிறுவனம் திட்டமிட்டிருந்த நிலையில், தற்போது இந்த எண்ணிக்கையை 280 மில்லியனாக குறைக்க சாம்சங் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது முந்தைய ஆண்டை விட பத்து சதவீதம் குறைவு ஆகும்.
ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரையிலான காலாண்டுடன் ஒப்பிடும் போது இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டு உற்பத்தி 35 சதவீதம் சரிவடையும் என ஷின்ஹன் முதலீட்டு நிறுவன ஆய்வாளர் ஒருவர் தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இரண்டாவது காலாண்டு உற்பத்தியில் பத்து சதவீதம் வரை சரிவு ஏற்படலாம் என அவர் தெரிவித்து இருப்பதாக கூறப்படுகிறது.
சியோமி நிறுவனம் இந்திய சந்தையில் குறைந்த விலை ரெட்மி 5ஜி ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய இருக்கிறது. இது விரைவில் அறிமுகமாகும் என தகவல் வெளியாகி உள்ளது.
சியோமி நிறுவனம் இந்தியாவில் புதிய ரெட்மி 11 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது சியோமி ஏற்கனவே அறிமுகம் செய்த ரெட்மி 10 ஸ்மார்ட்போனின் மேம்பட்ட மாடலாக இருக்கும் என கூறப்படுகிறது.
ரெட்மி நம்பர் சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் 5ஜி கனெக்டிவிட்டியுடன் அறிமுகமாகும் முதல் ஸ்மார்ட்போன் இது என்றும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் மீடியாடெக் டிமென்சிட்டி 700 பிராசஸர், 5000mAh பேட்டரி, 18W பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என கூறப்படுகிறது.
இத்துடன் 6.58 இன்ச் FHD+ 90Hz எல்.சி.டி. டிஸ்ப்ளே, மீடியாடெக் டிமென்சிட்டி 700 பிராசஸர், 4GB ரேம், 64GB இண்டர்னல் மெமரி, 50MP பிரைமரி கேமரா, 2MP டூயல் கேமரா, 5MP செல்பி கேமரா உள்ளிட்ட அம்சங்களை கொண்டு இருக்கும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் பக்கவாட்டில் கைரேகை சென்சார் வழங்கப்படலாம்.
ரெட்மி 11 5ஜி எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்:
- 6.58 இன்ச் 2408x1080 பிக்சல் FHD+ 90Hz ரிப்ரெஷ் ரேட் எல்.சி.டி. டிஸ்ப்ளே
- மீடியாடெக் டிமென்சிட்டி 700 பிராசஸர்
- மாலி G57 MC2 GPU
- 4GB LPDDR4x ரேம், 64GB UFS2.2 இண்டர்னல் மெமரி
- 6GB LPDDR4x ரேம், 128GB UFS2.2 இண்டர்னல் மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 11 மற்றும் MIUI
- 50MP பிரைமரி கேமரா, f/1.8, எல்.இ.டி. ஃபிளாஷ்
- 2MP போர்டிரெயிட் கேமரா, f/2.4
- 5MP செல்பி கேமரா
- பக்கவாட்டில் கைரேகை சென்சார்
- 3.5mm ஆடியோ ஜாக், ஹை-ரெஸ் ஆடியோ
- 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- யு.எஸ்.பி. டைப் சி
-5000mAh பேட்டரி
- 18W பாஸ்ட் சார்ஜிங் வசதி
இந்தியாவில் ரெட்மி 11 5ஜி ஸ்மார்ட்போன் ஜூன் மாத இறுதியில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. இதன் 4GB+64GB மாடல் விலை ரூ. 13 ஆயிரத்து 999 என துவங்கும் என தெரிகிறது.
ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஒன்பிளஸ் ஏஸ் ரேசிங் எடிஷன் ஸ்மார்ட்போன் வேறு பெயரில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இது பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது.
ஒன்பிளஸ் நிறுவனம் இம்மாத துவக்கத்தில் தனது ஒன்பிளஸ் ஏஸ் ரேசிங் எடிஷன் ஸ்மார்ட்போன் மாடலை சீன சந்தையில் அறிமுகம் செய்தது. முன்னதாக ஒன்பிளஸ் ஏஸ் ஸ்மார்ட்போன் 150W பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் அறிமுகம் செய்யப்பட்டு, இதே ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஒன்பிளஸ் 10R பெயரில் அறிமுகம் செய்யப்பட்டது.
இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் ஒன்பிளஸ் 10R லைட் ஸ்மார்ட்போன் விவரங்கள் இந்திய IMEI டேட்டாபேஸ் வலைதளத்தில் இடம்பெற்று இருப்பதாக கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் PGZ110 எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கிறது. அந்த வகையில் விரைவில் ஒன்பிளஸ் ஏஸ் ரேசிங் எடிஷன் ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம்.
ஒன்பிளஸ் ஏஸ் ரேசிங் எடிஷன் அல்லது ஒன்பிளஸ் 10R லைட் மாடலின் இந்திய வெளியீடு பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை. எனினும், இதுபற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது.
அம்சங்களை பொருத்தவரை ஒன்பிளஸ் ஏஸ் ரேசிங் எடிஷன் மாடலில் 6.59 இன்ச் FHD+ LCD டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட், மீடியாடெக் டிமென்சிட்டி 8100 மேக்ஸ் பிராசஸர், மாலி G10 MC6 GPU, 8GB /12GB ரேம், 128GB / 256GB மெமரி, ஆண்ட்ராய்டு 12 சார்ந்த கலர் ஓ.எஸ். போன்ற அம்சங்கள் உள்ளன.
ரெட்மி பிராண்டின் புது பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர் கொண்டிருக்கும். இத்துடன் 2K 120Hz OLED ஸ்கிரீன், டால்பி விஷன் சப்போர்ட், 120W பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படலாம்.
சியோமி நிறுவனத்தின் ரெட்மி பிராண்டு பிப்ரவரி மாத வாக்கில் ரெட்மி K50 கேமிங் எடிஷன் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. அதன் பின் மார்ச் மாதத்தில் ரெட்மி K50 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த வரிசையில், ரெட்மி K50 அல்ட்ரா பெயரில் புது ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது ரெட்மி K50 சீரிசின் டாப் எண்ட் மாடல் என தெரிகிறது.
தற்போதைய தகவல்களின் படி ரெட்மி K50 அல்ட்ரா ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர் வழங்கப்பட இருக்கிறது. சியோமி 12 அல்ட்ரா ஸ்மார்ட்போனிலும் இதே பிராசஸர் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இத்துடன் ரெட்மி K50 மாடலில் வழங்கப்பட்ட 2K 120Hz OLED ஸ்கிரீன், டால்பி விஷன் சப்போர்ட், 120W பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படலாம்.
புதிய ரெட்மி K50 அல்ட்ரா ஸ்மார்ட்போன் இந்த ஆண்டின் இரண்டாவது அரையாண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது. இத்துடன் சியோமி 12 அல்ட்ரா ஸ்மார்ட்போனும் இதே காலக்கட்டத்தில் அறிமுகம் செய்யப்படலாம். எனினும், இது பற்றி இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X