search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாம்சங்"

    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி M சீரிஸ் 5ஜி ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

    சாம்சங் நிறுவனம் விரைவில் தனது கேலக்ஸி M13 5ஜி ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. அதன்படி புதிய கேலக்ஸி M13 5ஜி ஸ்மார்ட்போன் வாட்டர் டிராப் ரக நாட்ச், மூன்று பிரைமரி கேமரா சென்சார்கள், எல்.இ.டி. ஃபிளாஷ் வழங்கப்படுகிறது. 

    அதிகம் அறியப்படும் டிப்ஸ்டரான எவான் பிளாஸ் சாம்சங் கேலக்ஸி M13 5ஜி ஸ்மார்ட்போனின் ரெண்டர்களை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். அதன்படி இந்த ஸ்மார்ட்போன் மூன்று விதமான நிறங்களில் வெளியாகும் என தெரிகிறது. இத்துடன் வாட்டர் டிராப் ரக நாட்ச் டிஸ்ப்ளே, செங்குத்தாக பொருத்தப்படும் மூன்று கேமரா சென்சார்கள், எல்.இ.டி. ஃபிளாஷ், போனின் இடது புறத்தில் பவர் பட்டன் மற்றும் வால்யூம் ராக்கர்கள் வழங்கப்படுகிறது.

     சாம்சங் M13 5ஜி

    சாம்சங் கேலக்ஸி M13 5ஜி மாடல் விவரங்கள் ஏற்கனவே பலமுறை இணையத்தில் வெளியாகி இருக்கின்றன. இந்த ஸ்மார்ட்போன் சமீபத்தில் எப்.சி.சி. வலைதளத்தில் இடம்பெற்று இருந்தது. அதில் இந்த ஸ்மார்ட்போன் SM-M135M மாடல் நம்பர் கொண்டிருக்கும் என தெரியவந்தது. 

    இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி சாம்சங் கேலக்ஸி M13 5ஜி 6.5 இன்ச் புல் HD+ டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே, 5000mAh பேட்டரி, 15W ஃபாஸ்ட் சார்ஜிங், 6GB, 128GB மெமரி, ஆண்ட்ராய்டு 11 மற்றும் சாம்சங் ஒன் யு.ஐ. வழங்கப்பட்டு இருக்கிறது.
    சாம்சங் நிறுவனத்தின் புதிய கேலக்ஸி Z போல்டு 4 மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி உள்ளது.


    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி Z போல்டு 4 ஸ்மார்ட்போனிற்கான ப்ரோடெக்டிவ் கேஸ் புகைப்படங்கள் வெளியாகி இருக்கிறது. அதன்படி புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் அளவீடுகளில் சாம்சங் குறிப்பிடத்தக்க மாற்றங்களை மேற்கொள்ள இருப்பது தெரியவந்துள்ளது.

    தற்போதைய தகவல்களின் படி சாம்சங் கேலக்ஸி Z போல்டு 4 மாடலின் வெளிப்புற ஸ்கிரீன் 23:9 அளவிலும், உள்புற டிஸ்ப்ளே 6:5 அளவிலும் இருக்கும் என கூறப்படுகிறது. அந்த வகையில் இது முந்தைய மாடலை விட அளவில் சிறியதாக இருக்கும் என தெரிகிறது. அளவீடுகள் மட்டுமின்றி புதிய கேலக்ஸி Z போல்டு 4 மாடல் ஓரளவு மெல்லியதாக இருக்கும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

     சாம்சங் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்

    முந்தைய தகவல்களில் கேலக்ஸி S22 சீரிஸ் மாடல்களில் வழங்கப்பட்டு இருக்கும் லென்ஸ் தான் புது கேலக்ஸி Z போல்டு 4 மாடலிலும் வழங்கப்படும் என கூறப்பட்டது. அதன் படி சாம்சங் கேலக்ஸி Z போல்டு 4 மாடலில் 50MP பிரைமரி கேமரா, 12MP அல்ட்ரா வைடு கேமரா, 12MP டெலிபோட்டோ லென்ஸ் என மூன்று பிரைமரி கேமரா சென்சார்கள் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டு இருந்தது. 

    இதே போன்று வெளியான மற்றொரு தகவலில் புதிய கேலக்ஸி Z போல்டு 4 ஸ்மார்ட்போனில் S பென் ஸ்டைலஸ் வசதி வழங்கப்படும் என கூறப்பட்டது. இத்துடன் கேலக்ஸி Z போல்டு 4 மாடலின் டிஸ்ப்ளே, கேலக்ஸி S22 சீரிஸ் மாடல்களில் வழங்கப்பட்டதை விட அதிக ரெசல்யூஷன் கொண்டிருக்கும் என்றும் கூறப்பட்டது.
    சாம்சங் நிறுவனம் தனது ஸ்மார்ட்போன் மாடல்கள் உற்பத்தியை குறைக்க முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    சாம்சங் நிறுவனம் சர்வதேச அளவில் தனது ஸ்மார்ட்போன் உற்பத்தியை 39 சதவீதம் வரை குறைக்க திட்டமிடுவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம் பட்ஜெட் ரக மாடல்கள் மற்றும் ஃபிளாக்‌ஷிப் மாடல்கள் பாதிக்கப்பட இருக்கின்றன.

    சர்வதேச அளவில் ஸ்மார்ட்போன்களுக்கு ஏற்பட்டுள்ள வரவேற்பு குறைவு, மின்சாதனங்களுக்கான தட்டுப்பாடு மற்றும் ரஷ்யா உக்ரைன் இடையேயான போர் போன்ற காரணங்களால் சாம்சங் நிறுவனம் தனது ஸ்மார்ட்போன் மாடல்கள் உற்பத்தியை குறைக்க முடிவு செய்துள்ளதாக கொரிய செய்தி நிறுவனம் தெரிவித்து உள்ளது.

     சாம்சங் ஸ்மார்ட்போன்

    இந்த ஆண்டு மட்டும் 310 மில்லியன் ஸ்மார்ட்போன்களை உற்பத்தி செய்ய சாம்சங் நிறுவனம் திட்டமிட்டிருந்த நிலையில், தற்போது இந்த எண்ணிக்கையை 280 மில்லியனாக குறைக்க சாம்சங் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது முந்தைய ஆண்டை விட பத்து சதவீதம் குறைவு ஆகும்.

    ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரையிலான காலாண்டுடன் ஒப்பிடும் போது இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டு உற்பத்தி 35 சதவீதம் சரிவடையும் என ஷின்ஹன் முதலீட்டு நிறுவன ஆய்வாளர் ஒருவர் தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இரண்டாவது காலாண்டு உற்பத்தியில் பத்து சதவீதம் வரை சரிவு ஏற்படலாம் என அவர் தெரிவித்து இருப்பதாக கூறப்படுகிறது. 

    சாம்சங் கேலக்ஸி வாட்ச் 5 சிரீஸ் அதிகளவு பேட்டரி திறன் கொண்டதாக இருக்கும் என கூறப்படுகிறது.

    சாம்சங் கேலக்ஸி வாட்ச் 5 ப்ரோவில், சுழலும் பெசல்கள் இருக்காது என கூறப்படுகிறது. கடைசியாக வெளிவந்த சாம்சங் கேலக்ஸி வாட்ச் 4ல் சுழலும் பெசல்கள் இடம்பெற்று இருந்தன. இனி வரும் ஸ்மார்ட் வாட்ச்களில் தங்களது கிளாசிக் மாடலை தவிர்க்க சாம்சங் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாம். 

     சாம்சங் ஸ்மார்ட்வாட்ச்

    கேலக்ஸி வாட்ச் 4 சீரிசை கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம், கேலக்ஸி Z ஃபோல்ட் 3 வகை ஸ்மார்ட்போன்களுடன் சாம்சங் நிறுவனம் வெளியிட்டிருந்தது. அதே போல் தான் தங்களது அடுத்த தயாரிப்பான கேலக்ஸி வாட்ச் 5 சீரிஸை இந்த ஆண்டு ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதம் கேலக்ஸி Z ஃபோல்ட் 5 வகை ஸ்மார்ட்போன்களுடன் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    சாம்சங் கேலக்ஸி வாட்ச் 5 சிரீஸ் அதிகளவு பேட்டரி திறன் கொண்டதாக இருக்கும் என கூறப்படுகிறது. அதன்படி, 40mm மாடல் 276mAH பேட்டரி உடனும், 44mm மாடல் 397mAH பேட்டரி உடனும் வரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இது சபையர் கிளாஸ் மற்றும் டைட்டானியம் பாடி உடன் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
    முதலில் நேவியர் நிறுவனத்தின் தலைமையகத்தில் உள்ள மூன்று தளங்களில் மட்டும் சுமார் 40 ரோபோக்களைப் பயன்பாட்டுக்கு கொண்டுவர உள்ளன.
    கிளவுட் அடிப்படையில் இயங்கும் தன்னாட்சி ரோபோக்களுக்கான முதல் தனியார் 5ஜி வணிக நெட்வொர்க் சேவையை சாம்சங் நிறுவனம் கட்டமைத்துள்ளது. நேவியர் கிளவுட் நிறுவனத்துடன் இணைந்து தென் கொரியாவின் முதல் தனியார் 5ஜி நெட்வொர்க்கை உருவாக்கும் முயற்சியில் இறங்கி உள்ளது சாம்சங் நிறுவனம். 

    நேவியர் நிறுவனத்தின் புதிய இரண்டாவது தலைமையகம் மற்றும் சாம்சங்கின் நெட்வொர்க் தீர்வு மையம் ஆகிய இடங்களில் இந்த கிளவுட் அடிப்படையிலான தன்னாட்சி மொபைல் ரோபோக்கள் இந்த மாதம் பயன்பாட்டுக்கு வர உள்ளது. இந்த புதிய சேவையானது, சியோலில் உள்ள நேவியரின் தலைமையகம் முழுவதும் பயணிக்க உள்ளது. அங்கு, பேக்கேஜ் டெலிவரி, காபி டெலிவரி மற்றும் ஊழியர்களுக்கு மதிய உணவு பெட்டி விநியோகம் ஆகியவற்றை வழங்க இந்த ரோபோக்கள் பயன்படுத்தப்பட உள்ளது.

    samsung

    1784 என்ற எண்ணை அழைத்தால் ரோபோவின் உதவி கிடைக்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்டு உள்ளது. முதலில் நேவியர் நிறுவனத்தின் தலைமையகத்தில் உள்ள மூன்று தளங்களில் மட்டும் சுமார் 40 ரோபோக்களைப் பயன்பாட்டுக்கு கொண்டுவர உள்ளன. இந்த ஆண்டின் இறுதிக்குள், 36-மாடிகள் கொண்ட வானளாவிய கட்டிடத்தில் நூற்றுக்கணக்கான ரோபோக்களை பணியில் ஈடுபடுத்த திட்டமிட்டு உள்ளனர்.

    அனைத்து ரோபோக்களும் கிளவுட் சர்வருடன் இணைக்கப்பட்டுள்ளன, அவை தனித்தனியாக செயல்படும் வண்ணம் கட்டமைக்கப்பட்டு உள்ளது. இந்த ரோபோக்கள் அனைத்தும் சாம்சங்கின் 5ஜி நெட்வொர்க் மூலம் இயங்க உள்ளன. இதன்மூலம் ஒரே நேரத்தில் 10 ஆயிரம் ரோபோக்களை இயக்க முடியும் என கூறப்படுகிறது. 
    ×