என் மலர்
நீங்கள் தேடியது "tag 94549"
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அசத்தலான மூன்று ஜியோஃபை சலுகைகளை அறிவித்து இருக்கிறது. இவை மாதாந்திர டேட்டா பலன்களை வழங்குகின்றன.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் மூன்று ஜியோஃபை சலுகைகளை அறிவித்து இருக்கிறது. இவற்றின் விலை ரூ. 249, ரூ. 299 மற்றும் ரூ. 349 ஆகும். புது சலுகைகளுடன் அதிகபட்சமாக ஒரு மாதத்திற்கான வேலிடிட்டி மற்றும் 50GB வரையிலான அதிவேக டேட்டா வழங்கப்படுகிறது.
இத்துடன் இத்துடன் ஜியோஃபை டாங்கில் இலவசமாக வழங்கப்படுகிறது. இலவசமாக வழங்கப்படும் டாங்கிலை வாடிக்கையாளர்கள் பயன்படித்தி முடித்தப் பின் திரும்ப வழங்க வேண்டும். இந்த சலுகை வியாபாரங்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. புதிய ஜியோஃபை போஸ்ட்பெயிட் சலுகைகள் 18 மாதங்களுக்கு லாக்-இன் பிரீயட் முறையில் வழங்கப்படுகிறது.

அதாவது பயனர்கள் ஒரு முறை இந்த சலுகையை தேர்வு செய்தால் 18 மாதங்களுக்கு அதில் இருந்து வெளியேற முடியாது. ஜியோ வலைதள விவரங்களின் படி புதிய ஜியோஃபை புது போஸ்ட்பெயிட் சலுகைகள், டேட்டா பலன்களை மட்டுமே வழங்குகின்றன. இதில் வாய்ஸ் கால் மற்றும் எஸ்.எம்.எஸ். போன்ற பலன்கள் எதுவும் வழங்கப்படவில்லை. முதல் முறை இந்த சலுகைகளை தேர்வு செய்யும் போது ரூ. 200 செலுத்த வேண்டும்.
புதிய ஜியோஃபை ரூ. 249 சலுகை மாதாந்திர வேலிடிட்டி மற்றும் 30GB டேட்டா வழங்குகிறது. இதனை பயனர்கள் 18 மாதங்களுக்கு வாங்கிக் கொள்ள முடியும். இதனுடன் ஜியோஃபை டாங்கில் இலவசமாக வழங்கப்படுகிறது. ஜியோஃபை ரூ. 299 சலுகை மாதாந்திர வேலிடிட்டி மற்றும் 40GB டேட்டா வழங்குகிறது.
ரூ. 349 ஜியோஃபை சலுகை மாதாந்திர வேலிடிட்டி மற்றும் 50GB டேட்டா வழங்குகிறது. மற்ற இரு சலுகைகளை போன்றே இதனுடன் பயன்படுத்தியதும் திரும்ப வழங்கும் வகையில் ஜியோஃபை டாங்கில் இலவசமாக வழங்கப்படுகிறது.
இந்திய சந்தையில் கார் மாடல்கள் விலை தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. எனினும், கார் உற்பத்தியாளர்கள் தங்களது வாகனங்களுக்கு சிறப்பு சலுகைகளை வழங்கி வருகின்றனர்.
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் கடந்த சில ஆண்டுகளாக கார் மாடல்களின் விலை தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. உதிரி பாகங்களுக்கான தட்டுப்பாடு மற்றும் செலவீனங்கள் அதிகரிப்பது போன்ற காரணங்களால் கார் உற்பத்தியாளர்கள் கார்களின் விலையை உயர்த்தி வருகின்றன.
இவ்வாறு கார்களின் விலை உயர்த்தப்பட்டாலும், வாகன விற்பனையை அதிகப்படுத்த கார் உற்பத்தியாளர்கள் தங்களின் கார்களுக்கு சிறப்பு சலுகை மற்றும் தள்ளுபடி உள்ளிட்டவைகளை அறிவித்து வருகின்றன. அந்த வகையில் அசத்தல் சலுகை மற்றும் தள்ளுபடியில் கிடைக்கும் கார் மாடல்களை தொடர்ந்து பார்ப்போம்.

மாருதி சுசுகி ஆல்டோ 800- இந்திய சந்தையில் அதிக பிரபலமான ஹேச்பேக் மாடல் ஆல்டோ 800. இதன் விலை ரூ. 3 லட்சத்து 40 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது. தற்போது மாருதி ஆல்டோ 800 மாடலுக்கு ரூ. 5 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 10 ஆயிரம் எக்சேன்ஜ் மற்றும் ரூ. 3 ஆயிரம் வரை ஸ்பெஷல் சலுகை வழங்கப்படுகிறது.
மாருதி எஸ் பிரெஸ்ஸோ- மைக்ரோ எஸ்.யு.வி. மாடலான எஸ் பிரெஸ்ஸோ வாங்குவோருக்கு மொத்தத்தில் ரூ. 18 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகிறது. இவை எக்ஸ்சேன்ஜ் போனஸ், சிறப்பு சலுகை மற்றும் கூடுதல் தள்ளுபடி வடிவில் வழங்கப்படுகிறது.
மாருதி சுசுகி வேகன்ஆர்- இந்தியாவில் வேகன்ஆர் மாடலுக்கென தனி வாடிக்கையாளர் கூட்டம் இருக்கிறது. இந்த மாடலுக்கு அதிகபட்சம் ரூ. 38 ஆயிரம் வரையிலான சலுகைகள் வழங்கப்படுகிறது.

நிசான் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த கிக்ஸ் எஸ்.யு.வி. மாடலுக்கு ரூ. 19 ஆயிரத்தில் இருந்து அதிகபட்சமாக ரூ. 45 ஆயிரம் வரையிலான சலுகைகள் வழங்கப்படுகின்றன. இத்துடன் ஆன்லைன் முன்பதிவு சலுகையாக ரூ. 2 ஆயிரத்தில் இருந்து ரூ. 5 ஆயிரம் வரையி சிறப்பு சலுகை வழங்கப்படுகிறது.
இந்திய சந்தையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட ஹூண்டாய் அல்கசார் மாடல் பெரும் எதிர்பார்ப்புடன் விற்பனைக்கு வந்தது. இந்த கார் வாங்குவோருக்கு அதிகபட்சம் 100 சதவீதம் வரையிலான ஆன் ரோடு நிதி சலுகை, மாத தவணைக்கு 7.25 சதவீத வட்டியில் வழங்கப்படுகிறது.
ஏர்டெல் நிறுவனம் தனது பிராட்பேண்ட் பயனர்களுக்கு புது சலுகையை அறிவித்து இருக்கிறது. இதனுடன் 17 ஒ.டி.டி. சேவைகளுக்கான சந்தா வழங்கப்படுகிறது.
ஏர்டெல் நிறுவனம் மூன்று புது பிராட்பேண்ட் சலுகைகளை அறிவித்து இருக்கிறது. இவை ஜியோஃபைபர் சேவைக்கு போட்டியாக அறிவிக்கப்பட்டுள்ளன. இன்றைய கனெக்டெட் வீடுகளுக்கான பொழுதுபோக்கு தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், இந்த சலுகை அறிவிக்கப்பட்டு இருக்கிறது என ஏர்டெல் தெரிவித்துள்ளது.
புதிய ஏர்டெல் பிராட்பேண்ட் சலுகைகள் விலை முறையே ரூ. 699, ரூ. 1099 மற்றும் ரூ. 1599 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இவை முறையே 40Mbps, 200Mbps மற்றும் 300Mbps வேகத்தில் இணைய சேவை வழங்குகின்றன. இவற்றுடன் 14 பிரீமியம் ஒ.டி.டி. சேவைக்கான சந்தா வழங்கப்படுகிறது. ரூ. 699 சலுகையுடன் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தா, ரூ. 1099 சலுகையுடன் அமேசான் பிரைம் வீடியோ, ரூ. 1599 சலுகையுடன் நெட்ப்ளிக்ஸ் சந்தா வழங்கப்படுகிறது.

ஏர்டெல் எக்ஸ்-ஸ்டிரீம் பிரீமியம் சேவையில் சோனிலிவ், லயன்ஸ்கேட், ஹொய்சொய், மனோரமாமேக்ஸ், ஷீமாரூ, அல்ட்ரா, ஹங்காமாபிளே, டிவோடி.வி., க்ளிக், நம்மஃப்ளிக்ஸ், டாலிவுட் மற்றும் ஷார்ட்ஸ் டி.வி. சந்தா வழங்கப்படுகிறது. ஏர்டெல் 4K ஹைப்ரிட் டி.வி. பாக்ஸ்-இல் 350-க்கும் அதிக டி.வி. சேனல்களை ஒற்றை சாதனம் மற்றும் ரிமோட்டில் வழங்குகிறது. இந்த பாக்ஸ்-க்கான கட்டணம் ரூ. 2 ஆயிரம் என ஏர்டெல் தெரிவித்துள்ளது.
பிராட்பேண்ட் சலுகைகளுடன் 3333GB டேட்டா வழங்கப்படும். வாடிக்கையாளர்களை கவரும் வகையில் முதல் மாதத்திற்கான வாடகையை மற்றும் இன்ஸ்டாலேஷனை இலவசமாக வழங்குகிறது.
ஹோண்டா கார்ஸ் நிறுவனம் தனது கார் மாடல்களுக்கு அதிரடி சலுகைகளை அறிவித்து இருக்கிறது. இவை இம்மமாதம் 30 ஆம் தேதி வரை வழங்கப்படுகிறது.
ஜூன் மாதத்தில் கார் மாடல்கள் விற்பனையை அதிகப்படுத்த ஹோண்டா கார்ஸ் நிறுவனம் அசத்தல் சலுகைகளை அறிவித்து இருக்கிறது. சிறப்பு சலுகைகள் ஹோண்டா கார்ஸ் இந்தியாவின் பெரும்பாலான மாடல்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது. கடந்த மாதத்துடன் ஒப்பிடும் போது சில கார் மாடல்களுக்கான சலுகை பலன்கள் குறைக்கப்பட்டு உள்ளன.
எனினும், சில மாடல்களுக்கு அசத்தல் சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. சிறப்பு சலுகைகள், தள்ளுபடி உள்ளிட்டவை வேரியண்ட், கிரேடு மற்றும் ஒவ்வொரு பகுதிக்கும் ஏற்ப வேறுபடும். இவை ஜூன் 30 ஆம் தேதி வரை வழங்கப்பட இருக்கின்றன.
ஹோண்டா சிட்டி (5th Gen) - இந்தியாவில் ஹோண்டா சிட்டி மாடலுக்கு ரூ. 27 ஆயிரத்து 396 வரையிலான பலன்கள் வழங்கப்படுகிறது. இதில் ரூ. 5 ஆயிரம் கேஷ் தள்ளுபடி, ரூ. 5 ஆயிரத்து 396 மதிப்புள்ள இலவச அக்சஸரீக்கள், கார் எக்சேன்ஜ் சலுகையில் ரூ. 5 ஆயிரம், லாயல்டி போனஸ் ரூ. 7 ஆயிரம் மற்றும் ரூ. 5 ஆயிரம் கார்ப்பரேட் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

ஹோண்டா WR-V - மே மாதத்துடன் ஒப்பிடும் போது இந்த மாதம் ஹோண்டா WR-V மாடலுக்கு அதிக சலுகைகள் வழங்கப்படுகிறது. அதன்படி கார் எக்சேன்ஜ் சலுகையில் ரூ. 10 ஆயிரம், லாயல்டி போனஸ் ரூ. 5 ஆயிரம் மற்றும் ரூ. 5 ஆயிரம் கார்ப்பரேட் தள்ளுபடி மற்றும் ஹோண்டா கார் எக்சேன்ஜ் சலுகையாக ரூ. 7 ஆயிரம் வரையிலான தள்ளுபடி வழங்கப்படுகிறது.
ஹோண்டா ஜாஸ் - இந்தியாவில் புதிய ஹோண்டா ஜாஸ் மாடலுக்கு ரூ. 33 ஆயிரத்து 158 வரையிலான சலுகைகள் வழங்கப்படுகின்றன. இதில் ரூ. 5 ஆயிரம் கேஷ் தள்ளுபடி அல்லது ரூ. 5 ஆயிரத்து 947 மதிப்புள்ள இலவச அக்சஸரீக்கள் வழங்கப்படுகிறது. இத்துடன் கார் எக்சேன்ஜ் சலுகையாக ரூ. 5 ஆயிரம் தள்ளுபடி, எக்சேன்ஜ் போனஸ் ரூ. 7 ஆயிரம், லாயல்டி போனஸ் ரூ. 5 ஆயிரம், ரூ. 5 ஆயிரம் கார்ப்பரேட் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

ஹோண்டா சிட்டி (4th Gen) - 4th Gen ஹோண்டா சிட்டி மாடலுக்கு ரூ. 5 ஆயிரம் லாயல்டி போனஸ், ரூ. 7 ஆயிரம் ஹோண்டா கார் எக்சேன்ஜ் போனஸ் வழங்கப்படுகிறது.
ஹோண்டா அமேஸ்- ஹோண்டா அமேஸ் மாடலுக்கு ரூ. 5 ஆயிரம் லாயல்டி போனஸ், ரூ. 8 ஆயிரம் தள்ளுபடி மற்றும் ரூ. 3 ஆயிரம் காரப்பரேட் தள்ளுபடி உள்ளிட்ட பலன்கள் வழங்கப்படுகிறது.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமும் தனது பிரீபெயிட் சலுகை கட்டணங்களை திடீரென உயர்த்தி இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா நிறுவனங்களை தொடர்ந்து ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமும் தனது பிரீபெயிட் சலுகை கட்டணங்களை உயர்த்தி இருக்கிறது. தற்போதைய விலை உயர்வை தொடர்ந்தும் ரிலையன்ஸ் ஜியோ கட்டணங்கள் ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா கட்டணங்களை விட குறைவாகவே இருக்கிறது.
புதிய விலை உயர்வை தொடர்ந்து ரிலையன்ஸ் ஜியோ பிரீபெயிட் சலுகை துவக்க விலை ரூ. 91 ஆக மாறி இருக்கிறது. தற்போது ரிலையன்ஸ் ஜியோ பிரீபெயிட் சலுகை விலை 21.3 சதவீதம் வரை உயர்த்தப்பட்டு இருக்கிறது. மற்ற சலுகை விலை 20 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ ரூ. 155 சலுகையில் தினமும் 2 ஜிபி டேட்டா, 300 எஸ்.எம்.எஸ். 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா நிறுவன சலுகை விலை ரூ. 179 என துவங்குகிறது. இந்த பிரீபெயிட் சலுகைகள் சந்தையில் சிறப்பான அனுபவத்தை வழங்கும் என ரிலையன்ஸ் ஜியோ தெரிவித்து இருக்கிறது. புதிய விலை டிசம்பர் 1 ஆம் தேதி அமலுக்கு வருகிறது.
மஹிந்திரா நிறுவனம் தனது கார் மாடல்களுக்கு அசத்தலான சலுகை மற்றும் தள்ளுபடி வழங்குகிறது.
மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம் நவம்பர் மாதத்திற்கான சலுகை விவரங்களை அறிவித்து இருக்கிறது. அந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைதளத்தின் படி மஹிந்திராவின் எஸ்.யு.வி. மாடல்களுக்கு அதிகபட்சம் ரூ. 81,500 வரையிலான சலுகை மற்றும் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
இவை தள்ளுபடி, எக்சேன்ஜ் பலன்கள், கார்ப்பரேட் தள்ளுபடி மற்றும் கூடுதல் சலுகை வடிவில் வழங்கப்படுகின்றன. இந்த சலுகைகள் நவம்பர் 30 ஆம் தேதி வரை வழங்கப்படுகிறது. சலுகை பலன்கள் ஒவ்வொரு விற்பனை மையத்திற்கு ஏற்ப வேறுபடும். மஹிந்திரா தார், பொலிரோ நியோ மற்றும் எக்ஸ்.யு.வி.700 மாடல்களுக்கு எந்த பலன்களும் வழங்கப்படவில்லை.

கே.யு.வி.100 என்.எக்ஸ்.டி. மாடலுக்கு ரூ. 61,055, மஹிந்திரா ஸ்கார்பியோவிற்கு ரூ. 32,320, அல்டுராஸ் ஜி4 மாடலுக்கு ரூ. 81,500, எக்ஸ்.யு.வி.300 மாடலுக்கு ரூ. 49 ஆயிரம், மஹிந்திரா மராசோ மாடலுக்கு ரூ. 40,200, பொலிரோ மாடலுக்கு ரூ. 13 ஆயிரம் வரையிலான சலுகைகள் வழங்கப்படுகின்றன.
ஏர்டெல் நிறுவனம் தனது பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் டேட்டா வழங்குகிறது.
பாரதி ஏர்டெல் நிறுவனம் தனது ரூ. 249 பிரீபெயிட் சலுகையில் பயனர்களுக்கு 500 எம்.பி. கூடுதல் டேட்டா வழங்கி வருகிறது. முன்னதாக இந்த சலுகையில் தினமும் 1.5 ஜிபி டேட்டா வழங்கப்பட்டு வந்தது. இந்த சலுகையின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும்.
தற்போது இதன் தினசரி டேட்டா அளவில் மட்டும் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. வோடபோன் ஐடியா நிறுவனம் இதே விலை கொண்ட சலுகையில் தினமும் 1.5 ஜிபி டேட்டா வழங்கி வருகிறது. அந்த வகையில் ஏர்டெல் தற்போது வாடிக்கையாளர்களுக்கு சற்றே கூடுதல் டேட்டா வழங்கி வருகிறது.

கூடுதல் டேட்டாவினை பயனர்கள் ஏர்டெல் தேங்ஸ் செயலி மூலம் பெற்றுக் கொள்ளலாம். இதே சலுகையில் அமேசான் பிரைம் வீடியோ மொபைல் எடிஷன் டிரையல் ஒரு மாதத்திற்கும், ஷா அகாடமி சந்தா ஒரு வருடத்திற்கும், இலவச ஹலோ டியூன் சந்தா, வின்க் மியூசிக் உள்ளிட்ட பலன்கள் வழங்கப்படுகிறது.
ஹோண்டா நிறுவனம் தனது கார் மாடல்களுக்கு அசத்தலான சலுகைகளை அறிவித்து இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனம் வாடிக்கையாளர்களை கவரும் வகையில், தி கிரேட் ஹோண்டா பெஸ்ட் எனும் பெயரில் சிறப்பு திட்டத்தை அறிவித்து இருக்கிறது. இந்த திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்களுக்கு ரூ. 38,600 மதிப்பிலான சலுகை மற்றும் பலன்கள் வழங்கப்படுகிறது.
இந்த சலுகைகள் ஹோண்டா அமேஸ், ஜாஸ், புதிய சிட்டி, 4-ம் தலைமுறை சிட்டி மற்றும் டபிள்யூ.ஆர்.வி. போன்ற மாடல்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த சலுகைகள் நவம்பர் 30 ஆம் தேதி அல்லது ஸ்டாக் இருக்கும் வரை வழங்கப்படும் என ஹோண்டா அறிவித்து இருக்கிறது.

சிறப்பு திட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்ட சலுகைகள்- தள்ளுபடி, லாயல்டி போனஸ், எக்சேன்ஜ் தள்ளுபடி வடிவில் வழங்கப்படுகின்றன. ஹோண்டா அமேஸ் பேஸ்லிப்ட் மாடலுக்கு ரூ. 15 ஆயிரம் வரையிலான சலுகைகள் வழங்கப்படுகின்றன. ஹோண்டா ஜாஸ் மாடலுக்கு ரூ. 36,147 வரையிலான பலன்கள் வழங்கப்படுகிறது.
ஹோண்டா டபிள்யூ.ஆர்.வி. மாடலுக்கு ரூ. 29,058 வரையிலான சலுகைகளும், 4-ம் தலைமுறை ஹோண்டா சிட்டி மாடலுக்கு ரூ. 38,608 வரையிலான பலன்களும் வழங்கப்படுகின்றன.
ஏர்டெல் நிறுவன பிரீபெயிட் பயனர்கள் தேர்வு செய்யப்பட்ட சலுகைகளை தேர்வு செய்யும் போது தினமும் கூடுதல் டேட்டா இலவசமாக வழங்கப்படுகிறது.
ஏர்டெல் நிறுவன பிரீபெயிட் பயனர்கள் ரூ.399, ரூ.448 மற்றும் ரூ.499 விலை சலுகைகளை தேர்வு செய்யும் போது தினமும் 400 எம்.பி. கூடுதல் டேட்டா இலவசமாக வழங்கப்படுகிறது. இதன் மூலம் மூன்று சலுகைகளிலும் பயனர்களுக்கு முறையே 1.4 ஜி.பி., 1.9 ஜி.பி. மற்றும் 2.4 ஜி.பி. டேட்டா தினமும் வழங்கப்படுகிறது.
முன்னதாக ரூ.129 மற்றும் ரூ.249 விலையில் கிடைக்கும் பிரீபெயிட் சலுகைகளுடன் ரூ.4 லட்சம் மதிப்புள்ள உயிர் காப்பீட்டு திட்டம் வழங்கப்பட்டது. ஏர்டெல் ரூ.499 சலுகையில் முன்னதாக தினமும் 2 ஜி.பி. டேட்டா வழங்கப்பட்டது. தற்சமயம் 400 எம்.பி. கூடுதல் டேட்டா தவிர ஏர்டெல் டி.வி. பிரீமியம் சந்தா வழங்கப்படுகிறது.
இத்துடன் புதிய 4ஜி சாதனம் வாங்குவோருக்கு ரூ.2000 கேஷ்பேக் வழங்கப்படுகிறது. புதிதாக 4ஜி ஸ்மார்ட்போன் வாங்குவோருக்கு இச்சலுகை கிடைக்கும். இதுதவிர நார்டான் மொபைல் செக்யூரிட்டி சந்தா ஒரு வருடத்திற்கு வழங்கப்படுகிறது. இந்த சலுகையின் வேலிடிட்டி 82 நாட்கள் ஆகும். இதில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் மற்றும் தினமும் 100 எஸ்.எம்.எஸ். வழங்கப்படுகிறது.

ஏர்டெல் ரூ.448 சலுகையில் முன்னதாக 1.5 ஜி.பி.க்கு பதில் தினமும் 1.9 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது. இச்சலுகையும் 82 நாட்கள் வேலிடிட்டி கொண்டிருக்கிறது. இதிலும் நார்டான் மொபைல் செக்யூரிட்டி சந்தா, விண்க் மியூசிக் சந்தா மற்றும் கேஷ்பேக், தினமும் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
ஏர்டெல் ரூ.399 பிரீபெயிட் சலுகையில் தினமும் 1 ஜி.பி. டேட்டாவுக்கு பதில் 1.4 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது. 84 நாட்கள் வேலிடிட்டி வழங்கும் இச்சலுகையில் மேலே கொடுக்கப்பட்டுள்ள பலன்கள் வழங்கப்படுகிறது. இச்சலுகைகளில் மேற்கொள்ளப்பட்டு இருக்கும் மாற்றங்கள் இதுவரை ஏர்டெல் வலைதளத்தில் மாற்றப்படவில்லை.
வோடபோன் நிறுவன பிரீபெயிட் பயனர்களுக்கு அந்நிறுவனம் வருடம் முழுக்க தினசரி டேட்டா, அன்லமிட்டெட் வாய்ஸ் கால் வழங்கும் சலுகை வழங்கப்படுகிறது.
ஐடியா செல்லுலார் நிறுவனம் சிட்டிபேங்க் உடன் இணைந்து தனது வாடிக்கையாளர்களுக்கு வருடம் முழுக்க டேட்டா மற்றும் வாய்ஸ் கால் பலன்களை வழங்கியது. தற்சமயம் இந்த சலுகை வோடபோன் பிரீபெயிட் பயனர்களுக்கு வழங்கப்படுகிறது.
வோடபோன் சிட்டிபேங்க் சலுகை ஏற்கனவே ஐடியா செல்லுலார் பயனர்களுக்கு வழங்கப்பட்டதை போன்ற பலன்களை வழங்குகிறது. அதன்படி பயனர்களுக்கு தினமும் 1.5 ஜி.பி. டேட்டா மற்றும் அன்ல்மிட்டெட் வாய்ஸ் கால் ஒரு வருடத்திற்கு வழங்கப்படுகிறது.
இந்த சலுகை ஜூலை 31, 2019 வரை வழங்கப்படுகிறது. இச்சலுகை சென்னை, கோயம்புத்தூர், பெங்களூரு, ஐதராபாத், கொல்கத்தா, பூனே, ஆமதாபாத், செக்கந்தராபாத், பரோடா, ஜெய்பூர், டெல்லி, நொய்டா, குர்கிராம், மும்பை மற்றும் சண்டிகர் என தேர்வு செய்யப்பட்ட வட்டாரங்களில் மட்டும் வழங்கப்படுகிறது.

புதிய சலுகையை பெற பயனர்கள் ஏற்கனவே வோடபோன் பிரீபெயிட் சேவையை பயன்படுத்த வேண்டும். பின் வோடபோனின் சலுகைகள் இடம்பெற்றிருக்கும் வலைதளம் சென்று புதிதாக கிரெடிட் கார்டு ஒன்றிற்கு விண்ணப்பிக்க வேண்டும். கிரெடிட் கார்டு வாங்கியதும், குறைந்தபட்சம் ரூ.4000 பயன்படுத்தினால் இந்த சலுகையை பெறலாம்.
மேலே குறிப்பிடப்பட்டு இருப்பதை போன்று கிரெடிட் வாங்கிய முதல் 30 நாட்களுக்குள் ரூ.4000 தொகைக்கு பயன்படுத்த வேண்டும். இந்த தொகையை ஒரே சமயமும் பயன்படுத்தலாம், சிறிது சிறிதாகவும் பயன்படுத்தலாம். இவ்வாறு செய்யும் போது தினமும் 1.5 ஜி.பி. டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் உள்ளிட்டவை ஒரு வருடத்திற்கு இலவசமாக வழங்கப்படும்.
ஏர்டெல் நிறுவனம் அறிவித்திருக்கும் புதிய சலுகையுடன் பயனர்களுக்கு உயிர் காப்பீடு திட்டம் சேர்த்து வழங்கப்படுகிறது. #Airtel
ஏர்டெல் நிறுவனம் தனது பிரீபெயிட் மற்றும் போஸ்ட்பெயிட் சலுகைகளை அடிக்கடி மாற்றியமைத்து வருகிறது. கடந்த வாரம் ரூ.299 விலையில் பிரீபெயிட் சலுகையுடன் அமேசான் பிரைம் சந்தா வழங்கும் சலுகையை ஏர்டெல் அறிவித்தது. அந்த வகையில் தற்சமயம் ரூ.129 மற்றும் ரூ.249 விலைகளில் இரண்டு சலுகைகளை அறிவித்துள்ளது.
இதில் ரூ.249 சலுகையில் பயனர்களுக்கு ரூ.4 லட்சம் மதிப்புள்ள உயிர் காப்பீடு திட்டமும் சேர்த்து வழங்கப்படுகிறது. ஏர்டெல் ரூ.249 சலுகையில் பயனர்களுக்கு தினமும் 2 ஜி.பி. டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது.
இத்துடன் தனியார் வங்கி நிறுவனம் சார்பில் ரூ.4 லட்சத்திற்கான உயிர்காப்பீடு திட்டமும் சேர்த்து வழங்கப்படுகிறது. இதுமட்டுமின்றி ஏர்டெல் டி.வி. பிரீமியம் சேவையும் வழங்கப்படுகிறது. இதில் ஜீ5, HOOQ, நேரலை சேனல்கள், திரைப்படங்களை பார்க்கும் வசதியும் ஒரு வருடத்திற்கான நார்டான் மொபைல் பாதுகாப்பு சலுகையும் வழங்கப்படுகிறது.

வாடிக்கையாளர்கள் ரூ.249 சலுகையை தேர்வு செய்யும் போது காப்பீடு திட்டத்திற்கு தேவையான ஆவணங்களை எவ்வாறு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற விவரங்களை அறிந்து கொள்ளலாம். ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டதும், காப்பீடு திட்ட விவரங்களை ஏர்டெல் செயலியில் இருந்து இயக்க முடியும்.
இத்துடன் அறிவிக்கப்பட்டு இருக்கும் ரூ.129 பிரீபெயிட் சலுகையில் தினமும் 2 ஜி.பி. டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ்., ஏர்டெல் டி.வி. மற்றும் வின்க் மியூசிக் சேவைக்கான சந்தா உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இந்த சலுகையும் 28 நாட்கள் வேலிடிட்டியுடன் கிடைக்கிறது.
ஏர்டெல் நிறுவன பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு அந்நிறுவனம் மலிவு விலையில் இரண்டு புதிய சலுகைகளை அறிவித்துள்ளது. #Airtel
ஏர்டெல் நிறுவனம் தனது பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு இரண்டு மாதாந்திர சலுகைகளை அறிவித்துள்ளது. ரூ.48 விலையில் கிடைக்கும் ஒரு சலுகையில் பயனர்களுக்கு 3 ஜி.பி. டேட்டா 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.
ரூ.98 விலையில் கிடைக்கும் மற்றொரு சலுகையில் 6 ஜி.பி. டேட்டா மற்றும் 10 தேசிய எஸ்.எம்.எஸ். 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது. முன்னதாக ரூ.ரூ.48 சலுகையில் 3 ஜி.பி. டேட்டா ஒரு நாள் வேலிடிட்டியும் ரூ.98 சலுகையில் 6 ஜி.பி. டேட்டா ஏழு நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்பட்டது.

28 நாட்கள் வேலிடிட்டி கொண்ட சலுகையின் கட்டணம் ரூ.175 என நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. புதிய சலுகை தினமும் குறைந்தளவு டேட்டா பயன்படுத்துவோருக்கென அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஏர்டெல் ரூ.248 விலையில் தினமும் 1.4 ஜி.பி. டேட்டா வழங்கும் சலுகையை அறிவித்தது.