என் மலர்
நீங்கள் தேடியது "tag 94574"
பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு வருகிற 30-ந்தேதி 8-வது ஆண்டை நிறைவு செய்ய உள்ளது. எனவே 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கு இப்போதே அந்த கட்சி தயாராக தொடங்கி இருக்கிறது.
அதற்கு முன்னதாக அதாவது அடுத்த 2 ஆண்டுகளில் 11 மாநில சட்டசபை தேர்தல்கள் நடைபெற உள்ளன. குஜராத், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் என்று முக்கியமான மாநிலங்கள் தேர்தலை சந்திக்கின்றன.
இதை கருத்தில் கொண்டு ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடந்த பா.ஜ.க. ஆலோசனை கூட்டத்தில் பல அதிரடி முடிவுகளை மூத்த தலைவர்கள் எடுத்து உள்ளனர்.
முதல்கட்டமாக உத்தர பிரதேசத்தில் சமூக வலை தளங்களில் நன்கு பயிற்சி பெற்ற 10 ஆயிரம் பேரை களம் இறக்கி உள்ளனர். இதே போன்று மற்ற மாநிலங்களிலும் சமூக வலைதளங்களில் பலரை பயிற்சி அளித்து பா.ஜ.க.வின் அடிமட்டததை வலுப்படுத்த ஓசையின்றி ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
இதற்கிடையே பா.ஜனதா ஆட்சி மூலம் கடந்த 8 ஆண்டுகளில் பல்வேறு பலன்களை அனுபவித்து வரும் 100 கோடி பயனாளிகளை அடையாளம் கண்டு பட்டியலிட்டுள்ளனர்.
இந்த 100 கோடி பேரையும் பா.ஜ.க. நிர்வாகிகள் சந்தித்து பேச வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் பா.ஜ.க. நிர்வாகிகள் வீடு, வீடாக கதவை தட்டி பா.ஜ.க. ஆட்சியின் சாதனைகளை விளக்கி சொல்லப் போகிறார்கள்.
பிரதமர் நரேந்திரமோடி நாளை மறுநாள் சென்னை வருகிறார். நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் அவர் ரூ.12,400 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
இதற்காக வருகிற 26-ந்தேதி அன்று மாலை 5 மணி அளவில் பிரதமர் மோடி சென்னை விமான நிலையத்தை வந்தடைகிறார். ஐதராபாத்தில் இருந்து இந்திய விமானப்படை விமானத்தில் புறப்பட்டு சென்னை வரும் பிரதமர் மோடிக்கு விமான நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. கவர்னர் ஆர்.என்.ரவி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் பிரதமர் மோடிக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளிக்கிறார்கள்.
பிரதமர் வருகையையொட்டி சென்னையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
10 ஆயிரம் போலீசார் சென்னை மாநகரம் முழுவதும் தீவிரமாக கண்காணிக்கிறார்கள். சென்னை விமான நிலையத்தில் இருந்து நேரு ஸ்டேடியத்துக்கு காரில் வரும் வரையிலேயே பயண திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. 30 நிமிடங்களுக்கு மேல் காரில் பயணம் செய்து மாலை 5.45 மணி அளவில் மோடி நேரு ஸ்டேடியத்துக்கு வருகை தருகிறார்.
இதனால் அவர் வரும் பாதை முழுவதும் நாளை இரவில் இருந்தே போலீசாரின் முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படுகிறது.
மோடி வருகையையொட்டி டெல்லியில் இருந்து பாதுகாப்பு அதிகாரிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பே சென்னைக்கு வந்து விட்டனர். அவர்கள் சென்னை விமான நிலையம் பிரதமரின் சாலைமார்க்க பயண வழித்தடங்கள், நேரு உள்விளையாட்டு அரங்கம் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு செய்துள்ளனர். அவர்களுடன் உள்ளூர் போலீசார் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
டி.ஜி.பி. சைலேந்திரபாபு, கூடுதல் டி.ஜி.பி. தாமரைக்கண்ணன், போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உள்ளிட்ட உயர் போலீஸ் அதிகாரிகள் பிரதமரின் பாதுகாப்பு தொடர்பாக ஆலோசனைகளையும் மேற்கொண்டு வருகிறார்கள். மோடி வருகையையொட்டி 5 அடுக்கு பாதுகாப்புக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
விழா நடைபெறும் நேரு ஸ்டேடியத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை அமைச்சர் எ.வ.வேலு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
நெடுஞ்சாலைத்துறை செயலாளர் தீரஜ்குமார், பொதுப்பணித்துறை செயலாளர் தயானந்த கட்டாரியா ஆகியோரும் விழாவுக்கான ஏற்பாடுகளை முன்னின்று செய்து வருகிறார்கள். நேரு ஸ்டேடியத்தை சுற்றியுள்ள பகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பிரதமரின் நிகழ்ச்சி நடைபெறும் வருகிற 26-ந்தேதி அன்று அப்பகுதி முழுவதும் டெல்லி பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் போலீசாரின் முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது. அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
கோவில்பட்டி:
கோவில்பட்டி அருகே உள்ள இளையரசனேந்தலில் ம.தி.மு.க. தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
வணிகர்கள் பொருட்களுக்கு தரும் தள்ளுபடி போல பெட்ரோல், டீசலுக்கான கலால் வரியை ஏற்றிவிட்டு தற்போது குறைந்துள்ளதாக மத்திய அரசு கூறுகிறது.
அடிப்படை கலால் வரியில் மட்டும் தான் வருவாய் மாநில அரசுக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது. மற்ற கலால் வரி வருவாய் மத்திய அரசுக்கு தான் செல்கிறது. 50 சதவீதம் இருந்த அடிப்படை கலால் வரியை ஒன்றிய அரசு 4 சதவீதமாக குறைத்துள்ளது
பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை புள்ளிவிவரங்களுடன் மக்களை குழப்புவதற்காக அவதூறு அண்ணாமலையாக கிளம்பியுள்ளார்.
தமிழகத்தை வஞ்சிக்கும் வகையில் நீட் தேர்வு, தொழிற் கல்விக்கு நுழைவுத்தேர்வினை ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ளது.
புதிய கல்விக் கொள்கையில் தமிழகத்தை வஞ்சிக்கும் அம்சங்கள் உள்ளது. தமிழகத்தை வஞ்சிக்கும் போக்கினை ஒன்றிய அரசு மாற்ற வேண்டும். இல்லையென்றால் மக்களை திரட்டி தமிழக பா.ஜ.க. தலைமையகமான கமலாலயம் முன்பு காந்தி வழியில் போராட்டம் நடத்துவோம்.
பிரதமர் மோடி தமிழகத்துக்கு வரவுள்ள நிலையில் ஈழ நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தக்கூடாது என்று ஒன்றிய அரசின் கீழ் உள்ள சில அமைப்புகள் காவல்துறைக்கு அழுத்தம் கொடுத்துள்ளனர்.
இந்த நேரத்தில் தமிழக அரசுக்கு இடையூறாக இருந்துவிடக்கூடாது என்பதற்காக நினைவேந்தல் நிகழ்ச்சியில் ம.தி.மு.க. பொதுச் செயலர் வைகோ கலந்து கொள்ளவில்லை.
தமிழ் ஈழம் குறித்த விழிப்புணர்வு பிரசாரத்தில் தொடர்ந்து ஈடுபடுவோம் என்பதில் மாற்றம் கிடையாது.
இவ்வாறு அவர் கூறினார்.
பிரதமர் மோடி பொறுப்பேற்று 8 ஆண்டுகள் ஆவதையொட்டி அதனை நாடு முழுவதும் பா.ஜனதா கட்சியினர் கொண்டாட திட்டமிட்டு உள்ளனர். இதையொட்டி வருகிற 26-ந்தேதி சென்னை வரும் மோடியை வரவேற்பதற்கு தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை தலைமையில் அக்கட்சியினர் சிறப்பான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
இது தொடர்பாக தி.நகரில் உள்ள பா.ஜனதா அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளுடன் அண்ணாமலை ஆலோசனை நடத்தினார்.
இந்த கூட்டத்தில் சென்னை விமான நிலையத்தில் இருந்து நேரு ஸ்டேடியத்துக்கு காரில் செல்லும் பிரதமர் மோடியை வழிநெடுக ஆட்டம், பாட்டம் கொண்டாட்டத்துடன் வரவேற்பது என முடிவு செய்யப்பட்டு உள்ளது. கிராமிய கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகளுடன் பிரதமர் மோடியை வரவேற்க தமிழக பாரதிய ஜனதா கட்சியினர் தயாராகி உள்ளனர்.
அம்பத்தூர்:
பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி வருகிற 26-ந்தேதி சென்னை வருகிறார். அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது குறித்து பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவுறுத்தலின் பேரில் சென்னை மேற்கு மாவட்ட பாஜக சார்பில் மாவட்ட தலைவர் மனோகரன் தலைமையில் மாதவரம், அம்பத்தூர், மதுரவாயல் மண்டல நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஒவ்வொரு மண்டலத்திலும் தனித்தனியாக நடை பெற்றது. கூட்டத்தில் சென்னை வரும் பிரதமர் மோடிக்கு சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொண்டர்களை அழைத்து சென்று மான் ஆட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம், நாதஸ்வரம் என கிராமிய கலைகளுடன் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் மாதவரம் பொறுப்பாளர் சுஜாதா ஜீவன், அம்பத்தூர் பொறுப்பாளர் தியாகராஜன், மதுரவாயல் பொறுப்பாளர் சுப்பிரமணிய ரெட்டியார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பிரதமர் நநேர்திர மோடி அவர்கள் 31,600 கோடி மதிப்பில் மத்திய அரசின் நிறைவடைந்த முக்கியத் திட்டங்களை திறந்து வைப்பதற்காக நாளை சென்னை வருகிறார்.
நாளை மாலை 5.10 மணிக்கு வந்து நேரு ஸ்டேடியத்தில் ஒரே இடத்தில் நடைபெற இருக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று இரவு 8 மணிக்கு டெல்லி புறப்படுகிறார்.
3 மணிநேர பயணத்தில் மிக முக்கியமாக தமிழகத்தில் சென்னை எழும்பூர் உள்பட 5 ரெயில்வே நிலையங்களில் மேம்படுத்துதல் பணி நடைபெறுகிறது. பிறகு, உள்கட்டமைப்பு மேம்பாட்டில் லாஜிஸ்டிக் நோடல் பார்க்கை சென்னை துறைமுகம் பகுதியில் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். 1162 பேருக்கு லைட் அவுஸ் மாடல் வீடுகள் வழங்கப்படுகிறது.
மிக முக்கியமான விஷயங்கள் நாளை நடைபெறுகிறது. இந்நிலையில், பிரதமர் டெல்லி செல்வதற்கு முன்பாக பாஜக தலைவர்கள் கண்டிப்பாக சந்திப்போம், சிறிது நேரம் உரையாடுவோம். தமிழகத்தின் அரசியல் நிலை, கட்சியின் வளர்ச்சி உள்ளிட்டவை குறித்து பேசுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படியுங்கள்.. சென்னைக்கு நாளை வருகை தரும் பிரதமர் மோடியை வரவேற்க 50 ஆயிரம் பேர் திரள்கிறார்கள்
பிரதமர் மோடி இன்று மாலை சென்னை வருகிறார். நேரு உள் விளையாட்டரங்கில் மாலை 5.45 மணியளவில் நடைபெறும் அரசு விழாவில் கலந்துகொண்டு ரூ. 31 ஆயிரத்து 500 கோடி மதிப்பிலான திட்ட பணிகளை தொடங்கி வைத்தும் நாட்டுக்கு அர்ப்பணித்தும் உரையாற்றுகிறார்.
விழாவில் முடிவுற்ற 5 திட்டங்களை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். அந்த 5 திட்டங்கள் விபரம் வருமாறு:-
தாம்பரம்-செங்கல்பட்டு இடையே 30 கி.மீ. தூரத்துக்கு ரூ.598 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள 3-வது ரெயில் பாதையை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

எண்ணூர்-செங்கல்பட்டு பிரிவில் 115 கி.மீ. தூரத்துக்கு குழாய் வழியே எரிவாயு கொண்டு செல்லப்படுகிறது. இதற்காக 115 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரூ.849 கோடி செலவில் எரிவாயு குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதையும் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்து வைக்கிறார்.
மேலும் பெங்களூரு-திருவள்ளூர் பிரிவிலும் 271 கிலோ மீட்டர் தூரத்துக்கு எரிவாயு குழாய்கள் ரூ.911 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த செயல் திட்டத்தையும் நாட்டுக்கு பிரதமர் மோடி அர்ப்பணிக்கிறார்.

மேலும் இதே விழாவில் 6 பிரமாண்டமான திட்டங்களுக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். அந்த 6 திட்டங்கள் விபரம் வருமாறு:-
ரூ. 5,852 கோடி செலவில் துறைமுகம்-மதுரவாயல் இடையே அமைக்கப்படும் இரண்டடுக்கு மேம்பாலம்.
ரூ.14.872 கோடி செலவில் சென்னையில் இருந்து பெங்களூருக்கு விரைவு வழி சாலை.
பெங்களூருவில் இருந்து தர்மபுரி இடையே ரூ.3,471 கோடி செலவில் 4 வழிச்சாலை அமைத்தல்.
சென்னையில் ரூ.1,428 கோடியில் பல வகை வழிமுறைகளுடன் கூடிய சரக்கு பூங்கா அமைத்தல் ஆகிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
சென்னை எழும்பூர், மதுரை, ராமேசுவரம், கன்னியாகுமரி, காட்பாடி ஆகிய 5 ரெயில் நிலையங்களை நவீனப்படுத்தும் திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டுகிறார்.

இந்த விழாவில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கவர்னர் ஆர்.என்.ரவி, மத்திய நெடுஞ்சாலைத்துறை மந்திரி நிதின்கட்காரி, ரெயில்வே துறை மந்திரி அஸ்வினிவைஷ்ணவ், பெட்ரோலிய துறை மந்திரி ஹர்தீப்சிங்பூரி, மத்திய மந்திரி எல்.முருகன், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பங்கேற்கிறார்கள்.
சென்னை:
பிரதமர் மோடி இன்று சென்னையில் நடைபெறும் விழாவில் பங்கேற்று பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைக்கிறார். இதற்காக நேரு உள்விளையாட்டு அரங்கில் மிக பிரமாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பிரதமர் வருகையையொட்டி சென்னையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சென்னை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக மெரினா கடற்கரையையொட்டியுள்ள அடையாறு ஐ.என்.எஸ். கடற்படை தளத்துக்கு வருகை தரும் பிரதமர் மோடி அங்கிருந்து சாலை மார்க்கமாக நேரு ஸ்டேடியத்தை சென்றடைகிறார்.
ஐ.என்.எஸ். கடற்படை தளத்தில் இருந்து குண்டு துளைக்காத காரில் புறப்பட்டு செல்லும் மோடி, நேப்பியர் பாலம், சிவானந்தா சாலை, பெரியார் சிலை சந்திப்பு, பல்லவன் சாலை, சென்ட்ரல் ரெயில் நிலையம் எதிரில் உள்ள பாலத்தின் வழியாக சென்று பூந்தமல்லி நெடுஞ்சாலையை அடைகிறார்.
சென்ட்ரல் எதிரில் இடதுபுறமாக திரும்பி பெரியமேடு வழியாக நேரு உள் விளையாட்டு அரங்கை மோடி சென்றடைகிறார். இதையொட்டி வழிநெடுக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
பிரதமர் செல்லும் இந்த வழித்தடத்தில் 10-க்கும் மேற்பட்ட துணை கமிஷனர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மோடி செல்லும் சாலைகளையொட்டியுள்ள பெரிய கட்டிடங்கள், மைலேடீஸ் பூங்கா பூட்டப்பட்டு போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. நின்றபடியும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஸ்டேடியம் அருகில் உள்ள அலுவலகங்களும் பூட்டப்பட்டுள்ளன. நேரு ஸ்டேடியத்தில் உள்ள உள்விளையாட்டு அரங்கத்துக்குள் நுழையும் வாயில் கதவு மட்டுமே திறக்கப்பட்டுள்ளதால் மாநகராட்சி சிக்னல் சந்திபில் இருந்து நேரு ஸ்டேடியம் வரை சாலை நடுவே யாரும் நுழைந்து விட முடியாதபடி தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன.
நேரு ஸ்டேடியம் வரையில் வழிநெடுக மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மோடியின் பிரமாண்ட கட்-அவுட்டுகளும் வைக்கப்பட்டுள்ளன. பிரதமர் மோடி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் பங்கேற்கும் விழாவையொட்டி பெரியமேடு பகுதியே விழாகோலம் கண்டுள்ளது.