search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிம்பு"

    நடிகர் டி.ராஜேந்தர் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டத்தை குறித்து சிம்பு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
    பிரபல இயக்குனரும், நடிகர் சிம்புவின் தந்தையுமான டி.ராஜேந்தர் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தகவல் வெளியானது. இவர் இயக்குனர், நடிகர், பாடலாசிரியர், கலை இயக்குனர், தயாரிப்பு, மேலாளர் மற்றும் பின்னணி பாடகர் என பன்முகம் காட்டியவர். 

    நடிகரும், இயக்குநருமான டி.ராஜேந்தர் திடீர் உடல்நலக் குறைவால் சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு இருதயத்திற்கு செல்லக்கூடிய ரத்தக் குழாய், வால்வுகளில் அடைப்பு ஏற்பட்டு அதன் காரணமாக தொடர் மருத்துவ சிகிச்சை மேற்கொண்டு வருவதாகவும், தற்போது நல்ல முறையில் அவர் இருப்பதாகவும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர் என தகவல் வெளியாகியது.

    இந்நிலையில் டி.ராஜேந்தரின் உடல்நலம் குறித்து அவருடைய மகனும் நடிகருமான சிம்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டிருப்பது, எனது ஆருயிர் ரசிகர்களுக்கும், அன்பான பத்திரிகை ஊடக நண்பர்களுக்கும் வணக்கம்.

    சிம்பு வெளியிட்ட அறிக்கை
    சிம்பு வெளியிட்ட அறிக்கை

    எனது தந்தைக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்ட நிலையில், அவரை தனியார் மருத்துவமனையில் சேர்த்தோம். அங்கு பரிசோதனையில், அவருக்கு வயிற்றில் சிறிய இரத்த கசிவு ஏற்பட்டுள்ளதாகவும் அவருக்கு உயர் சிகிச்சை தரவேண்டும் எனவும் மருத்துவர்கள் அறிவுறுத்தியதால், அவர் உடல் நலன் கருதியும், உயர் சிகிச்சைக்காகவும், தற்போது வெளிநாட்டுக்கு அழைத்து செல்கிறோம். அவர் முழு சுய நினைவுடன், நலமாக உள்ளார். கூடிய விரைவில் சிகிச்சை முடிந்து, உங்கள் அனைவரையும் சந்திப்பார். உங்கள் பிராத்தனைகளுக்கும், அனைவரின் அன்புக்கும் நன்றி என்று குறிப்பிட்டுள்ளார்.
    விசா கிடைப்பதில் தாமதம் ஆனதால், அமெரிக்கா செல்லும் திட்டமும் தள்ளிப்போயுள்ளது.
    நடிகரும், இயக்குனருமான டி.ராஜேந்திரன் கடந்த சில நாட்களுக்கு முன்பு நெஞ்சு வலி காரணமாக போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில், அவருக்கு வயிற்றுப் பகுதியில் ரத்த கசிவு ஏற்பட்டது தெரியவந்தது. இதனால் மேல்சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

    ஆனால் விசா கிடைப்பதில் காலதாமதம் ஆனது. இதனால், அமெரிக்கா செல்லும் திட்டமும் தள்ளிப்போனது.

    இந்நிலையில், டி.ராஜேந்திரனுக்கு விசா கிடைத்துள்ளதை அடுத்து, அவர் இன்னும் இரண்டு நாட்களில் மேல்சிகிச்சைக்காக அமெரிக்கா செல்லவுள்ளதாக கூறப்படுகிறது.

    இதையும் படியுங்கள்.. நிலுவையில் உள்ள சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும்- ஆளுநரிடம் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
    ×