என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tag 95162"

    நாமக்கல்லில் விபத்தில் உயிரிழந்த ரசிகர் குடும்பத்திற்கு நடிகர் சூர்யா நேரில் ஆறுதல் கூறியுள்ளார்.
    நாமக்கல் மாவட்ட சூர்யா ரசிகர் மன்ற மாவட்ட செயலாளர் ஜெகதீசன் (வயது29). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு நாமக்கல் போலீஸ் நிலையம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்றபோது லாரியில் மோதி உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த நடிகர் சூர்யா, நேற்றிரவு நாமக்கல் மேட்டுத் தெருவில் உள்ள அவரது வீட்டிற்கு வந்தார். அப்போது சூர்யாவை காண பொதுமக்கள், ரசிகர்கள் ஏராளமானோர் திரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    நேரில் சென்ற சூர்யா
    நேரில் சென்ற சூர்யா

    ஜெகதீசன் வீட்டிற்கு சென்ற நடிகர் சூர்யா அவரது உருவபடத்திற்கு மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அவரது மனைவி ராதிகாவிற்கு ஆறுதல் கூறி, அவர்களுக்கு தேவையான உதவிகளும் மற்றும் அவரது 2½ வயது பெண் குழந்தைக்கான கல்வி உதவி வழங்குவதாகவும் தெரிவித்தார்.
    விக்ரம் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் சூர்யாவின் டுவிட்டர் பதிவு வைரலாகி வருகிறது.
    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான திரைப்படம் 'விக்ரம்'. கமல்ஹாசன் கதாநாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதில் சூர்யா கவுரவ வேடத்தில் நடித்துள்ளார்.

    ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். கிரிஷ் கங்காதரன் இதற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். பெரிய எதிர்பார்ப்புகளிடையே நேற்று திரையரங்குகளில் வெளியான 'விக்ரம்' திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனிடையே, ரோலேக்ஸ் கதாபாத்திரத்தில் நடித்த சூர்யாவின் கதாபாத்திரம் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

    இதுகுறித்த சூர்யா டுவிட்டர் பதிவானது தற்போது வைரலாகி வருகிறது. அதன்படி, “அன்புள்ள கமல்ஹாசன் அண்ணா எப்படி சொல்றது..!?. உங்களுடன் திரையில் இணைந்து நடிக்கும் கனவு நனவானது. இதை சாத்தியப்படுத்தியதற்கு நன்றி லோகேஷ் கனகராஜ். ரோலெக்ஸ் கதாபாத்திரத்திற்கு கிடைக்கும் அன்பை பார்க்கும்போது நெகிழ்ச்சியாக உள்ளது” என குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

    • 'ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்' திரைப்படம் ஜூலை 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
    • இப்படம் குறித்து திரைபிரபலங்கள் பலரும் அவர்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    காயத்ரி ரகுராம்நடிகர் மாதவன் இயக்குனராக அறிமுகமாகியுள்ள திரைப்படம் 'ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்'. இஸ்ரோ ராக்கெட் விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட இந்த திரைப்படத்தை இயக்குவதோடு மட்டுமல்லாமல் அதில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். இப்படம் ஜூலை 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. பெரும் எதிர்பார்ப்பில் வெளியான இப்படம் பலரின் பாராட்டுகளை பெற்று வருகிறது.

    காயத்ரி ரகுராம் - சூர்யா

    காயத்ரி ரகுராம் - சூர்யா

    இப்படம் குறித்து சில தினங்களுக்கு முன்பு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து கூறி சமூக வலைத்தளத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். பல திரைபிரபலங்களும் படம் குறித்து வாழ்த்து தெரிவித்து பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் ராக்கெட்ரி படத்தை பார்த்த காயத்ரி ரகுராம் தனது சமுக வலைத்தளப் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், "ராக்கெட்டரி படத்தில் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்தார்.. அதேபோன்று மற்ற மொழிகளிலும் அதே வேடத்தில் பிரபல நடிகர்கள் நடித்துள்ளனர். மற்ற மொழியில் டைலாக்கின் முடிவில் அனைவரும் ஜெய் ஹிந்த் என்று கூறுகிறார்கள். சூர்யா மட்டும் ஜெய்ஹிந்த் சொல்ல மறுத்தது ஏன்? அவர் இந்தியர் இல்லையா? இந்தியா வாழ்க என்று சொல்வதில் பெருமையாக இல்லையா? என்று கேள்வி எழுப்பி பதிவிட்டுள்ளார். இவரின் இந்த கருத்து சமூக வலைத்தளத்தில் பல விவாதங்களை கிளப்பி உள்ளது. 


    • தமிழ் திரையுலகில் முன்னணி நடிகை ராதிகா.
    • இவர் நடிகர் சிவகுமார் குடும்பத்துடன் தீபாவளி கொண்டாடியுள்ளார்.

    தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையான ராதிகா சரத்குமார் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'வெந்து தணிந்தது காடு' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. தொடர்ந்து இவர் 'கொலை', 'லவ் டுடே', 'சந்திரமுகி -2' போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார்.


    சிவகுமார் குடும்பத்துடன் ராதிகா

    இந்நிலையில், ராதிகா சரத்குமார் தீபாவளி பண்டிகையை நடிகர் சிவகுமார் குடும்பத்துடன் கொண்டாடியுள்ளார். இவர் சூர்யா, ஜோதிகா, கார்த்தி மற்றும் அவரது மனைவி ஆகியோருடன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நேற்று மாலை தீபாவளியை கொண்டாடியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோவை தனது சமூக வலைதளப் பக்கத்தில் ராதிகா பகிர்ந்துள்ளார்.




    • சூர்யா தற்போது வணங்கான் படத்திலும், வாடிவாசல் படத்திலும் நடித்து வருகிறார்.
    • இதனிடையே சூர்யா ரசிகர்களை சந்தித்துள்ளார்.

    சூர்யா படங்களுக்கு கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா மாநிலங்களிலும் வரவேற்பு உள்ளதால் அவர் படங்களை அந்தந்த மாநில மொழிகளில் டப்பிங் செய்து வெளியிட்டு, நல்ல வசூலும் பார்க்கிறார்கள். சூர்யா படங்கள் வெளியாகும் போதெல்லாம் அங்குள்ள ரசிகர்கள் தியேட்டர்களில் கொடி, தோரணங்கள் மற்றும் கட்-அவுட்கள் வைத்து பட்டாசுகள் வெடித்து கொண்டாடுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.

     

    ரசிகர்களை சந்தித்த சூர்யா

    ரசிகர்களை சந்தித்த சூர்யா

    இந்தநிலையில் கர்நாடக ரசிகர்கள் சூர்யாவை சந்திக்க விருப்பம் தெரிவித்தனர். இதனை ஏற்று கர்நாடக ரசிகர்களை பெங்களூருவில் உள்ள ஒரு ஓட்டலில் சூர்யா சந்தித்தார். நூற்றுக்கணக்கான ரசிகர்கள் இதில் கலந்து கொண்டனர். ரசிகர்களை சூர்யா சந்தித்த வீடியோ வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

    சூர்யா தற்போது பாலா இயக்கத்தில் வணங்கான் படத்திலும், வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்திலும் நடிக்கிறார். சூரரை போற்று பட இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்திலும் மீண்டும் நடிக்க பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    • தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் சூர்யா.
    • இவரின் 2டி நிறுவனம் தூய்மை பணிகளுக்காக வாகனம் ஒன்றை நன்கொடையாக வழங்கியுள்ளது.

    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சூர்யா. இவர் 2டி என்ற நிறுவனத்தின் மூலம் படங்களை தயாரித்து வருகிறார். இவர் தயாரிப்பில் வெளியான 'ஜெய் பீம்' போன்ற படைப்புகள் சமூகத்தில் நேர் நிலையான அதிர்வுகளை ஏற்படுத்தியது. படைப்புகளுடன் மட்டும் நில்லாமல் சமூக நல பணிகளுக்காகவும், மக்கள் நல திட்டங்களுக்காகவும் சூர்யாவின் 2டி நிறுவனம் சார்பில் நிதியுதவிகளும், பொருளுதவிகளும் நன்கொடையாக அளித்து வருகிறது.


    2டி நிறுவனம் சார்பில் வாகனம் வழங்கிய சிவகுமார்

    அந்த வகையில் கானாத்தூர் ரெட்டி குப்பம் பகுதியில் தூய்மை பணிகளுக்காக வாகனம் ஒன்று வேண்டும் என அந்த ஊராட்சியின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்று, தூய்மை பணிகளுக்கான நவீன வாகனத்தை நடிகர் சூர்யாவின் 2டி நிறுவனம் நன்கொடையாக அளித்துள்ளது.


    2டி நிறுவனம் நன்கொடை வாகனம்

    இந்த வாகனத்தை நடிகர் சூர்யா சார்பாக அவரது தந்தை நடிகர் சிவக்குமார், கானத்தூர் ரெட்டி குப்பம் ஊராட்சி மன்ற தலைவரான திருமதி. வள்ளி எட்டியப்பனிடம் வழங்கினார். நடிகர் சூர்யா, திரையுலக நலன், மாணவ மாணவிகளின் கல்விச் செலவு மட்டுமல்லாமல், மக்கள் நலனுக்காகவும் இயன்ற அளவில் உதவிகளை தொடர்ச்சியாக செய்து வருகிறார். இவரது சமூக சேவையை திரையுலகினரும் சமூக ஆர்வலர்களும் பாராட்டி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் 'சூர்யா 42'.
    • இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

    'சிறுத்தை', 'வீரம்', 'விஸ்வாசம்', 'அண்ணாத்த' உள்ளிட்ட பல படங்களை இயக்கிய சிவா இயக்கும் படத்தில் சூர்யா தற்போது நடித்து வருகிறார். சூர்யா 42 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றனர்.


    சூர்யா 42

    இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பத்தானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன்பு பூஜையுடன் தொடங்கி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இப்படம் 3டி முறையில் சரித்திர படமாக 10 மொழிகளில் வெளியாகவுள்ளது.


    சூர்யா 42 படக்குழு

    இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, சூர்யா 42 படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இதனை நடிகை திஷா பத்தானி தனது சமூக வலைதளத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளார்.

    • 67வது தென்னிந்திய பிலிம்பேர் விருதுகளில் சூர்யாவின் சூரரைப் போற்று மற்றும் ஜெய்பீம் திரைப்படம் பல விருதுகளை குவித்துள்ளது.
    • இதில் கலந்துக் கொண்ட சூர்யா ரோலக்ஸ் கேரக்டர் குறித்து பேசியுள்ளார்.

    67வது தென்னிந்திய பிலிம்பேர் விருது வழங்கும் விழா நேற்று முன்தினம் பெங்களூரில் நடைபெற்றது. இதில் சூர்யா நடிப்பில் வெளியான 'சூரரைப் போற்று' திரைப்படம் 8 விருதுகளை பெற்றது. இதில் சிறந்த இயக்குனர் (சுதா கொங்கரா), சிறந்த நடிகர் (சூர்யா), சிறந்த நடிகை (அபர்ணா பாலமுரளி), சிறந்த இசை ஆல்பம் (ஜி.வி.பிரகாஷ்), சிறந்த துணை நடிகை (ஊர்வசி), சிறந்த பின்னணி பாடகர் (கோவிந்த் வசந்தா, கிறிஸ்டின் ஜோஸ்), சிறந்த பின்னணி பாடகி (தீ), சிறந்த ஒளிப்பதிவு (நிகோத் பொம்மி) ஆகிய பிரிவுகளில் விருதுகளை அள்ளி சென்றுள்ளது. மேலும் 'ஜெய்பீம்' திரைப்படம் 2 விருதுகளையும் பெற்றது.

     

    விக்ரம் - ரோலக்ஸ்

    விக்ரம் - ரோலக்ஸ்

    இந்நிலையில் இவ்விழாவில் மனைவி ஜோதிகாவுடன் கலந்துகொண்ட சூர்யாவிடம், ரோலக்ஸ் கேரக்டர் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த சூர்யா, "நான் இன்று என்னவாக இருந்தாலும் அதற்கு ஊக்கமாக இருந்தவர் கமல்ஹாசன். அவர் இப்படி ஒரு வாய்ப்பு இருக்கிறது என்று சொன்னதும் மறுக்க முடியவில்லை. அவருக்காகவே அந்த ரோலக்ஸ் கேரக்டரில் நடித்தேன்" என்றார். 'ரோலக்ஸ் மீண்டும் வருவாரா?' என்ற கேள்விக்கு, "இதற்கு காலம் பதில் சொல்லும். படம் உருவானால் அந்த கேரக்டரில் நிச்சயம் மீண்டும் நடிப்பேன்" என்றார். 

    • இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான சூரரைப் போற்று திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
    • இப்படம் 67வது தென்னிந்திய பிலிம்பேர் விருதுகளில் பல விருதுகளை குவித்துள்ளது.

    இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி, ஊர்வசி, கருணாஸ் போன்ற பல முன்னணி நடிகர்கள் நடித்து மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் 'சூரரைப் போற்று'. இத்திரைப்படம் கேப்டன் ஜி.ஆர். கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் சர்வதேச திரைப்பட விழாவில் ஏராளமான விருதுகளை குவித்ததோடு, 5 தேசிய விருதுகளையும் தட்டி சென்றது.

     

    சூரரைப் போற்று

    சூரரைப் போற்று

    இந்நிலையில், 67வது தென்னிந்திய பிலிம்பேர் விருது வழங்கும் விழாவில் 'சூரரைப் போற்று' திரைப்படம் 8 விருதுகளை குவித்துள்ளது. இதில் சிறந்த இயக்குனர் (சுதா கொங்கரா), சிறந்த நடிகர் (சூர்யா), சிறந்த நடிகை (அபர்ணா பாலமுரளி), சிறந்த இசை ஆல்பம் (ஜி.வி.பிரகாஷ்), சிறந்த துணை நடிகை (ஊர்வசி), சிறந்த பின்னணி பாடகர் (கோவிந்த் வசந்தா, கிறிஸ்டின் ஜோஸ்), சிறந்த பின்னணி பாடகி (தீ), சிறந்த ஒளிப்பதிவு (நிகோத் பொம்மி) ஆகிய பிரிவுகளில் விருதுகளை அள்ளி சென்றுள்ளது.

     

    சார்ப்பட்டா பரம்பரை

    சார்ப்பட்டா பரம்பரை

    மேலும் இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் வெளியான சார்ப்பட்டா பரம்பரை படத்திற்கு சிறந்த நடிகர் (ஆர்யா), சிறந்த பாடலாசிரியர் (அறிவு), சிறந்த துணை நடிகர் (பசுபதி) ஆகிய 3 விருதுகளை இப்படம் கைப்பற்றியுள்ளது.

    • 68-வது தேசிய திரைப்பட விருதுகள் விழா நேற்று முன்தினம் நடைபெற்றது.
    • இதில் சிறந்த நடிகருக்கான விருதை சூர்யாவும் சிறந்த திரைப்படத்திற்கான விருதை ஜோதிகாவும் பெற்றுக் கொண்டனர்.

    இந்திய அரசு சார்பில் திரைத்துறை மற்றும் திரைத்துறை கலைஞர்களுக்கு தேசிய விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த 2020-ஆம் ஆண்டிற்கான 68-வது தேசிய விருது பட்டியல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. இதில் சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப்போற்று திரைப்படத்திற்கு ஐந்து விருதுகளும், சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் படத்திற்கு மூன்று விருதுகளும், மண்டேலா படத்திற்கு 2 விருதுகளும் அறிவிக்கப்பட்டது.

    குழந்தைகளுடன் சூர்யா-ஜோதிகா

    குழந்தைகளுடன் சூர்யா-ஜோதிகா

     

    இதையடுத்து 2020-ஆம் ஆண்டு சிறந்த நடிகருக்கான தேசிய விருதை சூரரை போற்று படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருதை சூர்யாவும், சிறந்த திரைப்படத்திற்கான விருதை தயாரிப்பாளர் ஜோதிகாவும் குடியரசு தலைவர் திரௌபதி முர்முவிடம் இருந்து பெற்றுக் கொண்டனர்.

     

    குடும்பத்துடன் சூர்யா-ஜோதிகா

    குடும்பத்துடன் சூர்யா-ஜோதிகா

    இந்நிலையில் இதுகுறித்து சூர்யா நெகிழ்ச்சியுடன் பதிவிட்டு அதனுடன் இரு புகைப்படங்களையும் இணைத்துள்ளார். அதில், என்றும் நன்றியுள்ளவள் சுதா! வெற்றி பெற்ற அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். இது அன்பான ரசிகர்களுக்காக!! என்று பதிவிட்டுள்ளார். அவர் இணைத்துள்ள அந்த புகைப்படத்தில் சூர்யா மற்றும் ஜோதிகா பெற்று கொண்ட பதக்கத்தை சூர்யாவின் தந்தை சிவகுமார் மற்றும் தாய் லஷ்மி குமாரி இருவரின் கழுத்தில் அணிய வைத்து அழகு பார்த்துள்ளனர். இந்த புகைப்படங்களை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகிறனர். 

    • 68-வது தேசிய திரைப்பட விருதுகள் விழா இன்று நடைபெற்றது.
    • இதில் சிறந்த நடிகருக்கான விருதை சூர்யாவும் சிறந்த திரைப்படத்திற்கான விருதை ஜோதிகாவும் பெற்றுக் கொண்டனர்.

    இந்திய அரசு சார்பில் திரைத்துறை மற்றும் திரைத்துறை கலைஞர்களுக்கு தேசிய விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த 2020-ஆம் ஆண்டிற்கான 68-வது தேசிய விருது பட்டியல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது.


    சூரரைப்போற்று 

    இதில் சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப்போற்று திரைப்படத்திற்கு ஐந்து விருதுகளும், சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் படத்திற்கு மூன்று விருதுகளும், மண்டேலா படத்திற்கு 2 விருதுகளும் அறிவிக்கப்பட்டது.


    திரௌபதி முர்மு - சூர்யா

    இதையடுத்து 2020-ஆம் ஆண்டு சிறந்த நடிகருக்கான தேசிய விருதை சூரரை போற்று படத்திற்காக குடியரசு தலைவர் திரௌபதி முர்முவிடம் இருந்து சூர்யா பெற்றுக்கொண்டார். இதைத்தொடர்ந்து சூரரை போற்றுக்காக சிறந்த திரைப்படத்திற்கான விருதை தயாரிப்பாளர் ஜோதிகா பெற்றுக் கொண்டார்.


    திரௌபதி முர்மு - ஜோதிகா

    இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் சூர்யா பேசியதாவது, "இந்திய அரசாங்கத்திற்கும் ஜூரிக்கும் என் நன்றி. என் மனதில் நிறைய உணர்ச்சிகள் ஓடிக்கொண்டிருக்கின்றன. நான் நன்றி சொல்ல நிறைய பேர் உள்ளனர். உண்மையிலேயே மறக்க முடியாத தருணம்" என்று பேசினார்.

    • 68-வது தேசிய திரைப்பட விருதுகள் விழா இன்று நடைபெற்றது.
    • இதில் சிறந்த நடிகருக்கான விருதை சூர்யாவும் சிறந்த திரைப்படத்திற்கான விருதை ஜோதிகாவும் பெற்றுக் கொண்டனர்.

    இந்திய அரசு சார்பில் திரைத்துறை மற்றும் திரைத்துறை கலைஞர்களுக்கு தேசிய விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த 2020-ஆம் ஆண்டிற்கான 68-வது தேசிய விருது பட்டியல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது.


    திரௌபதி முர்மு - சூர்யா

    இதில் சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப்போற்று திரைப்படத்திற்கு ஐந்து விருதுகளும், சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் படத்திற்கு மூன்று விருதுகளும், மண்டேலா படத்திற்கு 2 விருதுகளும் அறிவிக்கப்பட்டது.


    திரௌபதி முர்மு  - ஜோதிகா

     இந்நிலையில் 2020-ஆம் ஆண்டு சிறந்த நடிகருக்கான தேசிய விருதை சூரரை போற்று படத்திற்காக குடியரசு தலைவர் திரௌபதி முர்முவிடம் இருந்து சூர்யா பெற்றுக்கொண்டார். இதைத்தொடர்ந்து சூரரை போற்றுக்காக சிறந்த திரைப்படத்திற்கான விருதை தயாரிப்பாளர் ஜோதிகா பெற்றுக் கொண்டார். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    ×