என் மலர்
நீங்கள் தேடியது "நடிகை"
- தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு மேஹ்னா அந்த அதிகாரியிடம் கேட்டுள்ளார்.
- மேஹ்னாவின் கைதுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டங்கள் எழுந்துள்ளன.
வங்கதேசத்தை சேர்ந்த பிரபல நடிகை மேஹ்னா ஆலம். மாடலிங் துறையில் இருந்து திரைத்துறைக்கு வந்த இவர் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். 2020 ஆம் ஆண்டு மிஸ் எர்த் பங்களாதேஷ் பட்டத்தை வென்றுள்ளார்.
வங்கதேசத்தில் உள்ள சவுதி அரேபிய தூதரகத்தில் பணியாற்றிய திருமணமான அதிகாரி ஒருவரை மேஹ்னா காதலித்து வந்தார். ஒரு கட்டத்தில் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு மேஹ்னா அந்த அதிகாரியிடம் கேட்டுள்ளார். ஆனால் அந்த அதிகாரி அதற்கு மறுத்துவிட்டார்.
இந்நிலையில் மேஹ்னா ஆலமை டாக்காவில் உள்ள அவரது வீட்டில் வைத்து வங்கதேச போலீசார் நேற்று நள்ளிரவு கைது செய்தனர்.
வங்கதேசம், சவுதி அரேபியா இடையேயான இருநாட்டு உறவுக்கு அச்சுறுத்தலாக விளங்குவதால் மேஹ்னா சிறப்பு அதிகார சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட மேஹ்னாவை 30 நாட்கள் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையே மேஹ்னாவின் கைதுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டங்கள் எழுந்துள்ளன.
- எவ்வளவு தேடியும் அவரின் உடல் பாகங்கள் கிடைக்கவில்லை
- அந்த சமயத்தில் செளந்தர்யா கர்ப்பமாக இருந்தாக கூறப்படுகிறது
தென்னிந்திய திரையுலகில் 90களின் இறுதியில் தொடங்கி 2000களில் அவர் உயிருடன் இருந்தவரை முன்னணி நடிகையாக வளம் வந்தவர் சௌந்தர்யா.
ரஜினியின் படையப்பா, அருணாச்சலம், கமலின் காதலா காதலா, விஜயகாந்தின் சொக்கத்தங்கம் என பல படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களுக்கு அங்கு அறியப்பட்ட முகமாக இருந்தவர் சவுந்தர்யா.
கடந்த 2004 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 17ஆம் தேதி நடந்த விமான விபத்தில் தனது 31 ஆவது வயதில் சௌந்தர்யா உயிரிழந்தார். இந்த சம்பவம் திரையுலகில் பெரும் அதிர்வலையை அந்த சமயத்தில் ஏற்படுத்தி இருந்தது.
கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தை சேர்ந்தவர் சௌந்தர்யா. சினிமா கனவினால் மருத்துவப் படிப்பை பாதியில் விட்டுவிட்டு நடிக்க வந்தார். முன்னணி நடிகையாகவும் உருவெடுத்தார். சௌந்தர்யாவுடன் நடிக்க பல முன்னணி நடிகர்கள் காத்துக்கிடந்தனர்.

அவருக்கு 2003 இல் ரகு என்ற சாப்ட்வேர் இன்ஜினீயருடன் திருமணமும் நடந்தது. 2004 இல் விபத்து நடந்த அன்றைய தினம் பெங்களூரில் நடக்கும் அரசியல் பிரசாரதிற்காக கரீம்நகரில் இருந்து விமானத்தில் தனது சகோதரர் அமர்நாத்துடன் சௌந்தர்யா புறப்பட்டார்.
ஆனால் விமானம் எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளனத்தில் இருவரும் உயிரிழநதனர். அந்த சமயத்தில் செளந்தர்யா கர்ப்பமாக இருந்தாக கூறப்படுகிறது. எவ்வளவு தேடியும் அவரின் உடல் பாகங்கள் கிடைக்கவில்லை. திரையுலகில் இன்று வரை இது ஒரு துயர சம்பவமாக இருந்து வருகிறது.

இந்நிலையில் செளந்தர்யாவின் மரணம் விபத்து அல்ல திட்டமிடப்பட்ட கொலை என நபர் ஒருவர் போலீசில் புகார் அளித்துள்ளார். தெலுங்கானா கம்மம் மாவட்டம் சத்யநாராயணபுரம் கிராமத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சிட்டிமல்லு, சௌந்தர்யா மரணத்தின் பின்னணியில் சதித்திட்டம் உள்ளதாக சந்தேகம் கிளப்பியுள்ளார்.
ஷம்ஷாபாத்தின் ஜல்லேபள்ளியில் சௌந்தர்யாகவுக்கு சொந்தமாக ஆறு ஏக்கர் விருந்தினர் மாளிகை ஒன்று இருந்தது. தெலுங்கு நடிகர் மோகன் பாபு அந்த மாளிகையை சௌந்தர்யாவிடம் கேட்டதாகவும், ஆனால் சௌந்தர்யாவின் சகோதரர் அமர்நாத்தும் அதை நிராகரித்தனர்.

விமான விபத்தில் இருவரும் இறந்த பிறகு மோகன் பாபு அந்த மாளிகையை சட்டவிரோதமாக ஆக்கிரமித்துக்கொண்டார். செளந்தர்யா சென்ற விமானம் ஏன் விபத்துக்குள்ளானது என இதுவரை உறுதியாகவில்லை.
இதன் பின்னணியில் சதித்திட்டம் உள்ளதா என்பதை காவல்துறை முழுமையாக விசாரிக்க வேண்டுமே என கம்மம் ஏசிபி மற்றும் கம்மம் கலெக்டரிடம் புகார் கடிதம் அளித்திருக்கிறார்.
நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் நடிகை, பல படங்களில் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை சேமித்து வைத்திருந்தாராம். இந்த பணத்தை எல்லாம் என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்த நிலையில், அவரது கணவர், புதிய தொழில் ஒன்றை தொடங்கலாம் என்று ஐடியா கொடுத்தாராம். நடிகையும் நல்லா இருக்கே... என்று சம்மதம் தெரிவித்தாராம். இதற்காக பல கோடி முதலீடு செய்தாராம் நடிகை.
ஆனால், எதிர்ப்பார்த்த படி அந்த தொழில் சூடு பிடிக்க வில்லையாம். இதனால், நொந்து போன நடிகை, கணவரை நம்பி பணத்தை முதலீடு செய்ய கூடாது என்று முடிவு செய்து இருக்கிறாராம். இருந்தாலும் நடிகையின் கணவர் பல ஐடியாக்களோடு வலம் வந்துக் கொண்டிருக்கிறாராம்.
ஒரு படத்திலேயே பல இளசுகளை தன்வசப்படுத்திய நடிகைக்கு தற்போது பட வாய்ப்பு இல்லாமல் இருக்கிறாராம். அதற்கு நடிகையை வைத்து முதல் படத்தை இயக்கிய இயக்குனரே காரணமாம். அப்படி என்ன என்று விசாரித்தால், நடிகையை தேடி வரும் படங்களை எல்லாம், கதை சரியில்லை, அந்த ஹீரோ வேண்டாம், படம் நன்றாக வராது என்று பல காரணங்களை சொல்லி நடிகையை இயக்குனர் நடிக்க விடாமல் செய்து வருகிறாராம்.
இயக்குனரின் இந்த செயல் நடிகையின் நல்லதுக்கா.... இல்லை... வேற எதுக்கா... என்று கோடம்பாக்கத்தினர் அரசல் புரசலாக பேசி வருகிறார்கள்.
நம்பர் ஒன் நடிகையாக வலம் வந்த நடிகை, திருமணத்திற்கு முன்பு இரண்டு படங்களுக்கு அட்வான்ஸ் தொகையாக ரூ.10 கோடி வாங்கினாராம். அதன்பிறகு படம் நடித்து தர தாமதிக்கிறாராம். இதனால் கொடுத்த பணத்தை படக்குழு திரும்பி கேட்டார்களாம். ஆனால் அவர்களுக்கு பதில் அளித்த நடிகை புதிய படத்தில் நடித்து தருகிறேன். பணத்தை திரும்பி கேட்காதீங்க என்று சொல்லாமல் சொல்லி விட்டாராம். இதனால் பணம் கொடுத்தவர்கள் குழம்பி பணத்தை எப்படி திரும்பி பெறுவது என்று யோசித்து வருகின்றார்களாம்.
டாப் ஹீரோக்களுடன் நடித்த நடிகை திடீரென திருமணம் செய்து கொண்டாராம். பின்னர் நடிக்க வந்த நடிகைக்கு வாய்ப்பு தர யாருக்கும் மனசு இல்லையாம். இதனால் விரக்தியடைந்த நடிகை என்ன செய்வது என்று யோசித்து நைட் பார்ட்டிக்கு ஹீரோக்களை அழைத்து வாய்ப்பு கேட்டு வருகிறாராம். அதுமட்டுமல்லாமல் சில இடங்களுக்கு அழையா விருந்தாளியாக செல்லும் நடிகை அட்ஜஸ்ட்மெண்ட் செய்யக்கூட தயார் என்று சொல்லியிருக்கிறாராம்.
தன் இடுப்பழகில் ரசிகர்களை கிறங்கடித்த முன்னணி நடிகையின் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்காதா என பல நடிகர்கள் ஏக்கத்துடன் இருந்தார்களாம். ஆனால் நடிகையோ நடிகர் ஒருவரை காதலிக்க தொடங்கினாராம். நடிகையின் மூலம் தயாரிப்பாளரான நடிகர் தன் முதல் படத்தில் அந்த நடிகையை நடிக்க வைத்தாராம்.
இதற்கு சம்பளம் கேட்ட நடிகையிடம் நீ என் வருங்கால மனைவி ஆகப்போகிறாயே என்று ஆசை வார்த்தைகளை கூறி ஏமாற்றி வந்தாராம். பின்னர் சில வருடங்கள் இருவரும் உறவில் இருந்தார்களாம். அதன்பிறகு நடிகையின் மார்க்கெட் குறையவே நடிகர் கம்பி நீட்டிவிட்டாரம்.
இதனால் நொந்துபோன நடிகை சொந்த ஊரில் மாப்பிளையை பார்த்து திருமணம் செய்து கொண்டாராம். ஆனால் இன்று வரை தன்னை ஏமாற்றிய அந்த நடிகர் மீது கடும் கோப்பத்தில் உள்ளாராம் நடிகை.
நீண்ட இடைவேளைக்கு பிறகு தமிழில் முன்னணி நடிகரின் படத்தில் நடித்த நடிகை ஒருவர், தெலுங்கு பக்கம் சென்றாராம். அங்கு முன்னணி நடிகரின் படத்தில் ஒப்பந்தமானாராம். அந்த படத்திற்காக பெரிய தொகையை சம்பளமாக கேட்டாராம். ஆனால் படக்குழு இதற்கு ஒப்புக் கொள்ளாமல் படத்தில் இருந்து விலக்கி விட்டார்களாம்.
பின்னர் அந்த நடிகை, நான் அதிக படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதால் இந்த படத்தில் இருந்து நானே விலகி விட்டேன் என்று பில்டப் விட்டு வருகிறாராம்.
முன்னணி ஹீரோக்களுடன் நடித்த நடிகை ஒருவர் டாப் ஹீரோ ஒருவருடன் நடிக்காததை பெரிய குறையாக நினைத்து வந்தாராம். இவருக்கு போட்டியாக இருக்கும் நடிகை அந்த நடிகருடன் இணைந்து நடித்து கெமிஸ்ட்ரியில் பின்னிவிட்டாராம். இதனால் கடுப்பான நடிகை இந்த தடவை வாய்ப்பை நழுவவிடக்கூடாது என்று நினைத்து பலபேரை தூது அனுப்பினாராம்.
தூது ஒர்க்கவுட் ஆகவே அந்த டாப் ஹீரோவும் நடிகையும் நேரில் சந்தித்தார்களாம். பின்னர் ஹீரோவுடன் மூன்று நாட்கள் தனிமையில் பொழுதை கழித்த நடிகைக்கு கிரீன் சிக்னல் கிடைத்துவிடவே தன் படத்தில் ஏற்கனேவே கமிட் செய்திருந்த ஹீரோயினை தூக்கி விட்டு நடிகையை புக் செய்துவிட்டாராம்.
இதனால் குஷியான நடிகை ஹீரோவின் அடுத்தப்படத்திலும் நடிக்க தூது அனுப்பவே ஒரு முறைதான் வாய்ப்பு என ஹீரோ கண்டிப்பாக சொல்லிவிட்டாராம்.
ஒரு சில படங்களில் நடித்து பெரிய அளவில் வெளியே தெரியாத நடிகை ஒருவர் தேசிய விருது வாங்கிய பின்னர் பிசியான நடிகையாக மாறினாராம். பல மொழி படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வந்தாராம். திருமணம் ஆன பின்னரும் இவர் படங்களில் பிசியாக நடித்து வருகிறாராம்.
இவரை இயக்குனர்களும், நடிகர்களும் முத்தக் காட்சி, ஆபாச காட்சிகளில் நடிக்க வற்புறுத்தி வந்தார்களாம். இதனால் கோபமான நடிகை என் கணவருக்கு இந்த மாதிரி காட்சிகளில் நடிப்பது பிடிக்காது என்றும் நான் இது போன்ற காட்சிகளில் நடிக்க விருப்பபடவில்லை என்று திட்டவட்டமாக சொல்லிவிட்டாராம். இதனால் முத்த காட்சிகள் இடம்பெறும் கதைகள் அவரிடம் வந்தால் ஆளவிடுங்கடா சாமி என்று எஸ்கேப் ஆகிவிடுகிறாராம்.
பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்த இளம் நடிகை சிறிது காலம் சினிமாவில் இருந்து ஓய்வெடுத்து வந்தாராம். அதன்பின்னர் மீண்டும் நடிக்க வந்த நடிகை, பிரபல நடிகருடன் காதல் வயப்பட்டு திருமணம் செய்து கொண்டாராம். அந்த நடிகையின் பிறந்தநாளில் நடிகர் சமூக வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்தாராம்.
அப்போது திடீரென நடிகை ஆண்டி ஆகிவிட்டார் என்றும் அவருக்கு வயது 31 கடந்து விட்டது என்றும் நடிகர் தெரிவித்தாராம். பொதுவெளியில் நடிகையின் வயதை கூறியதால் அவர் கோபத்தில் உள்ளாராம்.
ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்த நடிகை குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானாராம். எப்படியாவது நடிகையுடன் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என பலர் தவம் கிடந்தார்களாம். ஒரு கட்டத்தில் மார்க்கெட் குறையவே நடிகை திருமணம் செய்து கொண்டாராம்.
அதன்பின்னர், வரும் படங்களை தட்டிக்கழிக்காமல் நடித்து வருகிறாராம். ஒரு படப்பிடிப்பின் போது நடிகை மீது ஆசைப்பட்ட முன்னணி நடிகர் எதாவது சொல்லி நடிகையின் சுண்டுவிரலையாவது தொட்டுவிட வேண்டும் என இயக்குனருடன் சேர்ந்து பல தில்லாலங்கடி வேலை பார்த்து வந்தாராம். இதை தெரிந்து கொண்ட நடிகை முடியவே முடியாது என ஸ்டிரிக்டாக சொல்லிவிட்டாரம்.