search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விஜய்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வருகிற சட்டசபை தேர்தலில் விஜயுடன் திருமாளவன் கூட்டணி வைக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி இருந்தன.
    • புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்பது குறித்து முடிவு செய்யப்படும் என திருமாவளவன் கூறியிருந்தார்.

    அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயும், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனும் ஒரே மேடையில் பங்கேற்க உள்ளதாக கூறப்பட்டது. இதனால் வருகிற சட்டசபை தேர்தலில் விஜயுடன் திருமாளவன் கூட்டணி வைக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி இருந்தன.

    இந்த செய்தியை திருமாவளவன் பல முறை மறுப்பு தெரிவித்த நிலையில், திமுக கூட்டணியில் இருந்து திருமாவளவன் விலகுவதாக கூறப்பட்டது. இதனால் புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்பது குறித்து முடிவு செய்யப்படும் என திருமாவளவன் கூறியிருந்தார்.

    இந்த நிலையில், சென்னையில் நடைபெற உள்ள புத்தக வெளியீட்டு விழாவில் திருமாவளவன் பங்கேற்கவில்லை என தகவல் வெளியாகி உள்ளது. தற்போதைய அரசியல் சூழ்நிலையை கருத்தில் கொண்டு திருமாவளவன் பங்கேற்க மறுப்பதாக கூறப்படுகிறது.

    • படப்பிடிப்பிற்கு வந்த விஜயை கண்ட ரசிகர்கள் ஆரவாரம் செய்த வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
    • கடந்த சில தினங்களுக்கு முன் ராணுவ அதிகாரிகளின் குடும்பத்தாரை விஜய் சந்தித்து பேசியிருந்தார்.

    எச்.வினோத் இயக்கத்தில் தற்போது விஜய் அவருடைய 69-வது படத்தில் நடித்து வருகிறார். அந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். இப்படத்தில் பாபி தியோல், மமிதா பைஜூ மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடித்து வருகின்றனர்.

    இந்தப் படம் விஜய்க்கு கடைசி படம் என்பதால் படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருக்கிறது. தற்போது இப்படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. சில தினங்களுக்கு முன் படப்பிடிப்பிற்கு வந்த விஜயை கண்ட ரசிகர்கள் ஆரவாரம் செய்த வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    இந்த நிலையில், தளபதி 69 படப்பிடிப்பு சென்னை பல்லாவரத்தில் உள்ள ராணுவ முகாம் பகுதியில் நடந்துவருகிறது. முன்னதாக, கடந்த சில தினங்களுக்கு முன் ராணுவ அதிகாரிகளின் குடும்பத்தாரை விஜய் சந்தித்து பேசியிருந்தார்.

    இதனிடையே விஜய் அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். கட்சி சார்ந்த கூட்டங்களில் பங்கேற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • மற்ற கட்சிகளில் கூட்டம் என்றால் 200, 300 பேர் இருப்பார்கள். நமது கட்சியில் தான் 2 ஆயிரம், 3 ஆயிரம் கூடி இருக்கிறார்கள்.
    • கீழ் மட்டத்தில் இருந்து மேல் மட்டம் வரையில் பதவிகள் வழங்கப்பட இருக்கிறது.

    சென்னை:

    நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் 2026 சட்டமன்ற தேர்தலில் களம் இறங்குகிறது. கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்பதற்கு விஜய் திட்டமிட்டுள்ளார். மேலும் கட்சி வளர்ச்சி பணியிலும் தீவிரம் காட்டி வருகிறார். அந்த வகையில் அவரது அறிவுறுத்தலின் பேரில் சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றி கழகத்தின் தலைமை அலுவலகத்தில், செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    இந்த கூட்டத்துக்கு தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் தலைமை தாங்கி பேசியதாவது:-

    மற்ற கட்சிகளில் கூட்டம் என்றால் 200, 300 பேர் இருப்பார்கள். நமது கட்சியில்தான் 2 ஆயிரம், 3 ஆயிரம் கூடி இருக்கிறார்கள். நான் இந்த கூட்டம் தொடங்குவதற்கு முன்பாக கட்சி அறையில் இருந்தேன். அப்போது எவ்வளவு பேர் வந்திருக்கிறார்கள்? என்று கேட்டேன். 30, 40 பேர் மட்டும் வந்து அமர்ந்திருக்கிறார்கள் என்று சொன்னார்கள். இன்னும் அரை மணி நேரத்தில் பாருங்கள் என்று சொன்னேன். அதை போன்று கூட்டம் திரண்டுள்ளது. இதுதான் தளபதி (விஜய்) மீது வைத்திருக்கிற பாசம், அன்பு.

    தளபதியின் அறிவுறுத்தலின்படி கட்சியில் உழைப்பவர்களுக்கு மிக விரைவில் பதவிகள் வழங்கப்படும். யாரெல்லாம் கட்சிக்கு உழைத்தார்களோ அவர்களுக்கு தேடி போய் பதவி கொடுப்பதுதான் தமிழக வெற்றி கழகம். கீழ் மட்டத்தில் இருந்து மேல் மட்டம் வரையில் பதவிகள் வழங்கப்பட இருக்கிறது. நம் தலைவரை முதலமைச்சர் இருக்கையில் அமர வைப்பதற்கு நாம் அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • பிறந்தநாளை ஒட்டி ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் ரத்த தானம் செய்துள்ளார்.
    • பாலா படம் என்றாலே கஷ்டமாகத்தான் இருக்கும் என்று சொல்வார்களே என்ற கேள்விக்கு பதிலளித்தார்.

    பாலாவின் இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் வணங்கான். இந்த படத்தின் நாயகியாக ரோஷினி பிரகாஷ் நடித்துள்ளார். இயக்குனர் மிஸ்கின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சமுத்திரக்கனி, சண்முக ராஜன், அருள்தாஸ் ஆகியோரும் இதில் நடித்துள்ளனர்.

    படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். யு/ஏ சான்றிதழ் பெற்ற இந்த படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. அருண் விஜய் இன்று [நவம்பர் 19] தனது 47வது பிறந்தநாளை கொண்டாடுவதை முன்னிட்டு இந்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

     

    இதற்கிடையே தனது பிறந்தநாளை ஒட்டி ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் ரத்த தானம் செய்துள்ளார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசினார். வணங்கான் தனது கேரியரில் முக்கியமான படமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை, பாலா சாருக்கு நன்றி, ஒரு நடிகரா என்னை வேறு பரிணாமத்தில் இப்படம் காட்டும் என்று தெரிவித்தார்.

     

    தொடர்ந்து பாலா படம் என்றாலே கஷ்டமாகத்தான் இருக்கும் என்று சொல்வார்களே என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், இந்தப் படத்தில் நான் கஷ்டப்படவில்லை. இஷ்டப்பட்டுதான் எல்லா விஷயங்களையும் செய்தேன். பாலா சாருடன் இணைந்து பணியாற்றியது எனக்கு நல்ல அனுபவமாக இருந்தது என்றார்.

    தொடர்ந்து அஜித்தின் 'குட் பேட் அக்லி' படமும் பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாகிறது. அஜித் சாருக்கும், உங்களுக்கும் போட்டி இருக்குமா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அருண் விஜய், அஜித் சார் உச்சம். அவருக்கும் யாரும் போட்டி கிடையாது. அவருடைய ரசிகர்களும் என்னை நேசிகிறார்கள். நிச்சயமாக போட்டி எதுவும் கிடையாது என்று தெரிவித்தார். 

     

    மேலும் விஜய் தவெக என்ற அரசியல் கட்சி தொடங்கியது பற்றிய கேள்விக்கு பதிலளித்த அவர், விஜய் சாரின் அரசியல் பயணம் வெற்றிப் பயணமாக அமைய எனது வாழ்த்துக்கள் என்று தெரிவித்தார். அஜித் மற்றும் அருண்விஜய் இணைத்து என்னை அறிந்தால் படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • தொடர்ந்து நேற்றும், இன்றும் கொடிகள் ஏற்றப்பட்டு வருகின்றன.
    • பொது இடத்தில் கொடியேற்ற தானே போலீஸ் அனுமதி பெறவேண்டும்.

    கந்தர்வகோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை தாலுகாவில் சுமார் 36 கிராம பஞ்சாயத்துகளும் அது சார்ந்த கிராமங்களும் உள்ளன.

    இந்த பகுதியில் ஊராட்சிக்கு ஒரு இடத்தில் தமிழக வெற்றிக்கழகம் சார்பாக கொடி கம்பம் நட்டு கொடியேற்று விழா நடத்த கட்சி நிர்வாகிகள் திட்டமிட்டனர்.

    இதையடுத்து இதற்கு அனுமதி கோரி கடந்தவாரம் கந்தர்வகோட்டை போலீஸ் நிலையத்தில் தமிழக வெற்றிக்கழகம் சார்பாக மனு கொடுக்கப்பட்டது. மனுவை பெற்றுக்கொண்ட போலீசார் கொடியேற்று விழா நடத்த அனுமதி கொடுக்கவில்லை என தெரிகிறது.

    இதுபற்றி நிர்வாகிகள் கேட்டதற்கு இன்று, நாளை என்று தாமதப்படுத்தி வந்துள்ளனர். இதையடுத்து கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் கொடியேற்றுவது என்று முடிவு செய்தனர்.

    இதையடுத்து நேற்று முன்தினம் கந்தர்வகோட்டை ஒன்றிய த.வெ.க. தலைவர் அருண்பிசாத், செயலாளர் சுரேந்திரன், பொருளாளர் அய்யாதுரை ஆகியோர் முன்னிலையில் நிர்வாகிகள், தொண்டர்கள் தங்கள் வீடுகளில் கொடிகளை ஏற்றினார்கள். தொடர்ந்து நேற்றும், இன்றும் கொடிகள் ஏற்றப்பட்டு வருகின்றன.

    இதுபற்றி நிர்வாகிகள் கூறுகையில், தமிழக வெற்றிக்கழக கொடி ஏற்று விழாவுக்கு முறைப்படி அனுமதி கேட்டு மனு கொடுத்தோம். ஆனால் போலீசார் தொடர்ந்து தாமதப்படுத்தி வந்தனர்.

    பொது இடத்தில் கொடியேற்ற தானே போலீஸ் அனுமதி பெறவேண்டும். வீடுகளில் ஏற்ற அனுமதி தேவை இல்லையே என எண்ணி எங்கள் பகுதியில் உள்ள நிர்வாகிகள், உறுப்பினர்கள் வீடுகளில் கட்சி கொடியை ஏற்றியுள்ளோம். இதுவரை சுமார் 2 ஆயிரம் வீடுகளில் கொடி ஏற்றப்பட்டு உள்ளது என்றனர். 

    • தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் பாதை, முழுக்க முழுக்கத் தமிழக மக்களின் நலனுக்கானது.
    • தமிழ்நாட்டு மக்களின் நலனுக்கான நல்லரசை அமைப்பதே தமிழக வெற்றிக் கழகத்தின் குறிக்கோள்.

    தமிழக வெற்றிக்கழகம் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டில் கழகத்தின் கொள்கைகள், கொள்கை எதிரி, அரசியல் எதிரி, தேர்தல் நிலைப்பாடு குறித்தும் தமது உரையில் கழகத் தலைவர் தெளிவாக, விளக்கமாக எடுத்துரைத்துள்ளார்.

    கழகத் தலைவர் அவர்களின் வழிகாட்டுதலின்படி தமிழக வெற்றிக் கழகம், வரும் 2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை பலத்துடன் வெற்றிபெற்று ஆட்சி அமைப்பதற்கான அனைத்து வியூகங்களையும் வகுத்து, தேர்தலைச் சந்திக்கத் தயாராகி வருகிறது.

    இச்சூழலில், 2026 சட்டமன்றத் தேர்தலில் ஆடசி மாற்றத்திற்கான முதன்மைச் சக்தியாக, ஒட்டுமொத்த தமிழக மக்களின் ஏகோபித்த வரவேற்பையும் ஆதரவையும் பெற்று, மக்கள் மத்தியில் தமிழக வெற்றிக் கழகம் அடைந்து வரும் எழுச்சியை மடைமாற்றம் செய்யும் உள்நோக்கத்தோடு, அடிப்படை ஆதாரமற்ற தகவல்களைக் கொண்டு அஇஅதிமுகவுடன் தமிழக வெற்றிக் கழகம் கூட்டணி என்று தொடர்புப்படுத்தி, பிரதான தமிழ் நாளிதழ் ஒன்று உண்மைக்கு முற்றிலும் புறம்பான தகவல்களைக் கொண்டு நேற்றுத் தலைப்புச் செய்தி வெளியிட்டுள்ளது. இந்தச் செய்தி, முற்றிலும் தவறானது. ஆதாரமோ அடிப்படையோ அற்றது.

    ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் வாயிலாக அரசியல் விமர்சகர்கள் என்கிற போர்வையில் உள்நோக்கத்தோடு, தான்தோன்றித்தனமாகச் சிலர் தெரிவிக்கும் பொய்யான கருத்துகளின் அடிப்படையில் தமிழக வெற்றிக் கழகத்தைத் தொடர்புப்படுத்திப் பரப்பப்படும் இதுபோன்ற உண்மைக்கு மாறான பொய்ச்செய்திகளைத் தமிழக மக்கள் புறக்கணித்து விடுவார்கள் என்பதை இத்தகையப் பொய்யானச் செய்திகளை உள்நோக்கத்தோடு பரப்புபவர்களுக்கு நினைவூட்டுகிறேன்.

    தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் பாதை, முழுக்க முழுக்கத் தமிழக மக்களின் நலனுக்கானது. வெற்றிக் கொள்கைத் திருவிழாவில் கழகத் தலைவர் ஆற்றிய உரையில் தெரிவித்த நிலைப்பாட்டின் அடிப்படையில் பெரும்பான்மை பலத்தோடு நாட்டு மக்களின் பேராதரவோடு வென்று தமிழ்நாட்டு மக்களின் நலனுக்கான நல்லரசை அமைப்பதே தமிழக வெற்றிக் கழகத்தின் குறிக்கோள்.

    எனவே, மக்களைக் குழப்பும் நோக்கில் தமிழக வெற்றிக் கழகம் தொடர்பாக உண்மைக்குப் புறம்பான கருத்துகளைச் செய்திகளாக வெளியிடுவதை ஊடகங்கள் தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

    கழகத் தலைவர் அவர்களின் ஒப்புதல் பெற்று இச்செய்திக் குறிப்பு வெளியிடப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.

    • நடிகர் விஜய், இயக்குநர் எச். வினோத் இயக்கும் தளபதி 69 படத்தில் நடித்து வருகிறார்.
    • படத்தின் பூஜை தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் அதிகாரப்பூர்வமாக சில வாரங்களுக்கு முன் வெளியிடப்பட்டன.

    தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் விஜய். இவர் நடிப்பில் வெளியான 'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரேவற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து இவர் தனது அரசியல் கட்சியின் முதல் மாநில மாநாடு, கட்சி சார்ந்த கூட்டங்களில் கலந்து கொண்டு வருகிறார்.

    இதனிடையே நடிகர் விஜய், இயக்குநர் எச். வினோத் இயக்கும் தளபதி 69 படத்தில் நடித்து வருகிறார். மேலும், இந்தப் படத்தின் பூஜை தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் அதிகாரப்பூர்வமாக சில வாரங்களுக்கு முன் வெளியிடப்பட்டன. இப்படத்தில் பாபி தியோல், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.

    இந்நிலையில் படப்பிடிப்பின் போது ரசிகர்களால் எடுக்கப்பட்ட ஒரு வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சட்டம் ஒழுங்கு முற்றிலுமாக சீரழிந்து இன்று தமிழ்நாடே கேள்விக்குறியாக இருக்கிறது.
    • எதிர்வரப்போகும் மழை வெள்ளத்திற்கு எந்த முன்னெச்சரிக்கை ஏற்பாடும் இல்லை. இதுதான் திராவிட மாடல் ஆட்சியா?

    திருவள்ளூர் மாவட்டத்தில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகம் முழுவதும் அனைத்து இடங்களிலும் படுகொலைகள், பலாத்காரங்கள், கொலை, கொள்ளை என்று சட்டம் ஒழுங்கு முற்றிலுமாக சீரழிந்து இன்று தமிழ்நாடே கேள்விக்குறியாக இருக்கிறது. அதில், மாற்றுக் கருத்தே இல்லை.

    பள்ளிகளில் பாலியல் வன்கொடுமை, போதைக் கலாச்சாரம் போன்று பல்வேறு விஷயங்கள் தமிழகத்தில் நடக்கிறது. இவை அனைத்தையும் கண்டிக்க வேண்டும். ஆனால், இதை தடுக்க வேண்டிய அரசு வெறும் வாய்வார்த்தைகளை சொல்லிக்கொண்டு, வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் ஒரு ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கின்றனர்.

    எதிர்வரப்போகும் மழை வெள்ளத்திற்கு எந்த முன்னெச்சரிக்கை ஏற்பாடும் இல்லை. இதுதான் திராவிட மாடல் ஆட்சியா என்று மக்கள் கேட்கின்ற கேள்வியை நானும் கேட்கிறேன்.

    யார் வருவதற்காகவும் இன்னெரு கட்சி வேலை செய்ய வேண்டும் என்கிற அவசியம் கிடையாது. அவரவர்களின் கட்சி பணிகளை அவரவர்களின் கட்சிகள் செய்துக் கொண்டிருக்கின்றனர். எங்கள் கட்சிகளின் பணிகளை நாங்கள் செய்துக் கொண்டிருக்கிறோம். அதுபோன்று, திமுக, அதிமுக மற்றும் தமிழகத்தில் உள்ள பிற கட்சிகளும் அவரவர்களின் பணிகளை செய்துக் கொண்டிருக்கின்றனர்.

    தேமுதிக- அதிமுக இடையே கூட்டணி தொடரும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • முன்னதாக கட்சியின் ஆரம்ப கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
    • பல்வேறு அரசியல் கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    சென்னை:

    நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் பயணத்தை தொடங்கினார்.

    கட்சி கொள்கைகள், திட்டங்கள் பற்றி அறிக்கை வெளியிட்ட விஜய், 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல்தான் இலக்கு. முன்னதாக கட்சியின் ஆரம்ப கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். முதல் கட்டமாக கட்சிக்கு புதிய உறுப்பினர்கள் சேர்க்கையை தீவிரப்படுத்த வேண்டும் என அறிவித்தார்.

    விஜய்யின் அறிவிப்பு கட்சி தொண்டர்கள் மட்டுமின்றி பல்வேறு தரப்பினரிடமும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. உறுப்பினர் சேர்க்கைக்காக சிறப்பு செயலி உருவாக்கப்பட்டு ஆன்லைன் மூலம் புதிய உறுப்பினர் சேர்க்கை நடைபெற தொடங்கியது.

    புதிய உறுப்பினர்கள் சேர்க்க தொடங்கிய சில தினங்களிலேயே லட்சக்கணக்கானோர் கட்சியில் புதிதாக உறுப்பினர்களாக சேர தொடங்கினர். கட்சியில் இளைஞர்களும், இளம் பெண்களும் அதிகமாக சேர்ந்தனர்.

    ஒரே நாளில் ஒன்று போல் கட்சியில் இணைவதற்கு முயற்சிப்பதால் இணைய தள சர்வர் முடங்கியது.

    இதையடுத்து சில நாட்கள் உறுப்பினர்கள் சேர்க்கை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. மீண்டும் சர்வர் சரி செய்யப்பட்டு உறுப்பினர் சேர்க்கை பணி தொடங்கியது.

    இதையடுத்து கட்சியில் சேர்ந்த உறுப்பினர்கள் எண்ணிக்கை 75 லட்சத்தை அடைந்தது.

    இந்த நிலையில் கட்சி தலைவர் விஜய் கட்சி கொடியை பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் அறிமுகப்படுத்தினார். தொடர்ந்து விக்கிரவாண்டி வி.சாலை என்ற இடத்தில் கடந்த 27-ந்தேதி மாநாடு நடந்தது. லட்சக்கணக்கானோர் திரண்ட இந்த மாநாடு தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை உருவாக்கியது.

    மாநாட்டில் விஜய்யின் அதிரடி பேச்சு கட்சி தொண்டர்கள் மட்டுமின்றி பொது மக்களிடையேயும் பெரும் வரவேற்பை பெற்றது.

    இதைத் தொடர்ந்து கட்சியில் புதிதாக சேர்வதற்கு ஏராளமானோர் ஆர்வம் காட்டி கட்சியில் இணைய தொடங்கினர். இதையடுத்து கட்சியில் புதிதாக இணைந்தவர்களின் எண்ணிகை 93 லட்சத்தை அடைந்தது.

    இந்த நிலையில் ஒரே நாளில் ஏராளமானோர் விண்ணப்பித்ததால் மீண்டும் தமிழகம் முழுவதும் 'சர்வர்' முடங்கியது. இதனால் உறுப்பினர் சேர்க்கை பணியில் தடை ஏற்பட்டது.

    இதையொட்டி படிப்படியாக இணைய தள செயலியின் சர்வர் சரி செய்யப்பட்டு மீண்டும் கட்சியில் பலர் புதிதாக இணைய தொடங்கினர். இதையடுத்து தமிழக வெற்றிக் கழகத்தில் புதிதாக சேர்ந்தோர் எண்ணிக்கை இன்னும் சில தினங்களில் 1 கோடியை நெருங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    விஜய் கட்சி தொடங்கி சில மாதங்களில் கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை 1 கோடி நெருங்கி இருப்பது தி.மு.க., அ.தி.மு.க. மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • மாபெரும் தலைவர்களை எதிர்த்து அரசியல் செய்தேன். எதுவும் சாத்தியம்.
    • நீட் தேர்வு, ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து புரிதல் இல்லாததால் தான் அவற்றை வேண்டாம் என விஜய் பேசி உள்ளார்.

    நடிகரும் மூத்த அரசியல்வாதியுமான சரத்குமார் கூறியதாவது:

    * விஜய் கூறியது போல் நானும் உச்சநடிகராக இருக்கும் பொழுது தான் அரசியலுக்கு வந்தேன்.

    * மக்கள் சேவைக்காக நான் அரசியலுக்கு வந்தேன். மாபெரும் தலைவர்களை எதிர்த்து அரசியல் செய்தேன். எதுவும் சாத்தியம்.

    * நீட் தேர்வு, ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து புரிதல் இல்லாததால் தான் அவற்றை வேண்டாம் என விஜய் பேசி உள்ளார்.

    * அம்பேத்கரை கொள்கை தலைவராக வைத்த விஜய் அரசியல் சாசனத்தில் உள்ள கவர்னர் பதவியை எப்படி வேண்டாம் என சொல்கிறார் என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

    • ஒவ்வொரு குழந்தையும் தனித்துவமானது. அவர்களின் புன்னகை, விலைமதிப்பற்றது.
    • குழந்தைகளை எந்நாளும் பாதுகாத்துப் போற்றி மகிழ்வோம்!

    இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளான நவம்பர் 14-ந்தேதி ஆண்டுதோறும் குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது.

    அந்த வகையில் குழந்தைகள் தினமான இன்று பள்ளிகளில் அவர்களை கொண்டாடும் வகையில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

    இந்நிலையில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    ஒவ்வொரு குழந்தையும் தனித்துவமானது. அவர்களின் புன்னகை, விலைமதிப்பற்றது. குழந்தைகளின் மனது, பொறாமை, பழிவாங்குதல், ஏமாற்றுதல் போன்ற எந்த ஒரு தீய எண்ணத்தையும் கொண்டிராமல், தெளிந்த நீரைப் போல் பரிசுத்தமானது.

    நமது எதிர்காலமான மழலைச் செல்வங்களுக்கு அடிப்படை உரிமைகளுடன் கூடிய சிறந்த, சுதந்திரமான எதிர்காலத்தை உருவாக்கிட இந்தக் குழந்தைகள் தினத்தில் உறுதியேற்போம்!

    குழந்தைகளை எந்நாளும் பாதுகாத்துப் போற்றி மகிழ்வோம்!

    இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துகள்! என்று தெரிவித்துள்ளார்.

    • எக்காரணம் கொண்டும் யாரும் தனிநபர் தாக்குதலில் ஈடுபடக் கூடாது.
    • எதிர்தரப்பினர் தரம் தாழ்ந்து பேசினாலும் அவர்களுடன் நம் கட்சியினர் மல்லுக்கட்ட கூடாது.

    சென்னை:

    விஜய்யின் தமிழக வெற்றிக் கழக மாநாடு, செயற்குழுக் கூட்டம் முடிவடைந்ததை தொடர்ந்து கட்சியின் வளர்ச்சி மற்றும் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளில் கட்சி தலைவர் விஜய் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

    இதைத் தொடர்ந்து பூத் கமிட்டி மற்றும் வாக்காளர் சேர்த்தல், திருத்தல் முகாமில் பொதுமக்களுக்கு உதவும் வகையில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என கட்சி நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் விஜய் அறிக்கை வாயிலாக வலியுறுத்தி இருக்கிறார்.

    மேலும் கட்சி வளர்ச்சிக்காக அடுத்தடுத்து அதிரடி திட்டங்களை அறிவித்து வருகிறார். விஜய்யின் அரசியல் நடவடிக்கைகள் பல்வேறு அரசியல் கட்சிகள் மட்டுமின்றி பொதுமக்கள் மத்தியிலும் விவாத பொருளாக இருந்து வருகிறது.

    நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் 'விஜய்' அரசியல் பயணம் பற்றி கடுமையாக சமீபத்தில் விமர்சனம் செய்திருந்தார். இந்நிலையில் கடந்த 8-ந்தேதி சீமான் பிறந்த நாளையொட்டி அவருக்கு விஜய் சமூக வலைதளம் வாயிலாக வாழ்த்து தெரிவித்திருந்தார்.

    இதைத் தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்போர் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் தலைமையில் பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் கட்சி தலைவர் விஜய் ஆலோசனையின் பேரில் நேற்று நடந்தது.

    கூட்டத்தில் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் பேசியதாவது:-

    தமிழக வெற்றிக் கழகம் சார்பில் விவாதங்களில் பங்கேற்போர் மிகவும் கண்ணியத்துடன் நடந்து கொள்ள கட்சி தலைவர் விஜய் அறிவுறுத்தி உள்ளார். எக்காரணம் கொண்டும் யாரும் தனிநபர் தாக்குதலில் ஈடுபடக் கூடாது. எதிர்தரப்பினர் தரம் தாழ்ந்து பேசினாலும் அவர்களுடன் நம் கட்சியினர் மல்லுக்கட்ட கூடாது. நெறியாளர்களிடம் எடுத்துரைத்து நமது விவாதங்களை புரிந்து கொள்ளும் வகையில் வெளிப்படுத்த வேண்டும்.

    விவாதங்களில் பங்கேற்க செல்பவர்கள் பொறுமை, சகிப்புத்தன்மை, நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். தரவுகளின் அடிப்படையில் பதில் அளிக்க வேண்டும். தரக்குறைவான வார்த்தைகளை கொண்டு விமர்சனம் செய்யக் கூடாது.

    பேசுபவர்கள் பேசிவிட்டு போகட்டும். மற்றக் கட்சி நிர்வாகிகளை எக்காரணம் கொண்டும் மரியாதை குறைவாக பேசக்கூடாது. கட்சி கொள்கை, கொடி விளக்கம், கட்சியின் பெயர் காரணங்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் பதில் அளிக்க வேண்டும்.

    தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைகளை உள்வாங்கி கருத்தியல் வாயிலாக விவாதித்து மிளிர செய்ய வேண்டும். தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் கடமை, கண்ணியம், கட்டுப்பாடுடன் எப்போதும் நடந்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு புஸ்சி ஆனந்த் பேசினார்.

    கட்சி தலைவர் விஜய் வலியுறுத்தலின் பேரில் நிர்வாகிகளுக்கு இவ்வாறு உத்தரவிடப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    ×