என் மலர்
நீங்கள் தேடியது "tag 96694"
ஆப்பிள் நிறுவனத்தின் பழைய ஐபோன் மாடல்களில் வாட்ஸ்அப் செயலி இயங்காமல் போகும் என தகவல் வெளியாகி உள்ளது. வாட்ஸ்அப் செயலியை தொடர்ந்து பயன்படுத்த ஐ.ஓ.எஸ். வெர்ஷனை அப்டேட் செய்ய வேண்டும்.
பிரபல குறுந்தகவல் செயலியான வாட்ஸ்அப் அடிக்கடி தனது செயலியில் மாற்றங்களை ஏற்படுத்தி, புது அம்சங்கள் வழங்குவதை வாடிக்கையாக கொண்டு இருக்கிறது. இதே போன்று செயலியில் அவ்வப்போது வழங்கப்படும் புது அம்சங்கள் பழைய ஓ.எஸ். கொண்ட சாதனங்களில் இயங்காமல் போகும் வாய்ப்புகள் உள்ளன. இதன் காரணமாக சீரான இடைவெளியில் பழைய ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். சாதனங்களில் வாட்ஸ்அப் இயங்குவதற்கான சப்போர்ட் நீக்கப்பட்டு வருகிறது.
அந்த வரிசையில், ஐ.ஓ.எஸ். 10 மற்றும் ஐ.ஓ.எஸ். 11 கொண்டு இயங்கி வரும் ஐபோன் 5 மற்றும் ஐபோன் 5C மாடல்களுக்கான சப்போர்ட் அடுத்த சில மாதங்களில் நிறுத்தப்பட இருக்கிறது. இது பற்றிய தகவலை, வாட்ஸ்அப் அப்டேட் குறித்த தகவல்களை வெளியிட்டு வரும் wabetainfo தளம் வெளியிட்டு உள்ளது.

Photo Courtesy: WABetaInfo
அந்த வலைதள தகவல்களின்படி ஐ.ஓ.எஸ். 10 மற்றும் ஐ.ஓ.எஸ். 11 கொண்ட ஐபோன்களில் வாட்ஸ்அப் சேவை அக்டோபர் 24, 2022 முதல் நிறுத்தப்பட்டு விடும் என ஸ்கிரீன்ஷாட்டில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இது பற்றிய தகவல் வாட்ஸ்அப் ஹெல்ப் செண்டர் வலைதள பக்கத்திலும் வெளியிடப்பட்டு இருக்கிறது.
அதன் படி, வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்த ஐ.ஓ.எஸ். 12 மற்றும் அதன் பின் வெளியிடப்பட்ட வெர்ஷன்கள் சிறப்பானது, இதனை பிரந்துரைக்கிறோம் என குறிப்பிடப்பட்டு உள்ளது. இதனால் ஐபோன் 5S, ஐபோன் 6 அல்லது ஐபோன் 6S போன்ற மாடல்களில் வாட்ஸ்அப் செயலியை தொடர்ந்து பயன்படுத்த ஐ.ஓ.எஸ். 12 தளத்திற்கு அப்டேட் செய்வது அவசியமாகி இருக்கிறது.
வாட்ஸ்அப் பயனர் அக்கவுண்ட் விவரங்களை ஹேக்கர்கள் புது வழிமுறைகளை கொண்டு அபகரித்து வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
வாட்ஸ்அப் செயலியில் ஏமாற்றப்படும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. ஹேக்கர்களின் பல்வேகறு புதுப்புது யுக்திகளில் ஏமாறும் பொது மக்கள் தங்களது வாட்ஸ்அப் அக்கவுண்ட்களை பறிகொடுக்கும் சம்பவங்கள் அரங்கேறுகின்றன. அந்த வரிசையில் ஹேக்கர்கள் கையாளும் புது வழிமுறை பற்றி பாதுகாப்பு ஆய்வாளர்கள் விளக்கி உள்ளனர். அதன்படி ஒற்றை போன் கால் மூலம் ஹேக்கர்கள் வாட்ஸ்அப் பயனர் அக்கவுண்ட் விவரங்களை அபகரித்து வருவதாக தெரிவித்துள்ளனர்.
சைபர் அச்சறுத்துல்கள் பற்றி கணிப்புகளை வெளியிட்டு வரும் கிளவுட்செக் எனும் ஏ.ஐ. நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி தான் வாட்ஸ்அப் செயலியில் வரும் புது அச்சுறுத்தல் பற்றி தெரிவித்து இருக்கிறார். அதன்படி ஹேக்கர்களிடம் இருந்து வரும் அழைப்புகளை எடுத்து பேசுவோர் 67 அல்லது 405 என துவங்கும் எண்களுக்கு அழைப்புகளை மேற்கொள்ளும் போது, அவர்களது வாட்ஸ்அப் அக்கவுண்ட் லாக் அவுட் ஆகி, ஹேக்கர்கள் வசம் சென்று விடும்.
முதலில் ஹேக்கரிடம் இருந்து உங்களுக்கு அழைப்பு வரும் அதன் பின் 67 அல்லது 405 என துவங்கும் பத்து இலக்க எண்களுக்கு அழைப்புகளை மேற்கொள்ள ஹேக்கர் தரப்பில் இருந்து வலியுறுத்தப்படும். இவ்வாறு செய்யும் பட்சத்தில் அடுத்த சில நிமிடங்களிலேயே வாட்ஸ்அப் அக்கவுண்ட் லாக் அவுட் ஆகி விடும்.

ஹேக்கர் தரப்பில் பயனர்களுக்கு வழங்கப்படும் மொபைல் எண் ஏர்டெல் மற்றும் ஜியோ சேவையில் கால் பார்வேர்டிங் செய்வதற்கான எண் ஆகும். இன் மூலம் பயனர்களுக்கு வரும் அழைப்புகள் தாங்கள் வழங்கும் மற்றொரு மொபைல் எண்ணிற்கே வரும். வாட்ஸ்அப் சேவையை பதிவு செய்யும் போது, ஓ.டி.பி. ஆப்ஷன் கேட்கப்படும். உங்களின் போன் என்கேஜ்டில் இருந்தால் ஓ.டி.பி. ஹேக்கர்களின் மாற்று மொபைல் எண்ணிற்கே அனுப்பப்படும். இதன் மூலம் தான் ஹேக்கர்கள் பயனர் வாட்ஸ்அப் அக்கவுண்ட்களை பறித்துக் கொள்கின்றனர்.
பெரும்பாலான டெலிகாம் நிறுவனங்கள் இதே போன்ற எண்களையே வைத்து இருப்பதால், இந்த வழிமுறை சர்வதேச அளவில் பயன்படுத்துவதற்கான ஆபத்து அதிகம் தான். இதுபோன்ற பாதிப்புகளில் சிக்காமல் இருக்க தெரியாத நம்பர்களில் இருந்து அழைப்புகளை ஏற்காமல் இருப்பதே நல்லது.
ஸ்டேட்டஸ் ரிப்ளை இன்டிகேட்டர் தவிர, டெஸ்க்டாப்பில் பிஸ்னஸ் அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள் செயலியைப் பயன்படுத்தும் போது, கவர் புகைப்படத்தை அமைக்கும் திறனை வாட்ஸ்அப் கொண்டு வர உள்ளதாம்.
வாட்ஸ்அப் நம் அன்றாட வாழ்வில் தவிர்க்க முடியாத ஒரு செயலியாக உருவெடுத்துள்ளது. அத்தகைய வாட்ஸ்அப்பில் பல்வேறு சிறப்பம்சங்கள் தொடர்ந்து அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் விரைவில் புது அம்சம் ஒன்றை வாட்ஸ்அப் நிறுவனம் கொண்டு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Photo Courtesy: WABetaInfo
வாட்ஸ்அப்பில் நாம் பதிவிடும் ஸ்டேட்டஸ்-க்கு பதில் வரும் போது அதனை பொதுவான மெசேஜ் போல் இன்றி தனியாக பிரித்துக் காட்டும் அம்சத்தை வாட்ஸ்அப் தற்போது உருவாக்கி வருகிறது. இந்த அம்சம் தற்போது உருவாக்கத்தில் இருப்பதாகவும், பீட்டா சோதனையாளர்களுக்குக் கூட இன்னும் கிடைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
இருப்பினும் இது எதிர்காலத்தில் ஆண்ட்ராய்டு, ஐ.ஒ.எஸ். மற்றும் டெஸ்க்டாப்பில் உள்ள பயனர்களுக்குக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்டேட்டஸ் ரிப்ளை இன்டிகேட்டர் தவிர, டெஸ்க்டாப்பில் பிஸ்னஸ் அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள் செயலியைப் பயன்படுத்தும் போது, கவர் புகைப்படத்தை அமைக்கும் வசதியினை வாட்ஸ்அப் கொண்டு வர உள்ளதாம்.
யூடியூப் ஷார்ட்ஸ் இந்திய சந்தையில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு இருக்கிறது.
கூகுள் ஃபார் இந்தியா 2021 நிகழ்வில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை கூகுள் வெளியிட்டது. கடந்த ஆண்டு யூடியூப் ஷார்ட்ஸ் பீட்டா வடிவில் வெளியிடப்பட்டது. தற்போது யூடியூப் ஷார்ட்ஸ் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு இருக்கிறது.

யூடியூப் ஷார்ட்ஸ் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மற்றும் டிக்டாக் போன்றே செயல்படுகிறது. இந்தியாவில் டிக்டாக் செயலிக்கு தடை விதிக்கப்பட்டது முதல் பல்வேறு குறு வீடியோ உருவாக்கும் செயலிகளுக்கு கடும் வரவேற்பு கிடைத்து வருகிறது. டிக்டாக் தடையை தொடர்ந்து இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் அமோக வரவேற்பை பெற்று இருக்கிறது.
உலகளவில் யூடியூப் ஷார்ட்ஸ் பயன்படுத்துவோர் எண்ணிக்கையில் இந்தியா முதலிடம் பிடித்து இருக்கிறது. இந்தியாவில் 1500 கோடிக்கும் அதிக பார்வையாளர்களை யூடியூப் ஷார்ட்ஸ் பெற்று வருகிறது. வரும் நாட்களில் யூடியூப் ஷார்ட்ஸ் பல்வேறு புது அம்சங்களை பெற இருக்கிறது.
வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், மெசன்ஜர் போன்ற பேஸ்புக் நிறுவன செயலிகளில் மெட்டா பிராண்டிங் அமலுக்கு வந்தது.
வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், மெசன்ஜர் மற்றும் இதர பேஸ்புக் குழும செயலிகளில் மெட்டா பிராண்டிங் காண்பிக்கிறது. அனைத்து செயலிகளின் ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். வெர்ஷன்களில் மெட்டா பிராண்டிங் தோன்றுகிறது. முன்னதாக பேஸ்புக் நிறுவனம் தனது பெயரை மெட்டா என மாற்றுவதாக அறிவித்தது.
அந்த வரிசையில், தற்போது செயலிகளில் பேஸ்புக்கிற்கு மாற்றாக மெட்டா எனும் பிராண்டிங் இடம்பெற்று இருக்கிறது. முன்பை போன்று வழக்கமான சமூக வலைதளமாக நிறுவனமாக மட்டும் செயல்படுவதை தவிர்த்து, மெட்டாவெர்ஸ் எனும் புதிய மெய்நிகர் தொழில்நுட்பத்தில் இந்த நிறுவனம் முதலீடு செய்ய இருக்கிறது.

பேஸ்புக் மட்டுமின்றி மைக்ரோசாப்ட் மற்றும் பல்வேறு இதர தொழில்நுட்ப நிறுவனங்களும் மெட்டாவெர்ஸ் போன்ற சேவைகளை உருவாக்கும் முயற்சியை துவங்கி உள்ளன.
கூகுள் நிறுவனம் தனது பயனர் அக்கவுண்ட்களை பாதுகாக்கும் நோக்கில் புது நடவடிக்கையை அமல்படுத்த இருக்கிறது.
கூகுள் நிறுவனம் 2-ஸ்டெப் வெரிபிகேஷன் வழிமுறையை இந்த ஆண்டு இறுதிக்குள் அமலுக்கு கொண்டுவரப் போவதாக மே மாத வாக்கில் அறிவித்து இருந்தது. அதன்படி இந்த வழிமுறை நவம்பர் 9 ஆம் தேதி அமலுக்கு வருகிறது.
இதனை செயல்படுத்திய பின், பயனர் ஒவ்வொரு முறை கூகுள் கணக்கில் லாக்-இன் செய்யும் போதும் குறுந்தகவல் அல்லது மின்னஞ்சலில் ஒருமுறை பயன்படுபத்தக்கூடிய கடவுச்சொல் (ஓ.டி.பி.) வரும். இதனை பதிவிட்டால் தான் கணக்கில் நுழைய முடியும். இந்த வழிமுறை பயனர் கணக்குகளை மேலும் பாதுகாப்பானதாக மாற்றும்.

நவம்பர் 9 ஆம் தேதி முதல் 2-ஸ்டெப் வெரிபிகேஷன் வழிமுறை பயனரின் கூகுள் அக்கவுண்டில் தானாக அமல்படுத்தப்பட்டு விடும் என பயனர்களுக்கு மின்னஞ்சல் மூலம் கூகுள் நிறுவனம் தெரியப்படுத்தி வருகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் 150 மில்லியன் கூகுள் பயனர்களின் அக்கவுண்ட்களுக்கு 2-ஸ்டெப் வெரிபிகேஷன் வழிமுறையை அமல்படுத்த திட்டமிட்டுள்ளதாக கூகுள் அறிவித்து இருக்கிறது.
வாட்ஸ்அப் செயலியில் தீபாவளிக்காக பிரத்யேக அனிமேஷன் ஸ்டிக்கர்கள் வெளியிடப்பட்டுள்ளன.
வாட்ஸ்அப் செயலியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பிரத்யேக அனிமேடெட் ஸ்டிக்கர்கள் வெளியிடப்பட்டு உள்ளன. இதை கொண்டு பயனர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி பாதுகாப்பாக தீபாவளி பண்டிகையை கொண்டாடலாம்.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பண்டிகை கொண்டாட்ட முறைகள் முற்றிலும் மாறி போயுள்ளன. இந்த காலக்கட்டத்தில் விர்ச்சுவல் முறையில் அனைவருடன் இணைந்து இருப்பதே சிறந்த வழிமுறையாக இருக்கும். நண்பர்கள் மற்றும் குடும்பத்தாருடன் இணைந்திருக்க வாட்ஸ்அப் மட்டுமே சிறந்த தளமாக இருக்கிறது.

இவற்றை கருத்தில் கொண்டே தீபாவளி பண்டிகைக்காக வாட்ஸ்அப் அனிமேடெட் ஸ்டிக்கர்களை வெளியிட்டு உள்ளது. ஸ்டிக்கர்களை மற்றவர்களுக்கு அனுப்பி பயனர்கள் தங்களின் வீட்டில் இருந்தபடி தீபாவளி வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்ள முடியும்.
வாட்ஸ்அப் செயலியின் புதிய பீட்டா வெர்ஷன்கள் ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். சாதனங்களுக்கு வெளியாகி இருக்கின்றன.
வாட்ஸ்அப் புதிய பீட்டா வெர்ஷனில் பேஸ்புக்கின் புதிய பெயர்- மெட்டா தோன்றுகிறது. வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். பீட்டா வெர்ஷன்களில் வாட்ஸ்அப் பிரம் மெட்டா என காட்சியளிக்கிறது. இதுவரை வாட்ஸ்அப் பிரம் பேஸ்புக் என்றே தோன்றிவந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த மாற்றம் அனைத்து பயனர்களுக்கும் இதுவரை வழங்கப்படவில்லை. அனைவருக்கும் இந்த மாற்றம் அமலாக மேலும் சிலகாலம் ஆகும் என்றே தெரிகிறது. கடந்த வாரம் பேஸ்புக் நிறுவனம் தனது புதிய பெயரை அறிவித்தது. இத்துடன் சமூக வலைதள நிறுவனமாக மட்டும் இல்லாமல், மெய்நிகர் ஆன்லைன் உலகமாக மெட்டாவெர்ஸ் நோக்கி கவனம் செலுத்த போவதாக தெரிவித்தது.

புது மாற்றம் வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா 2.21.22.21 வெர்ஷனில் காட்சியளிக்கிறது. இது வாட்ஸ்அப் ஸ்பிலாஷ் ஸ்கிரீன் மற்றும் செட்டிங் மெனுவில் காட்சியளிக்கிறது. பீட்டா வெர்ஷனிலும் இந்த மாற்றம் அனைத்து பயனர்களுக்கும் தோன்றவில்லை.
பிளாக்பெரி இயங்குதளத்தின் குறுந்தகவல் செயலியான பிளாக்பெரி மெசஞ்சர் சேவை நிறுத்தப்படுகிறது.
பிளாக்பெரி நிறுவனத்தின் பி.பி.எம். (பிளாக்பெரி மெசஞ்சர்) சேவை இன்றுடன் (மே 31) நிறுத்தப்படுகிறது. இன்று நள்ளிரவு 11.59 மணிக்கு பின் பிளாக்பெரி மெசஞ்சர் செயலிக்கான வசதி முற்றிலும் நிறுத்தப்பட இருக்கிறது.
இன்று வரை நாங்கள் உருவாக்கியவைக்காக நாங்கள் பெருமை கொள்கிறோம். தொழில்நுட்ப துறை மிகவும் போட்டி நிறைந்ததாக இருக்கிறது. எங்களின் விடாமுயற்சியிலும் பயனர்கள் மற்ற தளங்கள் வழங்கும் சேவைகளை பயன்படுத்த துவங்கிவிட்டனர். இதன் காரணமாக புதிய வாடிக்கையாளர்களை பெறுவது கடினமான ஒன்றாகிவிட்டது.
பிளாக்பெரி மெசஞ்சர் சேவைக்கு பிரியாவிடை கொடுப்பது எங்களுக்கு வருத்தமாக இருந்தாலும், இதனை கடந்து முன்னேற வேண்டிய நிலையில் இருக்கிறோம் என பிளாக்பெரி தனது அதிகாரப்பூர்வ வலைதளத்தில் பதிவிட்டுள்ளது.

பி.பி.எம்.இ. என அழைக்கப்படும் என்டர்பிரைஸ் எடிஷனை பயன்படுத்துவோர் தொடர்ந்து சேவையை இயக்க முடியும். இனியும் பி.பி.எம். சேவையை பயன்படுத்த விரும்புவோர் ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். தளங்களில் இருந்து என்டர்பிரைஸ் எடிஷனை டவுன்லோடு செய்து ஆறு மாதங்களுக்கு 2.50 டாலர்கள் கட்டணம் செலுத்தி பயன்படுத்தலாம்.
பி.பி.எம்.இ. சேவையிலும் முழுமையான என்க்ரிப்ஷன் வழங்கப்படுகிறது. இத்துடன் குறுந்தகவல்களை எடிட் செய்யும் வசதி, அனுப்பிய குறுந்தகவல்களை திரும்பப்பெறும் வசதி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா செயலியில் சில மாதங்களுக்கு முன் சோதனை செய்யப்பட்ட அம்சம் தற்சமயம் அனைவருக்கும் வழங்கப்படுகிறது.
வாட்ஸ்அப் செயலியில் கான்சிக்யூட்டிவ் வாய்ஸ் மெசேஜஸ் (Consecutive Voice Messages) பிளேபேக் அம்சம் ஆண்ட்ராய்டு அப்டேட் மூலம் அனைவருக்கும் வழங்கப்படுகிறது.
முன்னதாக மார்ச் மாதத்தில் வாட்ஸ்அப் பீட்டா 2.19.86 பதிப்பில் இந்த அம்சம் வழங்கப்பட்டது. இந்நிலையில், இருமாதங்கள் சோதனைக்கு பின் இந்த அம்சம் அனைவருக்கும் வழங்கப்பட்டு இருக்கிறது. தற்சமயம் வாட்ஸ்அப் செயலியில் சேர்க்கப்பட்டு இருக்கும் இந்த அம்சம் மூலம் வாய்ஸ் மெசேஜ்களை தொடர்ச்சியாக கேட்க முடியும்.
முன்னதாக வாட்ஸ்அப் செயலியில் அனுப்பப்படும் வாய்ஸ் மெசேஜ்களை ஒவ்வொன்றாகவே கேட்க முடியும். தற்சமயம் புதிய அப்டேட் மூலம் வாய்ஸ் மெசேஜ்களில் ஒரே க்ளிக் செய்து இடைவெளியின்றி கேட்க முடியும். இந்த அம்சம் தவிர புதிய வாட்ஸ்அப் அப்டேட்டில் CVE-2019-3568 பிழையும் சரி செய்யப்பட்டுள்ளது.

சமீபத்தில் வாட்ஸ்அப் செயலியில் ஸ்பைவேர் தாக்குதல் கண்டறியப்பட்டது. இந்த ஸ்பைவேர் பயனரின் மொபைலில் வாய்ஸ் கால் மூலம் விவரங்களை சேகரித்தது. வாய்ஸ் கால் அழைப்பை பயனர் ஏற்றாலும், ஏற்கவில்லை என்றாலும் பயனர் விவரங்களை இந்த ஸ்பைவேர் சேகரித்தது உறுதி செய்யப்பட்டது.
இது பயனர் ஸ்மார்ட்போனின் குறுந்தகவல்கள், ஜி.பி.எஸ். லொகேஷன், மின்னஞ்சல், பிரவுசர் ஹிஸ்ட்ரி, மற்றும் பல்வேறு விவரங்களை சேகரித்து வந்தது. கடந்த மாதம் கண்டறியப்பட்ட பிழை ஏற்கனவே முந்தைய அப்டேட் மூலம் சரி செய்யப்பட்டுள்ளது.
ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் புதிய பிராசஸருடன் 2019 ஐபாட் டச் மாடலை அறிமுகம் செய்துள்ளது.
ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் புதிய ஐபாட் டச் மாடலை அறிமுகம் செய்துள்ளது. இது ஆப்பிள் நிறுவனத்தின் ஏழாம் தலைமுறை ஐபாட் ஆகும்.
2019 ஐபாட் டச் மாடலில் ஆப்பிள் ஏ10 ஃபியூஷன் பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர புதிய ஐபாட் மாடலில் ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி, க்ரூப் ஃபேஸ் டைம் மற்றும் பல்வேறு அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. புதிய ஆப்பிள் ஐபாட் டச் மாடலில் ஆப்பிள் நிறுவனத்தின் ஏ10 ஃபியூஷன் சிப் வழங்கப்பட்டுள்ளது. இதே பிராசஸர் ஐபோன் 7 மாடலில் வழங்கப்பட்டது.
புதிய ஐபாட் டச் மாடலில் பழைய பிராசஸர் வழங்கப்பட்டிருக்கிறது என்றாலும், இதில் முந்தைய மாடலில் இல்லாத பல்வேறு அம்சங்களை இயக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி, க்ரூப் ஃபேஸ் டைம் உள்ளிட்டவை முதல்முறையாக ஐபாட் டச் மாடலில் வழங்கப்பட்டுள்ளது.

புதிய பிராசஸர், 256 ஜி.பி. மெமரி தவிர 2019 ஐபாட் மாடலின் வடிவமைப்பில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. இதில் 4-இன்ச் டிஸ்ப்ளே, ஹோம் பட்டன், கேமராக்கள் உள்ளிட்டவை முந்தைய மாடல்களில் இருப்பதை போன்றே வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் புதிய ஐபாட் மாடலில் ஆப்பிள் ஆர்கேட் கேமிங் சேவைக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது.
புதிய தலைமுறை ஐபாட் டச் மாடலில் கேமிங் அனுபவம் சீராக இருக்கும் என்றும், காட்சிகள் மிகவும் அழகாக தெரியும் என்றும் ஆப்பிள் தெரிவித்துள்ளது. கேமிங், கல்வி மற்றும் பிரவுசிங் உள்ளிட்டவற்றில் ஏ.ஆர். அனுபவங்கள் பயனர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய ஐபாட் டச் மாடல் ஸ்பேஸ் கிரே, வைட், கோல்டு, புளு, பின்க் மற்றும் பிராடக்ட் ரெட் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது. இதன் 32 ஜி.பி. மாடல் விலை ரூ.18,900, 128 ஜி.பி. மாடல் ரூ.28,900 என்றும் 256 ஜி.பி. மாடல் விலை ரூ.38,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெறுகிறது.
ஃபேஸ்புக் நிறுவனம் சொந்தமாக உருவாக்கி வரும் க்ரிப்டோகரென்சியின் வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
ஃபேஸ்புக் நிறுவனம் அடுத்த ஆண்டு வாக்கில் உலகின் 12 நாடுகளில் சொந்தமாக க்ரிப்டோகரென்சிக்களை உருவாக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஃபேஸ்புக்கின் க்ரிப்டோகரென்சி குளோபல் காயின் என்ற பெயரில் அழைக்கப்படும் என தெரிகிறது. இந்த ஆண்டு இறுதியில் இந்த க்ரிப்டோகரென்சிக்கான சோதனை துவங்கும் என கூறப்படுகிறது.
2020 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் டிஜிட்டல் பேமண்ட்ஸ் சிஸ்டம் ஒன்றை துவங்க ஃபேஸ்புக் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குளோபல் காயின் மூலம் மக்கள் குறைந்த கட்டணத்தில் பாதுகாப்பாக பணப்பரிமாற்றங்களை மேற்கொள்ள வழி செய்வதாக இருக்கும் என கூறப்படுகிறது.
இதனை சாத்தியப்படுத்த ஃபேஸ்புக் நிறுவனம் வெஸ்டன் யூனியன் போன்ற பணப்பரிமாற்ற நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. இதன் மூலம் பணப்பரிமாற்றங்களை மிக எளிமையாக்க முடியும் என கூறப்படுகிறது. இதுதவிர ஃபேஸ்புக் நிறுவனம் வங்கிகள் மற்றும் புரோக்கர்களுடன் இணைய இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

குளோபல் காயின் க்ரிப்டோகரென்சியை அடுத்த ஆண்டு வணிக ரீதியில் வெளியிட ஃபேஸ்புக் நிறுவனம் ஒழுங்குமுறை மற்றும் தொழில்நுட்ப இடையூறுகளை களைய வேண்டும். ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சூக்கர்பர்க் க்ரிப்டோகரென்சியில் இருக்கும் வாய்ப்புகள் மற்றும் சவால்கள் பற்றி விவாதிக்க பேங்க் ஆஃப் இங்கிலாந்தின் ஆளுநரை சமீபத்தில் சந்தித்து பேசினார்.
ஃபேஸ்புக்கின் குளோபல் காயின் க்ரிப்டோகரென்சியை இந்தியாவில் பிரபலப்படுத்த அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்தியாவில் இந்த சேவையை துவங்கவும் ஃபேஸ்புக் பல்வேறு இடையூறுகளை கடக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. ஃபேஸ்புக்கின் குளோபல் காயின் அடுத்த ஆண்டு வாக்கில் வர்த்தக ரீதியாக அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.