search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பி.எம்.டபிள்யூ."

    பி.எம்.டபிள்யூ. நிறுவனத்தின் புதிய M சீரிஸ் கார் மாடல் 540 ஹெச்.பி. திறன் வெளிப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இது பந்தைய களத்திலும் புது சாதனை படைத்து அசத்தி இருக்கிறது.


    பி.எம்.டபிள்யூ. நிறுவனம் தனது M பெர்பார்மன்ஸ் பிரிவின் 50 ஆவது ஆண்டு விழாவை கொண்டாடும் வகையில், பி.எம்.டபிள்யூ. M4 CSL மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய M4 CSL மாடலில் அதிக செயல்திறன், சிறப்பான டிசைன் மற்றும் நர்பர்கிரிங் பந்தய களத்தில் பி.எம்.டபிள்யூ. உற்பத்தி செய்ததில் அதிவேக கார் என்ற பட்டத்தை பெற்று இருக்கிறது. இந்த பந்தய களத்தில் பி.எம்.டபிள்யூ. M4 CSL மாடல் 7 நிமிடங்கள் 20.207 நொடிகளில் கடந்துள்ளது. 

     பி.எம்.டபிள்யூ. M4 CSL

    இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 3.7 நொடிகளில் எட்டிவிடும். உலகளவில் இந்த கார் மொத்தத்தில் 1000 யூனிட்களே உற்பத்தி செய்யப்பட இருக்கிறது. இந்த மாடலில் 3.0 லிட்டர், ட்வின் டர்போ சார்ஜ் செய்யப்பட்ட, ஸ்டிரெயிட் 6 என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 550 ஹெச்.பி. திறன், 650 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. 

    புதிய பி.எம்.டபிள்யூ. M4 CSL மணிக்கு அதிகபட்சமாக 307 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் வகையில் கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த கார் ஸ்டாண்டர்டு மாடலை விட 110 கிலோ எடை குறைவாக உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடலின் முன்புறம் 21 இன்ச் வீல்களும், பின்புறம் 22 இன்ச் வீல்களும் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் மிஷெலின் பைலட் ஸ்போர்ட் கப் 2 R டையர்கள் வழங்கப்பட்டுள்ளன. 

    பி.எம்.டபிள்யூ. நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் செடான் மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இந்த காரின் வினியோகம் விரைவில் துவங்க இருக்கிறது.


    பி.எம்.டபிள்யூ. நிறுவனம் இந்திய சந்தையில் தனது ஃபிளாக்‌ஷிப் iX எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. மற்றும் மினி கூப்பர் SE மாடல்களை அறிமுகம் செய்து விட்டது. இந்த வரிசையில் தற்போது i4 எலெக்ட்ரிக் செடான் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய பி.எம்.டபிள்யூ. i4 மாடல் விலை ரூ. 69 லட்சத்து 90 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 

     பி.எம்.டபிள்யூ. i4

    புதிய பி.எம்.டபிள்யூ. i4 எலெக்ட்ரிக் செடான் மாடல் 4 சீரிஸ் கிரான் கூப் மாடலை போன்றே உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதன் தோற்றத்தில் மட்டும் சிறு மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளது. இந்த காரின் உள்புறம் 14.9 இன்ச் டச் ஸ்கிரீன் கொண்ட இன்போடெயின்மண்ட் சிஸ்டம், 12.3 இன்ச் டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே என டூயல் ஸ்கிரீன் செட்-அப், i டிரைவ் 8 யு.ஐ. வழங்கப்பட்டு இருக்கிறது.

    பி.எம்.டபிள்யூ. i4 எலெக்ட்ரிக் காரில் 83.9 கிலோவாட் ஹவர் பேட்டரி மற்றும் எலெக்ட்ரிக் மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த யூனிட் 335 ஹெச்.பி. திறன், 430 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 5.7 நொடிகளில் எட்டிவிடும். மேலும் முழு சார்ஜ் செய்தால் 590 கிலோமீட்டர் ரேன்ஜ் வழங்குகிறது. 

    பி.எம்.டபிள்யூ. நிறுவனம் தனது M பிரிவின் 50 ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு புதிதாக ஸ்பெஷல் எடிஷன் மாடல்களை அறிமுகம் செய்து இருக்கிறது.

    பி.எம்.டபிள்யூ. நிறுவனத்தின் 50 ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு M3 மற்றும் M4 கார்களின் M50 ஜாரெ எடிஷன் மாடல்களை அறிமுகம் செய்து இருக்கிறது. உயர் ரக ஸ்போர்ட்ஸ் கார் மாடல்களில் பிரத்யேக அப்டேட்கள் செய்யப்பட்டு தேர்வு செய்யப்பட்ட நாடுகளில் மிக குறைந்த எண்ணிக்கையிலேயே விற்பனைக்கு வருகிறது. இது மட்டுமின்றி பி.எம்.டபிள்யூ. 1 சீரிஸ் மற்றும் 2 சீரிஸ் கிரான் கூப் மாடல்களையும் எடிஷன் கலர் விஷனில் அறிமுகம் செய்துள்ளது.

    புதிய ஸ்பெஷல் எடிஷன் M4 50 ஜாரெ எடிஷன் மாடல்கள் - சான் மரினோ புளூ, கார்பன் பிலாக், இமோலா ரெட், மேகோ புளூ மற்றும் ஹேட்ச் கிரே போன்ற நிறங்களில் கிடைக்கிறது. இத்துடன் முன்புறம் 19 இன்ச் M ஃபோர்ஜ்டு அலாய் வீல்கள், பின்புறம் 20 இன்ச் 2 ஸ்போக் டிசைன் கொண்ட வீல் வழங்கப்பட்டுள்ளது. முதல் முறையாக இந்த வீல்களை கோல்டு பிரான்ஸ் மேட் மற்றும் ஆர்பிட் மேட் பினிஷ் கொண்டுள்ளன.

     பி.எம்.டபிள்யூ. M50 ஜாரெ எடிஷன்

    உள்புறம் M4 ஜாரெ எடிஷன் ஸ்டாண்டர்டு M4 மாடலை தழுவி உருவாக்கப்பட்டு உள்ளது. எனினும், உள்புறங்களில் விசேஷமாக ஸ்பெஷல் எடிஷனை குறிக்கும் பேட்ஜிங் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த காரில் ஸ்டாண்டர்டு M ஸ்போர்ட் ஹெட்ரெஸ்ட், ஆப்ஷனல் கார்பன் பைபர் பக்கெட் முன்புற இருக்கைகள் உள்ளன. 

    M3 ஜாரெ ஸ்பெஷல் எடிஷன் கார் அமெரிக்கா மற்றும் கனடாவில் மட்டுமே விற்பனை செய்யப்பட இருக்கிறது. இந்த கார் மொத்தத்தில் 500 யூனிட்களே விற்பனை செய்யப்பட உள்ளன. பி.எம்.டபிள்யூ. M3 ஜாரெ எடிஷன் மாடல் ஐந்து பிரத்யேக நிறங்களில் கிடைக்கிறது. இந்த கார்- லைம்ராக் கிரே, சினிபார் ரெட், டெக்னோ வைலண்ட், ஃபயர் ஆரஞ்சு மற்றும் இண்டர்லகோஸ் புளூ ஷேட்களில் கிடைக்கிறது. 
    பி.எம்டபிள்.யூ. நிறுவனம் 2022 X1 மாடலுடன் புதிய iX1 எலெக்ட்ரிக் காரையும் அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த மாடல் 468 கி.மீ. ரேன்ஜ் வழங்குகிறது.

    பி.எம்டபிள்.யூ. நிறுவனம் புதிய X1 மாடலை அறிமுகம் செய்ததோடு, பி.எம்டபிள்.யூ. iX1 எலெக்ட்ரிக் மாடலையும் அறிமுகம் செய்து இருக்கிறது. சர்வதேச வெளியீட்டை தொடர்ந்து புதிய பி.எம்டபிள்.யூ. கார் இந்திய சந்தையிலும் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. 2022 பி.எம்டபிள்.யூ. X1 மாடலுடன் iX1 மாடலும் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    2022 பி.எம்.டபிள்.யூ. X1 மாடல் இரண்டு விதமான பெட்ரோல், இரண்டு வித டீசல் என்ஜின், ஒற்றை ஆல் எலெக்ட்ரிக் iX1 ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இத்துடன் பிளக் இன் ஹைப்ரிட் மாடல் எதிர்காலத்தில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. 

     பி.எம்.டபிள்யூ. iX1

    புதிய எலெக்ட்ரிக் பி.எம்.டபிள்.யூ. iX1 மாடலில் 64.7 கிலோவாட் ஹவர் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த கார் முழு சார்ஜ் செய்தால் 438 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டுள்ளது. இந்த பேட்டரி 11கிலோவாட் AC சார்ஜிங் மற்றும் 22 கிலோவாட் AC சார்ஜிங் சப்போர்ட் கொண்டுள்ளது.

    புதிய பி.எம்.டபிள்யூ. X1 மற்றும் iX1 மாடல்களின் விலை விவரங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. முதற்கட்டமாக சர்வதேச சந்தையில் விற்பனைக்கு வர இருக்கும் புது பி.எம்.டபிள்யூ. கார் இந்த ஆண்டு இறுதியில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படலாம் என தெரிகிறது.
    ×