என் மலர்
நீங்கள் தேடியது "ஜி.வி.பிரகாஷ்"
- வெயில், அங்காடித் தெரு, காவியத் தலைவன் போன்ற வெற்றி படங்களை இயக்கியவர் வசந்தபாலன்.
- இவர் தற்போது அர்ஜுன் தாஸ் நடிப்பில் அநீதி என்ற படத்தை இயக்கி வருகிறார்.
தமிழ் சினிமாவில் வெயில், அங்காடித் தெரு, காவியத் தலைவன் போன்ற வெற்றி படங்களை கொடுத்தவர் இயக்குனர் வசந்த பாலன். இவர் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியான ஜெயில் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இவர் தற்போது அநீதி என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இதில் கைதி, மாஸ்டர் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமடைந்த அர்ஜுன் தாஸ் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக சார்ப்பட்டா பரம்பரை படத்தில் நடித்த துஷாரா விஜயன் நடித்துள்ளார். அர்பன் பாய்ஸ் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

அநீதி
இந்நிலையில் அநீதி படத்தில் இடம்பெற்றுள்ள திகட்ட திகட்ட காதலிப்போம் என்ற பாடலை இன்று மாலை 6 மணிக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இணையத்தில் வெளியிடவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
- துரோகி படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமானவர் சுதா கொங்கரா.
- சமீபத்தில் சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப்போற்று படத்தை இயக்கி பலரின் பாராட்டுக்களையும் பெற்றார்.
2010-ம் ஆண்டு ஸ்ரீகாந்த் மற்றும் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான துரோகி படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமானவர் சுதா கொங்கரா. அதன்பின்னர் மாதவன் மற்றும் ரித்திகா சிங் நடிப்பில் வெளியான இறுதி சுற்று படத்தின் மூலம் அனைவரையும் கவர்ந்தார். இவர் சமீபத்தில் சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப்போற்று படத்தை இயக்கி பலரின் பாராட்டுக்களையும் பெற்றார்.

இந்நிலையில் சுதா கொங்கரா சமூக வலைத்தளத்தில் சூர்யா, மணிரத்னம், ஜி.வி.பிரகாஷ் ஆகியோருடன் இருக்கும் சில புகைப்படங்களை வெளியிட்டு நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். அதில், எனக்குப் பிடித்தவர்களுடன் எனது முதல் காரில் பயணிப்பது மகிழ்ச்சி! என்று குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
- இயக்குனர் பி.வி.ஷங்கர் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் கள்வன் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
- இப்படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.
பிரபல இசையமைப்பாளரான ஜி.வி. பிரகாஷ் இசையில் மட்டுமல்லாமல் நடிப்பிலும் தனக்கான இடத்தை பிடித்துள்ளார். இவர் நடித்த 'பேச்சுலர்', 'ஐங்கரன்', 'ஜெயில்' போன்ற படங்கள் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்றது. தற்போது இவர் அறிமுக இயக்குனர் பி.வி.ஷங்கர் இயக்கத்தில் 'கள்வன்' திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

கள்வன்
ஆக்சஸ் பிலிம் பேக்டரி தயாரிக்கும் இந்த படத்தில் பாரதிராஜா, இவனா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் டீசர் சமீபத்தில் வெளியாகி 8 மில்லியன் பார்வையாளர்களை கடந்தது. இந்நிலையில், 'கள்வன்' திரைப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

கள்வன் போஸ்டர்
அதன்படி, இப்படத்தின் முதல் பாடலான 'அடி கட்டழகு கருவாச்சி' பாடல் நாளை (மார்ச் 4) வெளியாகும் என ஜி.வி.பிரகாஷ் தனது சமூக வலைதளத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து தெரிவித்துள்ளார். மேலும், அந்த பதில், 'வாத்தி' பட பாடல்கள் வெற்றிக்கு பிறகு வெளியாகும் என் அடுத்த ஆல்பம்" என்று குறிப்பிட்டுள்ளார்.
After the superb success of #vaathi songs …. Here comes my next album for the year … a rustic folk album with a tribal mix … with love the first single of #kalvan from 4th #AdiKattazhaguKaruvaachi #kalvan @pvshankar_pv @i__ivana_ @AxessFilm @thinkmusicindia @DuraiKv pic.twitter.com/7cusXvFK5z
— G.V.Prakash Kumar (@gvprakash) March 2, 2023
- இயக்குனர் விவேக் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘13’.
- இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
பிரபல இசையமைப்பாளரான ஜி.வி. பிரகாஷ் இசையில் மட்டுமல்லாமல் நடிப்பிலும் தனக்கான இடத்தை பிடித்துள்ளார். சமீபத்தில் இயக்குனர் மதிமாறன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் மற்றும் கவுதம் மேனன் இணைந்து நடித்த செல்ஃபி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்தது.

13
இதைத்தொடர்ந்து தற்போது இவர்கள் இவருவர் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் '13'. இந்த படத்தை அறிமுக இயக்குனர் விவேக் இயக்கியுள்ளார். திரில்லர் ஜானரில் உருவாகியுள்ள '13' திரைப்படத்தில் இயக்குனர் கவுதம் மேனன் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

13 போஸ்டர்
இதையடுத்து இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, '13' திரைப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதனை நடிகர் ஜி.வி.பிரகாஷ் தனது சமூக வலைதளத்தில் போஸ்டர் ஒன்றை பகிர்ந்து தெரிவித்துள்ளார்.
— G.V.Prakash Kumar (@gvprakash) April 14, 2023
- விக்னேஷ் கார்த்தி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் அடியே.
- இப்படத்தின் முதல் பாடல் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.
ஏண்டா தலையில எண்ண வெக்கல, திட்டம் இரண்டு போன்ற படங்களை இயக்கிய விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் படம் 'அடியே'. இப்படத்தில் வெங்கட் பிரபு, கவுரி, மிர்சி விஜய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மாலி மற்றும் மன்வி மூவி மேக்கர்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். கோகுல் பினாய் ஒளிப்பதிவு செய்கிறார்.

அடியே
சமீபத்தில் அடியே படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி இணையத்தில் கவனம் பெற்றது. இந்நிலையில் இப்படத்தின் முதல் பாடல் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி அடியே படத்தில் இடம்பெற்றுள்ள வா செந்தாழினி பாடல் நாளை (மே 26ம் தேதி) வெளியாகவுள்ளதாக போஸ்டர் வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது.
Get ready for an endearing number. The first single from #Adiyae is coming on 26th May.#VaaSenthazhini - a @justin_tunes musical.
— G.V.Prakash Kumar (@gvprakash) May 24, 2023
Vocals by @sidsriram.
Directed by @vikikarthick88 of Thittam Irandu fame. @gvprakash @gourayy @vp_offl @Madumkeshprem @RJvijayofficial… pic.twitter.com/8FPGeDlyOR
- நீலம் புரொடக்ஷன்ஸ் 'எக்ஸ்' இணையதளத்தில் இந்த படம் தொடங்கியது தொடர்பான பல 'புகைப்படங்களை' வெளியிட்டுள்ளது.
- நீலம் புரொடக்ஷன் பெயரில் படம் தயாரிக்கும் பா.ரஞ்சித், சில தனித்துவமான மற்றும் வெற்றிகரமான படங்களை தயாரித்துள்ளார்.
இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ், நடிகை ஷிவானி ராஜசேகர் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படத்தை பா.ரஞ்சித்தின் 'நீலம் புரொடக்ஷன்ஸ்' தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது.
'புளூஸ்டார்' பட வெற்றிக்குப் பிறகு இந்த படத்திற்கான தயாரிப்பு பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது. இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை இயக்குநர் அகிரண்மோசஸ் இயக்குகிறார். பா.ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் படத்திற்கு இசையமைத்த ஜி.வி.பிரகாஷ் இப்படத்திற்கும் இசையமைக்கிறார்.
படத்தில் மலையாள நடிகர் ஸ்ரீநாத்பாசியும் நடிக்கிறார். நீலம் புரொடக்ஷன்ஸ் 'எக்ஸ்' இணையதளத்தில் இந்த படம் தொடங்கியது தொடர்பான பல 'புகைப்படங்களை' வெளியிட்டுள்ளது.
A start to a new chapter✨
— Neelam Productions (@officialneelam) February 29, 2024
The shoot for our next production begins today with bright smiles and fond memories?
Written and directed by @AkiranMoses
Produced by @beemji #NeelamProductions
Starring @gvprakash @Rshivani1@sreenathbhasi @PasupathyMasi @LingeshActor @EditorSelva… pic.twitter.com/P5KrELtXGX
'ஒரு புதிய அத்தியாயத்திற்கான ஆரம்பம். எங்கள் அடுத்த தயாரிப்பிற்கான படப்பிடிப்பு இன்று பிரகாசமான புன்னகை மற்றும் இனிமையான நினைவுகளுடன் தொடங்குகிறது என்று தயாரிப்பு குழு தெரிவித்துள்ளது. படத்தின் ரிலீஸ் தேதியை தயாரிப்பு தரப்பு இன்னும் அறிவிக்கவில்லை.
நீலம் புரொடக்ஷன் பெயரில் படம் தயாரிக்கும் பா.ரஞ்சித், சில தனித்துவமான மற்றும் வெற்றிகரமான படங்களை தயாரித்துள்ளார். சமீபத்தில் வெளியான அசோக் செல்வன், சாந்தனு பாக்யராஜ், பிருத்வி பாண்டியராஜன் நடித்த ப்ளூ ஸ்டார் படம் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
- மூணாறு பகுதியில் உள்ள மக்களின் அரசியல் வாழ்வு குறித்த உண்மை சம்பவ கதையாக இது உருவாக்கப்பட்டு உள்ளது.
- ஜி.வி பிரகாஷ் நடிப்பு மட்டுமின்றி படத்தின் இசையமைப்பாளராகவும் பணியாற்றி உள்ளார்
பிரபல நடிகர் ஜி.வி.பிரகாஷ் குமார்கதாநாயகனாக நடித்த படம் 'ரிபெல்'' இந்த படத்தை ' ஸ்டூடியோ கிரீன்' சார்பில் ஞானவேல் ராஜா தயாரித்து உள்ளார். இப்படத்தை அறிமுக இயக்குனர் நிகேஷ் இயக்கி உள்ளார்.
இந்த படத்தில், மமிதா பைஜு கருணாஸ், சுப்பிரமணிய சிவா, ஷாலு ரஹீம், வெங்கடேஷ் , ஆதித்யா உள்பட பலர் நடித்து உள்ளனர்.மூணாறு பகுதியில் உள்ள மக்களின் அரசியல் வாழ்வு குறித்த உண்மை சம்பவ கதையாக இது உருவாக்கப்பட்டு உள்ளது.ஆக்ஷன் படமாக தயாராகி உள்ளது.
இந்த படத்தின் இறுதி கட்டப் பணிகள் அனைத்தும் தற்போது முடிவடைந்து விட்டது.மேலும் 'ரிபெல்' படத்துக்கு சென்சார் போர்டு யு/ஏ சான்றிதழ் வழங்கி உள்ளது.ஜிவி பிரகாஷ் நடிப்பு மட்டுமின்றி படத்தின் இசையமைப்பாளராகவும் பணியாற்றி உள்ளார்.

இந்நிலையில் 'ரிபெல்' படம் ரிலீஸ் தேதி குறித்து படக்குழு தற்போது அறிவித்து உள்ளது.
வருகிற மார்ச்- 22 -ந்தேதி தியேட்டர்களில் இப்படம் வெளியாக உள்ளது என 'எக்ஸ்' தளத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
- கிங்க்ஸ்டன் படம் ஜி.வி.பிரகாசின் 25-வது படம் ஆகும்.
- நேர்மையாக உழைத்தால் சினிமா கைவிடாது.
'வெயில்' படம் மூலமாக தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமான ஜி.வி.பிரகாஷ்குமார், அடுத்தடுத்து தொட்ட படங்கள் அனைத்திலும் ஹிட் பாடல்கள் கொடுத்து கவனம் ஈர்த்தார்.
'டார்லிங்' படம் மூலமாக கதாநாயகன் அவதாரம் எடுத்த ஜி.வி.பிரகாஷ் பல ஹிட் படங்கள் கொடுத்துள்ளார். இந்த ஆண்டில் மட்டும் அவருக்கு 'ரெபல்', 'கள்வன்', 'டியர்' என 3 படங்கள் வெளியாகி உள்ளன. விரைவில் திரைக்கு வர உள்ள 'கிங்க்ஸ்டன்' படம் அவரது நடிப்பில் வெளியாகும் 25-வது படம் ஆகும்.
இதுகுறித்து ஜி.வி.பிரகாஷ்குமார் கூறும்போது, "இந்த ஆண்டு எனக்கு ராசியான ஆண்டாகவே அமைந்துள்ளது. விரைவில் 'கிங்க்ஸ்டன்' படமும் வெளிவர இருக்கிறது. எனது திரை பயணத்தில் அதிக பட்ஜெட்டில் தயாராகும் படம் இது. இதன் கிராபிக்ஸ் பணிகளுக்காக மட்டுமே பல கோடிகள் செலவிடப்பட்டுள்ளது.
என்னை பொறுத்தவரை சினிமாவில் உழைத்துக்கொண்டே இருக்கவேண்டும். உழைப்புக்கு ஏற்ற பலன் எதிர்பாராத விதமாக நமக்கு கிடைக்கும். நேர்மையாக உழைத்தால் சினிமா கைவிடாது.
என் தேடல் அனைத்தும் இப்போது சினிமாவில் மட்டுமே. நடிப்பிலும், இசையிலும் நிறைய சாதிக்க வேண்டும் என்பதே என் இலக்கு" என ஜி.வி.பிரகாஷ்குமார் கூறினார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- தங்கலான் படத்தின் 'மினிக்கி மினிக்கி’ பாடல் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளது.
- அமரன் படத்தின் ரிலீஸ் தேதியும் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகிறது.
பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள தங்கலான் படத்தின் 'மினிக்கி மினிக்கி' பாடல் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
அதே போல் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள அமரன் படத்தின் ரிலீஸ் தேதியும் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகிறது. இந்த படத்திற்கும் ஜி.வி.பிரகாஷ் தான் இசையமைத்துள்ளார்.
ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள 2 படங்களின் முக்கிய அப்டேட்டும் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகியுள்ளது. அதனையொட்டி ஜி.வி.பிரகாஷ் தனது எக்ஸ் பக்கத்தில் "இன்று தங்கலான் நாள், அமரன் நாள்" என்று உற்சாகத்தோடு பதிவிட்டுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- வயநாடு சகோதர சகோதரிகளின் உயிரிழப்பை கண்டு மனவேதனையில் தவிக்கிறேன்.
- கேரளம் மீண்டு வர துணை நிற்போம்.
கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவு மிகப்பெரிய சம்பவமாக மாறி இருக்கிறது. அதிலும் முண்டக்கை பகுதி மிகப்பெரிய அழிவை சந்தித்து இருக்கிறது.
அங்கிருந்த நூற்றுக்கணக்கான வீடுகள் மண்ணுக்குள் புதைந்துள்ளன. இதனால் அந்த இடத்தில் வீடுகள் தடமே இல்லாமல் காட்சி அளிக்கிறது. அனைத்து இடங்களும் மண்ணாலும், மரங்கள் மற்றும் பாறைகளாலும் மூழ்கடிக்கப்பட்டுள்ளன.
கேரள நிலச்சரிவில் சிக்கி இதுவரை 200 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், வயநாடு நிலச்சரிவு தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவில், "வயநாடு துயரம் , இயற்கை பேரிடர் எனும் போதிலும் என் சகோதர சகோதரிகளின் உயிரிழப்பை கண்டு தாங்க முடியாத மனவேதனையில் செய்வதறியாது தவிக்கிறேன். இந்த நெருக்கடியான சூழ்நிலையில் அரசுத்துறையை சார்ந்த பணியாளர்கள் , தனியார் தொண்டு நிறுவனங்களின் மனிதநேய உள்ளங்கள் செய்து வரும் அளப்பரிய களப்பணிக்கு அனைவரும் நம்மால் முடிந்த உதவிகளை செய்வோம். கேரளம் மீண்டு வர துணை நிற்போம்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.
