search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொரோனா"

    அதே சமயம் இந்தியாவில் இருந்து சவுதி செல்லும் மக்களுக்கு எந்த கட்டுப்பாடுகளும் இதுவரை விதிக்கப்படவில்லை.
    ரியாத்:

    கடந்த 2019-ஆம் ஆண்டு இறுதி முதல் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. பெரும்பாலான நாடுகளில் தடுப்பூசி அறிமுகத்திற்கு வந்த பிறகு கொரோனா கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளது. இருப்பினும் ஒரு சில நாடுகளில் மட்டும் கொரோனா தாக்கம் மீண்டும் அதிகரித்து வருகிறது.

    இந்நிலையில் சவுதி அரேபியாவில் தற்போது மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது. தினசரி தொற்று விகிதம் கடந்த சில வாரங்களாக உயர்ந்து வர்கிறது. இதையடுத்து சவுதி அரேபிய மக்கள் இந்தியா உள்ளிட்ட 16 நாடுகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இதன்படி, இந்தியா, லெபனான், சிரியா, துருக்கி, ஈரான், ஆப்கானிஸ்தான், யேமன், சோமாலியா, எத்தியோப்ப்யா, காங்கோ குடியரசு, லிபியா, இந்தோனேசியா, வியட்நாம், ஆர்மெனியா, பெலாரஸ், வெனிசுலா ஆகிய நாடுகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    அதே சமயம் இந்தியாவில் இருந்து சவுதி செல்லும் மக்களுக்கு எந்த கட்டுப்பாடுகளும் இதுவரை விதிக்கப்படவில்லை.

    மேலும் உலக நாடுகளில் பரவி வரும் குரங்கம்மை வைரஸ் குறித்து கண்காணித்து வருவதாகவும் சவுதி அரசு தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து அந்நாட்டு அரசு, ‘தற்போது வரை குரங்கம்மை பரவல் மனிதர்களிடையே மிக குறைந்த அளவிலேயே இருக்கிறது. அதனால் பெருந்தொற்றாக பரவும் வாய்ப்பு குறைவு. இருப்பினும் அதன் நிலைமை குறித்து கண்காணித்து வருகிறோம்’ என கூறியுள்ளது.
    நாடு முழுவதும் 200 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. கொரோனா ஏற்படுத்திய பாதிப்பில் இருந்து மீண்டு வரும் இந்தியா, உலகின் அதிவேகமாக வளர்ச்சிபெறும் நாடுகளில் ஒன்றாக இருக்கிறது என கூறினார்.
    புதுடெல்லி:

    கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் 11ந் தேதி  முதல் நடப்பாண்டு பிப்ரவரி 28ந் தேதி வரை கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு பெற்றோர்கள் இருவரையோ, பெற்றோரில் ஒருவரையோ அல்லது பாதுகாவலரையோ அல்லது தத்தெடுத்த பெற்றோர்களையோ இழந்த குழந்தைகளுக்கு அரசு ஆதரவளிப்பதற்காக குழந்தைகளுக்கான பி.எம். கேர்ஸ் திட்டம், கடந்த ஆண்டு மே 29ந் தேதி பிரதமரால் தொடங்கி வைக்கப் பட்டது. 

    கொரோனாவால் அனாதையான குழந்தைகளின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய அவர்களுக்கு உறைவிட வசதி அளித்தல், கல்வி உதவித் தொகை வழங்குதல், 18 முதல் 23 வயது வரை ரூ. 10 லட்சம் நிதி உதவி அளித்தல் மற்றும் மருத்துவ காப்பீடு மூலம் அவர்களது ஆரோக்கியத்தை உறுதி செய்தல் முதலியவை இந்தத் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படுகின்றன.

    இந்நிலையில், பி.எம். கேர்ஸ் திட்டத்தின் கீழ் கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் ரூ.4000 அடிப்படை உதவித்தொகையை பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி மூலம் வழங்கி தொடங்கிவைத்தார். மேலும் பெற்றோரை இழந்த  குழந்தைகள் உயர்கல்வி பயில்வதற்காக கல்வி கடன் வாங்க விரும்பினால், அவர்களுக்கு ‘பிம்.எம். கேர்ஸ்’ உதவி செய்யும் என  தெரிவித்துள்ளார்.

    மேலும் கொரோனா சூழலை இந்தியா கையாண்டவிதம் குறித்து பேசிய அவர், ‘கொரோனாவின்போது இந்தியா பிரச்சனையாக  இருக்கவில்லை. தீர்வை கொடுக்கும் நாடாக இருந்தது. நாம் உலக நாடுகளுக்கு மருத்துவ உதவி வழங்கி வந்தோம். தடுப்பூசிகளை உலகில் உள்ள பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தோம். நாடு முழுவதும் 200 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. கொரோனா ஏற்படுத்திய பாதிப்பில் இருந்து மீண்டு வரும் இந்தியா, உலகின் அதிவேகமாக வளர்ச்சிபெறும் நாடுகளில் ஒன்றாக இருக்கிறது' என கூறினார்.
    நேற்று ஒரே நாளில் புதிதாக 89 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
    சென்னை:

    தமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது.  

    கடந்த 24 மணி நேர கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து நேற்றிரவு மாநில மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- 

    தமிழகத்தில் புதிதாக 12 ஆயிரத்து 824 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 89 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 34,55,376 உயர்ந்துள்ளது.

    தமிழகத்தில் 74-வது நாளாக எந்த மாவட்டத்திலும் உயிரிழப்பு இல்லை. இதுவரை 38 ஆயிரத்து 25 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். நேற்றைய நிலவரப்படி 493 பேர் கொரோனா நோய்க்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 44 பேர் கொரோனா நோயில் இருந்து குணமடைந்து நேற்று 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டுள்ளனர்.

    இதுவரை தமிழகத்தில் 34 லட்சத்து 16 ஆயிரத்து 858 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 15 ஆம் தேதி நிலவரப்படி 22 ஆக இருந்த கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 100-ஐ எட்டியுள்ளது.
    சென்னை:

    தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கட்டுக்குள் இருந்த கொரோனா பரவல் தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

    குறிப்பாக சென்னை அண்ணா பல்கலைக்கழகம், ஐஐடி வளாகம் போன்ற இடங்களில் மாணவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. 

    இதனால் சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களிலும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

    இதுகுறித்து மாவட்ட நிர்வாகங்களுக்கு அவர் எழுதிய கடிதத்தில் கூறியதாவது:-

    தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 15 ஆம் தேதி நிலவரப்படி 22 ஆக இருந்த கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 100-ஐ எட்டியுள்ளது. இதனால் அடுத்தடுத்த நாட்களில், குறிப்பாக வார இறுதி நாட்களில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். 

    பொதுமக்கள் கூடும் இடங்களில் நிலையான வழிகாட்டு நெறிமுறைகள், தனிமனித இடைவெளி, முகக்கவசம் அணிதல் போன்ற உத்தரவுகள் கடைபிடிக்கப்படுவதை சுகாதாரத்துறை அதிகாரிகள் உறுதி செய்யவேண்டும். மேலும் மொத்த பரிசோதனையின் முடிவில் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 5 சதவீதத்தை தாண்டும் பட்சத்தில் பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும்.

    இவ்வாறு ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
    சென்னையில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 44-ல் இருந்து 59-ஆக அதிகரித்துள்ளது.
    தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது. கடந்த சில நாட்களாகவே கொரோனா தொற்று பாதிப்பு 100-க்கும் கீழ் இருந்து வந்தது.

    இந்நிலையில், தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 98-ல் இருந்து 139-ஆக அதிகரித்துள்ளது.

    சென்னையில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 44-ல் இருந்து 59-ஆக அதிகரித்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 46-ல் இருந்து 58-ஆக அதிகரித்துள்ளது.

    கொரோனாவுக்கு சிக்சை பெறுவோர் எண்ணிக்கை 542-ல் இருந்து 629-ஆக உயர்ந்துள்ளது. மேலும் 52 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

    இதையும் படியுங்கள்.. வணிக கியாஸ் சிலிண்டர் விலை 135 ரூபாய் குறைப்பு
    சோனியா காந்தி விரைந்து குணமடைய பிரதமர் மோடி மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் தனது டுவிட்டர் பக்கம் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
    காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, கடந்த சில நாட்களாக தொடர்ந்து காங்கிரஸ் தலைவர்களை சந்தித்து உரையாடி வரும் நிலையில், நேற்று அவருக்கு  லேசான காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து எடுக்கப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதியானது.

    இதையடுத்து தனிமைப்படுத்திகொண்ட அவருக்கு மருத்துவ சிகிச்சை வழங்கப்படுகிறது.

    இந்நிலையில், சோனியா காந்தி விரைந்து குணமடைய பிரதமர் மோடி மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் தனது டுவிட்டர் பக்கம் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில், " கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி விரைந்து குணமடைய வேண்டும்" என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதேபோல், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில், " கொரோனா தொற்று உறுதி செய்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பூரண குணமடைய வாழ்த்துகிறேன். தொற்றுநோய் இன்னும் நீங்காததால் பொது வாழ்வில் உள்ள அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்குமறு கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார்.

    இதையும் படியுங்கள்.. பாடகர் கே.கே. மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
    ×