search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "TAHDCO"

    • பழங்குடியின வகுப்பை சார்ந்த நபர்களுக்கு தாட்கோ மூலம் குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படும்.
    • அலுவலக மாநில திட்ட மேலாளரை (திட்டங்கள்) செல்போன் எண்ணில் 7358489990 தொடர்பு கொள்ளலாம்

    திருப்பூர் : 

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் மூலம் தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தை சார்ந்தவர்கள் பெட்ரோல் நிலையம் அமைக்க தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம்(தாட்கோ) சார்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின வகுப்பை சார்ந்த நபர்களுக்கு தாட்கோ மூலம் குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படும்.

    இத்திட்டத்தில் பயன்பெற www.petrolpumpdealerchayan.in என்ற இணையதளத்தில் 18 வயது முதல் 60 வயது உள்ள ஆண்/பெண் அனைவரும் 27.9.2023க்குள் விண்ணப்பிக்கலாம். பெட்ரோலியம் நிறுவனத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களுக்கு அவர்கள் முதல் முறையாக கொள்முதல் செய்யும் பெட்ரோல்- டீசல் (ஒரு டேங்கர்) தொகையினை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தைச் சார்ந்தவர்களுக்கு குறைந்த வட்டியில் தாட்கோ மூலமாக கடனாக வழங்கப்படும். பாரத் பெட்ரோலியம் லிமிடெட் மூலமாக தேர்ந்தெடுக்கப்படும் தகுதி வாய்ந்த விண்ணப்பத்தாரர்கள் தாட்கோ தலைமை அலுவலக மாநில திட்ட மேலாளரை (திட்டங்கள்) செல்போன் எண்ணில் 7358489990 தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.

    மேலும் விபரங்களுக்கு மாவட்ட மேலாளர் அலுவலகம், தாட்கோ, அறை எண்:501(ம) 503, 5 வது தளம், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், பல்லடம் ரோடு, திருப்பூர்-641 604 என்ற முகவரியிலும், 94450 29552, 0421-2971112 என்ற செல்போன்-தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.   

    ×