என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Tamaka"
- பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு துணை நிற்க வேண்டும். அவர்களுக்கு நஷ்டஈடு தர வேண்டும்.
- தமிழகத்தில் வெற்றியை நிர்ணயிக்கும் முக்கிய சக்தியாக த.மா.கா விளங்கும்.
திண்டுக்கல்:
திண்டுக்கல்லில் இன்று த.மா.கா. நிர்வாகி இல்ல திருமண விழாவில் அக்கட்சியின் மாநில தலைவர் ஜி.கே.வாசன் கலந்து கொண்டார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
எதிரிகளை வீழ்த்த முக்கியமான கட்சிகளுடன் கூட்டணி அமைய வேண்டும். ஆனால் இந்தியா கூட்டணி என்பது முரண்பாடான கட்சிகள் அமைத்த கூட்டணியாக உள்ளது. பல மாநிலங்களில் அந்த கட்சிகளுக்கிடையே ஒற்றுமை இல்லை என்பது தெளிவாக தெரிகிறது. இந்திய அளவில் பா.ஜ.க.வும் தமிழக அளவில் அ.தி.மு.க.வும் மிகப்பெரிய கட்சியாக உள்ளது.
பா.ஜ.க., அ.தி.மு.க., பா.ம.க., தே.மு.தி.க. ஆகிய கட்சிகளுடன் த.மா.கா. நட்புடன் இருந்து வருகிறது. நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் த.மா.கா. முக்கிய சக்தியாக இருக்கும். தற்போது வரை த.மா.கா. எந்த கூட்டணியிலும் இல்லை.
கடந்த சில வாரங்களாக தமிழகத்தில் பெய்து வரும் தொடர் மழையினால் டெல்டா உள்பட பல்வேறு மாவட்டங்களில் விவசாய நிலங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு துணை நிற்க வேண்டும். அவர்களுக்கு நஷ்டஈடு தர வேண்டும்.
விவசாயிகளின் நியாயமான போராட்டத்தின் காரணமாக அவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை அரசு வாபஸ் பெற வேண்டும். மழையால் தமிழகத்தில் பொதுமக்கள் காய்ச்சல் மற்றும் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு அரசு தேவையான மருத்துவ உதவிகளை செய்ய வேண்டும்.
பாராளுமன்ற தேர்தல் விரைவில் வர உள்ளது. 4 மாதங்களில் எங்களது பிரசாரம் தொடங்கும். மக்களுடன் த.மா.கா. அதிக தொடர்பை ஏற்படுத்தி வருகிறது. நிர்வாகிகள் மக்களிடம் நேரடியாக சென்று பேச மாவட்டம் தோறும் பயணம் மேற்கொண்டு வருகிறேன்.
பல மாவட்டங்களில் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் வெற்றியை நிர்ணயிக்கும் முக்கிய சக்தியாக த.மா.கா விளங்கும். ஜனவரி மாதம் கூட்டணி முடிவை அறிவிப்போம்
இவ்வாறு அவர் கூறினார்.