search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tamarind trees"

    • நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்து சார்பில் மடுகரை பகுதியில் டிராக்டர்கள் மூலம் குப்பைகள் சேகரிக்கப்பட்டு மடுகரை கரியமாணிக்கம் செல்லும் சாலையின் ஓரத்தில் மலைபோல் குவிக்கப்பட்டுள்ளது.
    • குப்பைகள் தீ வைத்து கொளுத்தி விடப்படுவதனால் மரங்கள் எரிந்து சாம்பலாவதோடு அருகருகே உள்ள மரங்களும் பட்டு போய் விடுகின்றது.

    புதுச்சேரி:

    நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்து சார்பில் மடுகரை பகுதியில் டிராக்டர்கள் மூலம் குப்பைகள் சேகரிக்கப்பட்டு மடுகரை கரியமாணிக்கம் செல்லும் சாலையின் ஓரத்தில் மலைபோல் குவிக்கப்பட்டுள்ளது.

    இந்த குப்பைகள் தினந்தோறும் தீ வைத்து கொளுத்தப்பட்டு அப்பகுதியே புகைமண்டலமாக காட்சி தருகின்றது.

    மடுகரையிலிருந்து தவளகுப்பம் வரை சாலையின் இரு புறங்களிலும் புன்னை புளியமரம், வேப்பமரம், ஆலமரம் உள்ளிட்ட பல்வேறு மரங்கள் பொதுப்பணித்துறை மூலம் பராமரிக்கப்பட்டு வருகின்றது.

    குப்பைகள் தீ வைத்து கொளுத்தி விடப்படுவதனால் மரங்கள் எரிந்து சாம்பலாவதோடு அருகருகே உள்ள மரங்களும் பட்டு போய் விடுகின்றது.

    எனவே கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மரங்களை பார்வையிட்டு நடவடிக்கை எடுத்தால் ஏனைய மரங்களும் பட்டு போகாமல் தடுக்க முடியும்.

    சேகரிக்கப்படும் குப்பைகளை பஸ் செல்லும் சாலையின் ஒரு பகுதியில் கொட்டாமல் அதற்கென்று தனியான ஒரு இடத்தை தேர்வு செய்து அவ்விடத்தில் கொட்டினால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதை தவிர்க்க முடியும் என்று பொதுமக்கள் தொகுதி எம்.எல்.ஏ. ராஜவேலுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

    ×