என் மலர்
நீங்கள் தேடியது "Tamil Nadu Athletics Team"
- தமிழ்நாடு 14 தங்கம், 15 வெள்ளி, 10 வெண்கலம் என 49 பதக்கங்களுடன் 8-வது இடத்தை பிடித்தது.
- வித்யா மூன்று தங்கப்பதக்கங்களை கைப்பற்றினார்.
கோவா:
37-வது தேசிய விளையாட்டு போட்டி கோவாவில் நடந்தது. இதில் தமிழ்நாடு 14 தங்கம், 15 வெள்ளி, 10 வெண்கலம் என 49 பதக்கங்களுடன் 8-வது இடத்தை பிடித்தது. இதில் தமிழக தடகள அணி 9 தங்கம், 4 வெள்ளி, 4 வெண்கலம் என 17 பதக்கங்களை பெற்றது. வித்யா மூன்று தங்கப்பதக்கங்களை கைப்பற்றினார்.
தமிழக அணி 114.5 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தை பிடித்தது. சர்வீசஸ் 117 புள்ளிகளுடன் முதல் இடத்தை பிடித்தது. தமிழக அணி 2.5 புள்ளிகள் வித்தியாசத்தில் முதலிடத்தை தவறவிட்டது. பதக்கம் வென்ற வீரர்-வீராங்கனைகளுக்கு தமிழ்நாடு தடகள சங்க செயலாளர் சி.லதா பாராட்டும் வாழ்த்தும் தெரிவித்தார்.
- 38-வது தேசிய விளையாட்டு போட்டி உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் நடைபெற்று வருகிறது.
- நேற்றுடன் தடகள போட்டிகள் நிறைவு பெற்றன.
டேராடூன்:
38-வது தேசிய விளையாட்டு போட்டி உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் நடைபெற்று வருகிறது. நேற்றைய போட்டியில் தடகளத்தில் தமிழக வீராங்கனைகள் 1 தங்கம், 2 வெள்ளி பதக்கம் பெற்றனர். 400 மீட்டா் தடை தாண்டும் ஓட்டத்தில் வித்யா 58.11 விநாடிகளில் கடந்து தங்கப்பதக்கமும், ஸ்ரீவா் தனி 59.86 விநாடிகளில் கடந்து வெள்ளியும் வென்றனர். உயரம் தாண்டுதலில் கோபிகாவுக்கு (1.78 மீட்டர்) வெள்ளிப்பதக்கம் கிடைத்தது.
நேற்றுடன் தடகள போட்டிகள் நிறைவு பெற்றன. தடகளத்தில் தமிழகத்துக்கு 5 தங்கம், 10 வெள்ளி, 4 வெண்கலம் ஆக மொத்தம் 19 பதக்கம் கிடைத்தது.
ஆதர்ஷ்ராம் (உயரம் தாண்டுதல்), பவித்ரா (போல் வால்ட்), பிரவீன் சித்ரவேல் (டிரிபிள் ஜம்ப்), ஆகியோர் தங்கம் வென்று இருந்தனர். ஆண்களுக்கான 4X400 மீட்டர் தொடர் ஓட்டத்திலும் தங்கம் கிடைத்தது.
ரீகன், பரணிகா (போல்வால்ட்), வித்யா (400 மீட்டர் ஓட்டம்), மணவ் 110 மீட்டர் (தடை தாண்டுதல்), ஸ்ரீராம் (நீளம் தாண்டுதல்), ராகுல் (200 மீட்டர்), சலாகுதீன் (டிரிபிள் ஜம்ப்) ஆகியோர் வெள்ளிப் பெற்று இருந்தனர். ஆண்களுக்கான 4X100 மீட்டர் தொடர் ஆட்டத்திலும் வெள்ளிப்பதக்கம் கிடைத்தது.
கிரிதரணி (100 மீட்டர் ஓட்டம்), நித்யா (100 மீட்டர் தடை தாண்டுதல்) நிதின் (200 மீட்டர்), தீபிகா (ஹெப்டத்லான்) ஆகியோர் வெண்கலப் பதக்கம் பெற்று இருந்தனர்.
நேற்றைய போட்டி முடிவில் தமிழ்நாடு 24 தங்கம், 30 வெள்ளி, 30 வெண்கலம் ஆக மொத்தம் 84 பதக்கம் பெற்று பதக்கப்பட்டியலில் தொடர்ந்து 6-வது இடத்தில் நீடிக்கிறது.
சா்வீசஸ் 65 தங்கம், 24 வெள்ளி, 25 வெண்கலம் என 114 பதக்கங்களுடன் முதல் இடத்திலும், மராட்டியம் 50 தங்கம், 62 வெள்ளி, 63 வெண்கலம் என 175 பதக்கங்களுடன் 2-வது இடத்திலும், அரியானா 39 தங்கம், 45 வெள்ளி, 56 வெண்கலம் என 140 பதக்கங்களுடன் 3-வது இடத்திலும் உள்ளன.