search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tamil Nadu BJP leader"

    • பா.ஜ.க. உட்கட்சி தேர்தல் நாடு முழுவதும் நடந்து வருகிறது.
    • டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன் போட்டி.

    சென்னை:

    பா.ஜ.க. உட்கட்சி தேர்தல் நாடு முழுவதும் நடந்து வருகிறது. அதன்படி தமிழ்நாட்டில் உட்கட்சி தேர்தல் நடத்தப்பட்டு இணை நிர்வாகிகள், மண்டல நிர்வாகிகள் தேர்தல் நடத்தப்பட்டு புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுவிட்டனர்.

    மாவட்ட தலைவர்களும் தேர்வு செய்யப்பட்டு 33 மாவட்டங்களுக்கு அறிவிக்கப்பட்டனர். மீதமுள்ள 33 மாவட்ட தலைவர்களும் புதிய மாநில தலைவர் அறவிக்கப்பட்ட பிறகு அறிவிக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.


    புதிய மாநில தலைவர் வருகிற 26-ந்தேதி (ஞாயிறு) அறிவிக்கப்படுவார் என்று கட்சி வட்டாரத்தில் பேசப்படுகிறது. மாநில தலைவர் பதவிக்கு டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. ஆகியோர் முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது.

    ஆனால் வருகிற 2026 தேர்தலை கருத்தில் கொண்டு வலிமையான தலைமை வேண்டும் என்று எதிர்பார்ப்பதால் மீண்டும் அண்ணாமலையே தலைவராக நியமிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கட்சியின் மூத்த நிர்வாகிகள் தெரிவித்தார்கள்.

    திமுக தலைவர் கருணாநிதியின் 95-வது பிறந்த நாளை முன்னிட்டு பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தனது பிறந்தநாள் வாழ்த்தை தெரிவித்துள்ளாா். #Karunanidhi #Birthday #TamilisaiSoundararajan
    சென்னை:

    தி.மு.க. தலைவர் கருணாநிதி தனது 95-வது பிறந்தநாளை நாளை கொண்டாடுகிறார். தி.மு.க. தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான மு.கருணாநிதி வயது முதிர்வு காரணமாக தீவிர அரசியலில் இருந்து விலகி, கோபாலபுரம் இல்லத்தில் ஓய்வெடுத்து வருகிறார்.

    ஒவ்வொரு ஆண்டும் தன்னுடைய பிறந்தநாளை அவர் தொண்டர்களுடன் உற்சாகமாக கொண்டாடுவது வழக்கம். தற்போது அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு முக்கிய பிரமுகர்களை தவிர வேறு யாரும் சந்திக்க அனுமதிக்கப்படுவதில்லை. அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சி தலைவா்கள் தங்களுடைய வாழ்த்துக்களை  தொிவித்து வருகின்றனா்.



    இதைத்தொடா்ந்து தமிழக பாஜக மாநில தலைவா் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள பிறந்தநாள் வாழ்த்து செய்தியில்

    ‘தமிழக அரசியலில் மூத்த தலைவர் கருணாநிதி பல்லாண்டு, பல்லாண்டு நீடூழி, உடல்நலத்துடன் வாழ்ந்து மக்கள் பணி செய்ய இறைவனை வணங்குகிறேன். தமிழக பா.ஜ.க. சார்பில் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.  #Karunanidhi #Birthday #TamilisaiSoundararajan #Tamilnews 
    ×