என் மலர்
முகப்பு » Tamil Nadu political parties
நீங்கள் தேடியது "Tamil Nadu political parties"
- பா.ஜ.க.வின் தலைவர் அண்ணாமலை அ.தி.மு.க.விற்கு எதிராக கருத்துக்கள் கூறி வந்தார்
- அண்ணாமலையை தலைமை பொறுப்பில் இருந்து நீக்குமாறு அ.தி.மு.க.வினர் கூறி வந்தனர்
ஆளும் பா.ஜ.க.வை உள்ளடக்கிய தேசிய ஜனநாயக கூட்டணியில் தமிழ்நாட்டின் அ.தி.மு.க.வும் அங்கம் வகித்தது.
கடந்த சில மாதங்களாக அ.தி.மு.க.விற்கும் பா.ஜ.க.விற்கும் உரசல் நிலவி வந்தது.
பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை கூறி வந்த சில கருத்துக்கள் அ.தி.மு.க.வினரை ஆத்திரமடைய செய்தது. அண்ணாமலையை தமிழக பா.ஜ.க. தலைமை பொறுப்பில் இருந்து நீக்க அ.தி.மு.க.வினர் கோரி வந்தனர்.
இந்நிலையில் பா.ஜ.க.விற்கும் அ.தி.மு.க.விற்கும் இடையே நிலவி வந்த உறவு முறிந்தது என அக்கட்சி சார்பில் அதிகாரபூர்வமாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டணி முறிந்ததாக இக்கட்சியின் முக்கிய தலைவரான கே.பி. முனுசாமி நிருபர்களிடம் இன்று மாலை தெரிவித்தார்.
×
X