என் மலர்
நீங்கள் தேடியது "Tamil Sangh Award"
- புதுவை தமிழ்ச் சங்கம் சார்பில் 75-வது இந்திய விடுதலை நாள் விழா, வ.உ.சி 150-வது பிறந்த நாள் விழா நடைபெற்றது.
- இனியொரு விதி செய்வோம் என்ற பொருளில் நடைபெற்ற உரையரங்கில் சிங்கப்பூர் தமிழ் இலக்கியகளம் நிறுவனர் ரத்தின வேங்கடேசன் சிறப்புரையாற்றினார்.
புதுச்சேரி:
புதுவை தமிழ்ச் சங்கம் சார்பில் 75-வது இந்திய விடுதலை நாள் விழா, வ.உ.சி 150-வது பிறந்த நாள் விழா நடைபெற்றது. சங்க தலைவர் முத்து தலைமை தாங்கினார். செயலாளர் சீனு மோகன் தாசு வரவேற்றார். துணை தலைர்கள் ஆதிகேசவன், பாலசுப்பிரமணியன், பொருளாளர் திரு–நாவுக்கரசு, துணை செயலாளர் அருள்செல்வம் முன்னிலை வகித்தனர். விழாவில் உசேன் தலைமையில் பாவரங்கம் நடந்தது.
இனியொரு விதி செய்வோம் என்ற பொருளில் நடைபெற்ற உரையரங்கில் சிங்கப்பூர் தமிழ் இலக்கியகளம் நிறுவனர் ரத்தின வேங்கடேசன் சிறப்புரையாற்றினார். பிரான்சு கண்ணதாசன் கழக தலைவர் ராஜா குமாரராஜா வாழ்த்துரை வழங்கினார்.
முன்னாள் எம்.எல்.ஏ. இளங்கோ, மூத்த குடிமக்கள் நலவாழ்வு சங்க தலைவர் தேவநாதன், ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரிகள் சங்க செயலர் இளங்கோவன், கவிஞர் பாஸ்கரன், ஓய்வுபெற்ற அரசு இளநிலை கணக்கு அதிகாரி அய்யன் காளி மனோகர் ஆகியோருக்கு தமிழ்ச் சங்க விருது வழங்கப்பட்டது. முடிவில் ஆட்சிக்குழு உறுப்பினர் சீனு கந்தகுமார் நன்றி கூறினார்.